Cinema Entertainment News

சானியா மிர்சாவை விவாகரத்து செய்துவிட்டு, பாகிஸ்தான் நடிகையை 3வது திருமணம் செய்து சோயிப்!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. எத்தனை வதந்திகள் வந்தாலும், அதற்கு அவர்கள் இருவருமே எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்து வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சானியா மிர்சாவின் விவாகரத்து பற்றி மீண்டும் வதந்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இதற்கு மறைமுறைமாக பதிலளிக்கும் வகையில், சானியா மிர்சா தனது இன்ஸ்டாவில் அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு இடுகையை பகிர்ந்து கொண்டார்.




அதைத் தொடர்ந்து ஜனவரி 20 ஆம் தேதி, அதாவது நேற்று  சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாவில் பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்த போட்டோக்களை வெளியிட்டு, அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, நடிகை சனாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண போட்டோக்களை பகிர்ந்து கொண்டதோடு, தனது இன்ஸ்டா பெயரையும் சனா சோயிப் மாலிக் என்று மாற்றியுள்ளார்.

தற்போது சோயிப் மாலிக்கிற்கு வயது 41 மற்றும் இது இவருக்கு மூன்றாவது திருமணம். இப்போது சோயிப் மாலிக்கின் திருமண வாழ்க்கைக் குறித்து காண்போம்.




1. சோயிப் மாலிக் மற்றும் ஆயிஷா சித்திக் (2002 முதல் 2010 வரை) கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் சானியா மிர்சாவை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்வதற்கு முன்பு, இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்பவரை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விஷயமானது சானியாவை திருமணம் செய்யும் தகவல் பரவிய போது வெளிவந்தது. அப்போது இதை சோயிப் மறுத்ததோடு, ஆயிஷா சித்திக் தன்னை ஏமாற்றியதாக கூறி புகார் அளித்தார். ஆனால் ஆயிஷா சித்திக் சோயிப்புடன் நடந்த திருமண வீடியோவை ஆதாரமாக காட்டியிருந்தார். எனவே சானியாவை திருமணம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு 2010-ல் ஆயிஷாவை விவாகரத்து செய்ததோடு, அவருக்கு 15 கோடி ஜீவனாம்சமாக கொடுத்துள்ளார்.

2. சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சா (2010 முதல் 2024 வரை) அடுத்ததாக, 2010 ஆம் ஆண்டு சோயிப் மாலிக் சானியா மிர்சாவை ஹைதராபாத்தில் இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் வலீமா விழா நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் இவர்கள் தான் தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு 8 ஆண்டுளுக்கு பின் 2018-ல் இசான் மிர்சா மாலிக் என்ற மகன் பிறந்தார். ஆனால் சோயிப்பும், சானியாவும் பிரிந்து தனித்தனியாகவே வாழ்ந்து வந்தனர். இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இல்லை என்ற வதந்திகள் கூட அவ்வப்போது பரவின.




2023 ஆம் ஆண்டில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் டேட்டிங்கில் இருப்பதாக வதந்திகள் பரவின. அதேப் போல் சோயிப்புக்கும், சானியாவுக்கும் விவாகரத்து நடைபெறப்போவதாகவும் வதந்திகள் பரவின. ஆரம்ப காலத்தில் இதற்கு இவர்கள் இருவருமே எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்தனர். ஆனால் சமீபத்திய தகவல்களின் படி, சானியாவும், சோயிப்பும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

3. சோயிப் மாலிக் மற்றும் சனா ஜாவேத் (2024 முதல் இன்று வரை) சானியாவை விவாகரத்து செய்த கையோடு, சோயிப் மாலிக் ஜனவரி 20 ஆம் தேதி சனாவுடன் நடந்த திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இது இவரது 3 ஆவது திருமணம் மற்றும் சனாவிற்கு இது இரண்டாவது திருமணம். நடிகை சனா பாடகர் உமன் ஜஸ்வால் என்பவரை 2020 முதல் 2023 வரை திருமணம் செய்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!