Entertainment News

மெகா இணைப்பு உருவாக போகிறதா? அம்பானியுடன் கை கோர்க்க துடிக்கும் வால்ட் டிஸ்னி.

உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி, கடும் வர்த்தக நெருக்கடியில் இருக்கும் காரணத்தால் இந்தியாவின் வர்த்தகத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டுப் பல முன்னணி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடைசியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு விற்பனை செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.




Jio Offers Free Disney+ Hotstar VIP Subscription to Its Prepaid Subscribers | Technology News

இதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இணைப்பு குறித்து இறுதி முடிவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது மீடியா மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகத்தை இணைக்கும் திட்டத்திலும் ஈடுபட்டு உள்ளது.




இந்த இணைப்பு வெற்றி அடைந்தால் வால்ட் டிஸ்னி இந்தியா வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆதிக்கம் பெறும் அளவிலான பங்குகளைப் பெற உள்ளது. இதற்காக ரிலையன்ஸ் வாய்காம் 18 கீழ் தனிக் கிளை நிறுவனத்தை உருவாக்கி பங்கு பரிமாற்றம் மற்றும் ரிலையன்ஸ் ஆதிக்கம் பெறும் அளவுக்குப் பங்குகளைப் பெற கூடுதல் நிதி பரிமாற்றம் வாயிலாக இந்த இணைப்பை முடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த இணைக்கப்பட்ட நிறுவனத்தில் ரிலையன்ஸ் 51 சதவீத பங்குகளும், டிஸ்னி 49 சதவீத பங்குகளும் கொண்டு இருக்கும். மேலும் இணைப்பிற்குப் பின்பு 1-1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரு தரப்பில் இருந்தும் வரவில்லை.




ரிலையன்ஸ் வாய்காம் 18 மற்றும் வால்ட் டிஸ்னி இணைக்கப்பட்டால் இக்கூட்டணியில் சுமார் 115 டிவி சேனல்கள் இருக்கும் (ஸ்டார் இந்தியாவின் 77 சேனல்கள், வாய்கம் 18 கீழ் 38 சேனல்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா போன்ற இரு ஸ்ட்ரீமிங் சேனல், 2 லட்சம் மணிநேரத்திற்கான கன்டென்ட் ஆகியவை இக்கூட்டணியில் இருக்கும்.

2023 ஆம் நிதியாண்டில் ஸ்டார் இந்தியா 19,857 கோடி ரூபாய் வருமானமும், வாய்காம் 18 வருவாய் 4554 கோடி ரூபாய் வருமானமும், நோவி டிஜிட்டல் (டிஸ்னி + ஹாட்ஸ்டார்) 4,341 கோடி ரூபாய் வருமானமும் கொண்டு உள்ளது. வாய்காம் 18 நிறுவனத்தில் ரிலையன்ஸ்-க்கு அடுத்தப்படியாக Bodhi Tree நிறுவனம் 15.97 சதவீத பங்குகளைக் கொண்டு இருக்கும் வேளையில் இக்கூட்டணி நிறுவனத்தின் நிர்வாகத்தில் இடத்தைப் பெறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!