gowri panchangam Sprituality

பல நூறு ஆண்டுகளாக தானாய் எரியும் கோவில் தீபம் – எங்கே?

இறைவனின் ஆற்றலை முழுமையாக அறிந்தவர்கள் இங்கு எவருமில்லை. இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில், எந்த ஒரு விஷயத்தையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு  வந்து விட்டோம். அப்படிப்பட்ட விஞ்ஞானத்தால் கூட விடையறிய முடியாத விஷயங்கள் இவ்வுலகத்தில் எவ்வளவோ இருக்கின்றன. அப்படி விஞ்ஞானமே ஆன்மிக சக்திக்கு தலை வணங்கிச் சென்ற இடம் தான் ஜவாலா ஜி ஆலயம். இக்கோவிலின் தெய்வம் ஜுவாலா தேவி, அதனால் இது ஜுவாலா ஜி கோவில் என்றழைக்கப் படுகிறது.




புராணக் காலத்தில் தன் கணவனான சிவ பெருமானை, தன் தந்தை தட்சன் அவமானப்படுத்தியதால் மனமுடைந்த பராசக்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், அவளின் உடலைத் தூக்கிக் கொண்டு “ருத்ர” தாண்டவமாடிய சிவ பெருமானை சாந்தப்படுத்த, மகாவிஷ்ணு தன் சக்ராயுதத்தைக் கொண்டு சக்தியின் உடலைப் பல துண்டுகளாகக் வெட்டியதாகவும், அப்போது சக்தியின் நாக்குப் பகுதி இங்கு விழுந்ததாகவும், அதுவே ஜுவாலா ஜி கோவிலாக உருவாகியதாக மதச் சான்றோர்கள் கூறுகிறார்கள்.

இக்கோவிலின் சிறப்பே இக்கோவிலினுள் பல நூற்றாண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் ஜோதி தான். பொதுவாக நெருப்பெரிவதற்கு அதற்கு ஆகுதியாக கட்டையோ,எண்ணெயோ தேவை. ஆனால் இக்கோவிலில் எரிந்துக் கொண்டிருக்கும் ஜோதி அப்படி எந்த தூண்டு பொருளின்றி எரிவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. முகலாய அரசனான அக்பரும் கூட இந்த ஜோதியை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் தோற்று தன் தலைநகர் திரும்பினான்.




Jwala ji lamp

இதைப் பற்றி பிற்காலத்தில் கேள்விப்பட்ட விஞ்ஞானிகள் சிலர் இப்பகுதியில் பூமிக்கடியில் எரிமலைகள் இருக்கலாம் என்றும், இயற்கை எரிவாயுவினால் அத்தீபம் எரிய காரணமாக இருக்கலாம் என்று கூறினார். 1970 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசாங்கம் இப்பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய புவியிலாளர்கள், விஞ்ஞானிகள் கொண்ட ஒரு குழுவை அனுப்பியது. பல காலம் ஆராய்ந்த அக்குழுவினர், இப்பகுதியில் எங்குமே இயற்கை எரிவாயு இருப்பதற்கான அறிகுறியில்லை என்றும், ஆனால் “ஜுவாலா ஜி” கோவிலில் அணையாமல் எரியும் ஜோதிக்கு தங்களால் விஞ்ஞான ரீதியான விடைக் காண முடியவில்லை என்று அறிக்கை அனுப்பியது. இதையும் படிக்கலாமே: சாக்கடையாக மாறிப்போன சோழர் காலத்து கோவில் – எங்கு தெரியுமா ? இறைவனின் ஆற்றல் நிறைந்தது என பக்தர்களால் வணங்கப்படும் இக்கோவில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் கங்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!