Samayalarai

கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு

ஆரோக்கியமான காய்கறிகளில் புடலங்காயும் ஒன்று. சிலபேர் புடலங்காயை வைத்து பொரியல் செய்வார்கள். சிலர் வீடுகளில் புடலங்காய் கூட்டும் செய்வார்கள். ஆனால் அந்தக் கூட்டு கொழகொழவென்று சரியாக வராது.  அப்படி சரியான முறையில் வந்திருந்தால், அதன் ருசியானது குறைவாக இருக்கும். அதாவது கூட்டு தண்ணீர்விட்டு பதத்தில், ‘சல்லுன்னு இருக்கு’ அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா? கூட்டி பக்குவம் தவறி விடும்.

பக்குவம் தவறாமல் சரியான முறையில் புடலங்காய் கூட்டு எப்படி செய்வது பார்த்துவிடலாமா? இந்தக் கூட்டை காரக்குழம்பு சாதத்திற்கு சைட் டிஷாக வைத்து சாப்பிட்டீர்கள் என்றால், மொத்த சாதமும் காலியாகி விடும்!




இந்த முறையில் புடலங்காய் கூட்டு வைத்தால். செம்ம ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

புடலங்காய்- 300 கிராம்

கடலை பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

பாசி பருப்பு – 1 ½ டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 3

பூண்டு இடித்தது 12

சீரகம்- 1 ½ டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி – ¼ டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி – ¼ டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி பொடி – 1/ 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/ 4 டெபிள் ஸ்பூன்

தேங்காய் – 1 மூடி

உப்பு-தேவையான அளவு




செய்முறை விளக்கம் :

  • பச்சை மிளகாய், தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துகொள்ளவும். அதிக நைசாக அரைக்க வேண்டாம்.

  • கடலை பருப்பு, பாசி பருப்பை, மஞ்சள் பொடி, தக்காளி, கருவேப்பில்லை  சேர்த்து வேக வைத்து எடுத்துகொள்ளவும்.

  • தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், வத்தல் சேர்க்கவும், இடித்த பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மீதிம் உள்ள தக்காளி, புடலங்காய் நறுக்கியதை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் போடி சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். கடைசியாக  அவித்த பருப்பை சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும்.  கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு ரெடி.

இறுதியாக கொத்தமல்லி தழை தூவி சுடச்சுட பரிமாறினார்கள் என்றால் நீங்கள் செய்த கூட்டு நிச்சயம் யாருக்கும் பத்தவே பத்தாது. அவ்வளவு சீக்கிரம் காலியாகிவிடும் ஒரு முறை முயற்சி   செய்து பாருங்கள்!




சமையல் டிப்ஸ்:

இந்த இடத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, காயை  அப்படியே தான் வேக வைக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறி விடக்கூடாது. (இது முதல் டிப்ஸ்) புடலங்காய் மேல் பக்கத்தில்  இருக்கும் பட்சத்தில் சரியான பக்குவத்தில் வெந்துவிடும். குக்கரை மூடி 2 விசில் வைத்தால் மட்டும் போதும். பருப்பும் குழையக் கூடாது. புடலங்காயும் குழையக்கூடாது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!