Samayalarai

கருவாட்டுக் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க! டேஸ்ட் சும்மா ஜம்முனு இருக்கும்!

கருவாடு என்று சொன்னவுடனே வாயில் நீர் ஊரூம் கருவாட்டு குழம்பை ஒருமுறை பக்குவமாக இப்படி வைத்துப் பாருங்கள். சிலருக்கு கருவாடு என்றால் கொள்ளை பிரியம். ஆனால் ஒரு சிலருக்கு அதன் வாடை பிடிக்காது. மீன் குழம்புக்கு நிகரான சுவையைக் கொடுக்கும். இதை கெட்டியாக கலர்ஃபுல்லாக தெருவே மணக்க மணக்க கருவாட்டுக் குழம்புசெய்வது எப்படி என்று பார்ப்போம்.




திருக்கை கருவாட்டு குழம்பு / Thirukkai karuvadu kulambu / karuvattu kulambu - YouTube

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய்= 5
ஸ்பூன்
கடுகு= ஒரு ஸ்பூன்
வெந்தயம்= ஒரு ஸ்பூன்
சீரகம்= ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய்= 5
சின்ன வெங்காயம்= கால் கிலோ
தக்காளி = 3
பூண்டு=5
மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
மல்லித்தூள்= மூன்று ஸ்பூன்
புளி = பெரிய எலுமிச்சை அளவு
வெல்லம்= அரை ஸ்பூன்




சொன்னவுடனே வாயில் நீர் ஊரூம் கருவாட்டு குழம்பை ஒருமுறை பக்குவமாக இப்படி வைத்துப் பாருங்கள் | Karuvattu kulambu recipe in Tamil

செய்முறை விளக்கம் 

  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம், சீரகம் பொரிந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளியையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

karuvadu

  • குழம்பு நல்ல கலராக வேண்டுமென்றால் எண்ணெய்  பிரியும் சமயத்தில் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூளை சேர்த்து கலந்து விடவும். பிறகு புளிக்கரைசலையும் சேர்த்து கொதிக்க விடவும்.

  • தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. கருவாட்டுக் குழம்பு கெட்டியாக இருந்தால்தான் நல்ல சுவையைத் தரும்.

  • பின்பு புளி கரைசல் கொதித்தவுடன் கருவாட்டையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் ஊரே மணக்க மணக்க கருவாட்டு குழம்பு ரெடி…

  • அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாதது இந்த கருவாடு தான்..80-85% புரோட்டின் நிறைந்துள்ளது.

  • இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ,பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிகச் சிறந்த தாய்ப்பால் பெருக்கியாக உள்ளது, உடல்நிலை குன்றியவர்கள் மற்றும் சளி காய்ச்சல் உள்ளவர்களுக்கு இதை சமைத்து கொடுக்கலாம் மேலும் கர்ப்பப்பை பிரச்சனை உள்ளவர்களும் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.




குறிப்பு:

கருவாடு எடுத்துக் கொள்ளும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால் மற்றும் தயிர் மோர் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனென்றால் நமது தோலில் வெண்மேகம் போன்ற நோய் வர வழி வகுக்கும். மேலும் ஃபுட் பாய்சனையும் ஏற்படுத்தும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்றும் இந்த கருவாடுகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது இது சளியை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவர்கள்

தோல் அலர்ஜி உள்ளவர்கள் மற்றும் சித்த மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் கருவாடு எடுத்துக்கொள்ளக் கூடாது. இதில் அதிக அளவு உப்பு உள்ளதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் தவிர்க்கவும்.

எனவே வாரத்தில் ஒரு நாட்கள் ஆவது இந்த கருவாட்டு குழம்பை செய்து சாப்பிட்டு அதன் சத்துக்களையும் நம் உடலுக்குள் எடுத்துச் செல்வோம்.




What’s your Reaction?
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!