gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அர்ஜுனன் பற்றி சில தெரியாத சுரஸ்ய தகவல்கள்

அருச்சுனன் அல்லது அர்ஜூனன் மகாபாரத இதிகாசத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவன். இவன் பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் மனதுக்கு மிகவும் நெருங்கிய நண்பன். சிறந்த வில் வீரனான இவன், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான மாணவன். குருட்சேத்திரப் போர் நிகழுவதற்கு முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே பகவத் கீதையாக மகாபாரதத்தில் கூறப்படுகிறது.

அருச்சுனனுக்கு திரெளபதி தவிர்த்து சுபத்திரை, உலுப்பி மற்றும் சித்திராங்கதை எனும் மூன்று மனைவிகளும் அவர்கள் மூலம் பிறந்த அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாகனன் எனும் மூன்று மகன்களும் உண்டு. மேலும் இவனுக்கு திரெளபதி மூலமும் ஒரு மகன் பிறந்தான். அந்த வகையில் அர்ச்சுனனுக்கு நான்கு மகன்கள்.




குரு துரோணாச்சாரியாரின் கையில் இருந்த மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு தமது மாணவர்களைக் கேட்டார். கௌரவர்களும், பாண்டவர்களும் முயற்சி செய்து முடியாத நிலையில் அருச்சுனன் வந்து அம்பு ஒன்றைச் செலுத்தி அம்மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான். மற்றொரு நாள் குருவின் கட்டளைக்கேற்ப மரமொன்றின் அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான் இதை கண்ட அத்தனை பேரும் திகைத்து நின்றனர். பின்பு ஒருநாள் ஆற்றில் குளிக்கச் சென்ற துரோணரின்  காலை கவ்விக்கொண்ட முதலையை . அர்ச்சுனன ஒரே அம்பினால் கொன்று  துரோணரைக் காப்பாற்றினான். துரோணர் அருச்சுனனை மார்போடு  அணைத்து பெருமிதம் அடைந்ததோடு பிரசிரஸ் என்ற வில்லையும்  அதில் அம்பை விடும் மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார்.

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் பலவிதமான போர்க்கலைகளையும் கற்றுக் கொடுத்த துரோணாச்சாரியார் தனது குரு குல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வென்று, அவனைத் தேரில் கட்டி இழுத்து தன்முன் கொண்டு வருவதே சீடர்களான நீங்கள்  எனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்கள் குருவின் தட்சணையை நிறைவேற்ற முடியாமல் மனம் வருந்தி, துருபதனிடம் தோற்று வந்தனர். பின்னர் பாண்டவர்களில் அருச்சுனன் பாஞ்சால தேசம் சென்று துருபதனுடன் போரிட்டு வென்று அவனை தேரில் கட்டி இழுத்து வந்து துரோணாச்சாரியாரின் முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சணையைச் சமர்ப்பித்தான்.




பகவான் கிருஷ்ணர், குருசேத்திரப் போர்க்களத்தில் வைத்து மனம் தளர்ந்து போன அருச்சுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்து போரில் ஈடுபடச்செய்தார். குருச்சேத்திரப் போரில் அருச்சுனன், பகவான் கிருஷ்ணரின் உதவியால் பீஷ்மர், சுசர்மன், ஜயத்திரதன் மற்றும் கர்ணன் போன்ற மாவீரர்களை அழித்ததின் மூலம் பாண்டவர்களை வெற்றி பெறச்செய்தான்.

அருச்சுனனின் மறு பெயர்கள்

தனஞ்சயன்

விஜயன்

பார்த்திபன்

சுவேதவாகனன்

பல்குனன்

கிரீடி

பீபத்சு

சவ்யசச்சின்

ஜிஷ்ணு




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!