gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/அர்ஜுனனுக்கு காண்டீபம் எப்படி கிடைத்தது?

அர்ஜுனன் என்றதும் அவனது கையிலுள்ள வில் நினைவுக்கு வரும். வில்வித்தையில் மிகவும் உயர்ந்தவன் அர்ஜுனன். இந்த வில்லின் பெயர் “காண்டீபம்’. இதனால் அர்ஜுனனுக்கு “காண்டீபன்’ என்ற பெயர் உண்டு. இதைக் கொண்டே அவன் குருஷேத்திர யுத்தத்தில் கவுரவர்களை வென்றான். இந்த காண்டீபம்.

அவனுக்கு கிடைத்தது எப்படி தெரியுமா? சுவேதன் என்ற மகாராஜா சில கோரிக்கைகளுக்காக நூறு ஆண்டுகள் ஒரு யாகம் செய்தான். யாகத்தீயில் நெய் விடப்பட்டது. தீக்கடவுளாகிய அக்னிதேவன் இதைக் குடித்து குடித்து மந்தகதியாகி விட்டான். மந்தநோய் தீர வேண்டு மானால், தனது ஆக்ரோஷத்தை (வெப்பத்தை) யார் மீதாவது காட்ட வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது.




அவன் ஒரு அந்தணன் போல் வேடமிட்டு, அர்ஜுனனிடம் வந்தான். “”அர்ஜுனா! எனக்கு பசிக்கிறது. உணவு தாயேன்,” என்றான். அவன் நெருப்புக்கடவுள் என்பதை அறியாத அர்ஜுன னும் உணவளிப்பதாக வாக்கு கொடுத்து விட்டான். “”எனக்குரிய உணவு காண்டவவனத்தில் இருக்கிறது,” என அந்தணர் கூறவே, அந்த வனத்தைக் கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே அக்னிதேவன் தன்னிடமிருந்த பிரம்ம தனுசுவாகிய காண்டீபத்தையும் ( பிரம்மனால் வழங்கப்பட்ட வில்), வெள்ளைக் குதிரைகள் பூட்டிய அழியாத தேர் ஒன்றையும் கொடுத்தான். கண்ணபிரான் தேர் செலுத்த, அர்ஜுனன் அதில் ஏறிச்சென்றான்.

இந்திரனுக்குச் சொந்தமானது அந்த வனம். அதைக் காக்க அர்ஜுனனுடன் இந்திரன் போராடினான். ஆனால், அவனை வென்ற அர்ஜுனன் அந்தக் காட்டில் இருந்த அரக்கர்களையும் கொன்றான். பின்னர், அந்தணர் வேடத்தில் இருந்த அக்னிதேவன் காண்டவ வனத்திற்குள் நுழைந்தான். தீப்பற்றி எரிந்தது. அந்தக் காட்டை தனக்கு உணவாக்கிக் கொண்டான் அக்னி. இப்படியாக, அர்ஜுனனுக்கு பெயர் சொல்லும்படியான ஒரு ஆயுதம் கிடைத்தது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!