gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள் |அர்ஜுனன் பாசுபத அஸ்திரம் பெற்ற கதை-1

 வியாசர் காமிய வனத்துக்கு வந்தார். பாண்டவர்கள் அவரை வணங்கி வரவேற்றனர். தர்மரிடம் வியாசர், தர்மா ! நடந்ததையே நினைத்துக் கொண்டுடிருப்பதில் பயன் ஏதுமில்லை. ஓரு விஷயம் தெரியுமா ? நடந்து போனதைப் பற்றி பேசுவது பாவம் என்பதை தெரிந்து கொள். எனவே பழைய விஷயங்களை நாம் கிளர வேண்டாம். இனி நடக்க வேண்டியது கவுரவர்களை நீங்கள் ஜெயிக்கவேண்டும் என்பது !

Vijay TV Mahabharatham Arjunan Real Life Style | Cinema News |

அதற்கு என்ன தேவை என்பதை இந்த வனவாச காலத்தில் நீ சிந்திக்க வேண்டும். உன் தம்பி அர்ஜுனன் மிகச் சிறந்த வில்லாளி. ஆனால் இப்போது அவனிடமிருக்கும் அஸ்திரங்களைக் கொண்டு, கவுரவர்களை ஜெயிக்க முடியாது. எனவே அவன் சிவபெருமானை நினைத்து தவமிருந்து பாசுபத அஸ்திரத்தை பெற்று வர வேண்டும். பாசுபதாஸ்திரமே கவுரவர்களை அழிக்கும் ஒரே சாதனம். நீ அர்ஜுனனை கைலாய மலைக்கு அனுப்பு அங்கே அவன் தவமிருந்து அதை பெற்று வரட்டும் என்றார்.




வியாசர் சொன்னபடியே அர்ஜுனன் கயிலாயமலைக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அங்கே, அவன் தியானத்தில் ஆழ்ந்தான். சிவபெருமானோ அவனுக்கு பிரத்யட்சம் ஆகவில்லை. வருத்தப்பட்டான்; அங்கிருந்த முனிவர்கள் அர்ஜுனா ! சிவதரிசனம் என்பது அவ்வளவு எளிதல்ல. முற்றும் துறந்த முனிவர்களான நாங்களே அந்த பரமேஸ்வரனைக் காண்பதற்கு பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறோம்.

அப்படியிருக்க, கிரகஸ்தனான உன் கண்ணுக்கு அவர் தெரிய வேண்டுமானால், நீ பல விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லி தவ விதிமுறைகளை எடுத்துக் கூறினர். எதற்கும் கலங்காத அர்ஜுனன், அவர்கள் சொன்னபடி அக்னி வளர்த்து அதன் நடுவில் நின்றபடி தவம் செய்தான். சிவத்தியானத்தால் அக்னி அவனுக்கு குளிரவே செய்தது. சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் இதே போல அவன் தவமிருந்தான்.




அர்ஜுனன் குந்திதேவிக்கு இந்திரன் மூலம் பிறந்தவன் என்பது முன்கதை. குந்திதேவியார், துர்வாசர் கற்றுக்கொடுத்து சூரிய மந்திரத்தை விளையாட்டாக சொல்லி அவன் மூலமாக கர்ணனை பெற்றதும், பின்னர் சூரியனால் கன்னியாக்கப் பட்டு பாண்டுவை மணந்து அவன் மூலம் குழந்தைகள் இல்லாததால், தேவர்களுக்குரிய மந்திரங்களைச் சொல்லி, அவர்கள் மூலமே குழந்தை பெற்றதும் தெரிந்த விஷயம்.

அவ்வகையில் அர்ஜுனனுக்கு உதவ இந்திரன் முன்வந்தார். அவனது தவசக்தியை சோதிப்பதற்காக ஊர்வசி, ரம்பை, மேனகையை அனுப்பி மன்மதக்கணையை ஏவ மன்மதனையும் அனுப்பினான். அர்ஜுனன் கண் விழிக்கவே இல்லை. அக்னி குண்டத்திலேயே அசையாமல் நின்றான். அவர்கள் தங்கள் திட்டம் பலிக்காமல் தோற்றனர். மகிழ்ந்த இந்திரன் அவன் முன்காட்சி தந்து பாசுபத அஸ்திரம் நிச்சயம் கிடைக்கும் என மகனுக்கு நம்பிக்கையூட்டினான்.

இந்த நேரத்தில் துரியோதனன் காட்டில் இருக்கும் அர்ச்சுனனைக் கொல்வதற்காக முகாசுரன் என்பவனை ஏவிவிட்டான். அவன் அர்ஜுனனைக் கொல்ல நெருங்கும் வேளையில் பார்வதிதேவியார் கருணை உள்ளத்துடன் பரமசிவனை அணுகினாள். அன்பரே ! தாங்கள், உங்கள் பக்தனின் கடும் தவத்திற்கு ஏன் இன்னும் இரங்கவில்லை ? என்றாள் தாயுள்ளத்தோடு.

தொடரும்..




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!