Samayalarai

தீபாவளி ஸ்பெஷல்:நாவில் பட்டால் கரையும் பால் பன் ரெசிபி

பொதுவாகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்சை  நம்முடைய வீட்டில் செய்தால் அம்மாக்களுக்கு அது மிகப் பெரிய சந்தோசத்தை கொடுக்கும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும்,உங்கள்  கையாலேயே பால் பன் செய்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கா?  இந்த குறிப்பை முழுமையாக படித்து, இந்த தீபாவளிக்கு பால்  பன் ரெசிபியை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.20 நிமிடங்களுக்குள் இந்த பால் பன் ரெசிபியை நாம் செய்ய முடியும். மேலும் இது மிகவும் சுவையாக இருக்கும்.




சாத்தூர் ஸ்பெஷல் பாரம்பரிய பால் பன் மிகவும் கூடுதல் சுவையுடன் டேஸ்டியாக செய்வது |Paal Bun - YouTube

 தேவையான பொருட்கள்

2 ஸ்பூன் நெய்

2 ஸ்பூன் பொடித்த சர்க்கரை

2 சிட்டிகை சோடா உப்பு

2 கப் மைதா மாவு

4 ஸ்பூன் தயிர்

2 கப் சர்க்கரை

சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர்

பொறிக்கும் அளவு எண்ணெய்




பால் பன் (Paal bun recipe in tamil) இவருடைய ரெசிபி Priyamuthumanikam- குக்பேட்

செய்முறை விளக்கம் :

  • ஒரு பாத்திரத்தில் நெய், 2 ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக அடித்துகொள்ளவும். தொடர்ந்து அதில் சோட உப்பு, மைதா மாவு, தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  • தண்ணீர் சேர்த்துகொள்ளலாம். ஆனால் மாவு ரொம்பவும் கட்டியாகவோ, தண்ணீராகவோ இருக்க கூடாது. தொடர்ந்து இதை அப்படியே விடவும். தற்போது ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, அதை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து பாகு ரெடி செய்துகொள்ளவும்.

  • தொடர்ந்து நாம் ரெடி செய்து வைத்த மாவை எண்ணெய் சிறிய உருண்டைகளாக பொறிக்க வேண்டும். மிதமான தீயில் பொறிப்பது மிகவும் முக்கியம். தொடர்ந்து பொறித்த பன்னை, சர்க்கரை பாகில் சேர்த்தால், நாவில் கரையும் பால் பன் ரெடி.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!