Samayalarai

சத்து நிறைந்த வால்நட் பர்பி

சுவையான வால்நட் பர்பி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் அல்லது பள்ளி செல்லும் போது கொடுக்கலாம். விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

வால்நட் பருப்பு- 2கப்

நெய்- 6 டீஸ்பூன்

வெல்லம்- 2 கப்

சுக்கு பொடி -1 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்




செய்முறை விளக்கம்:

வால்நட் பருப்புகளை ஒன்றிரண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து  2 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் வால்நட்டை அதில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதை தனியாக ஒருதட்டில் எடுத்து வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டு மிதமான தீயில் பாகு தயாரிக்கவும். பின்பு அதனுடன் ஏலக்காய் பொடி. சுக்கு பொடி மற்றும் வறுத்த வால்நட் பருப்புகளை போட்டு கலக்கவும். இப்போது அதில் சிறிது சிறிதாக நெய் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் இந்தக் கலவையை ஊற்றி சமமாக பரப்பி விடவும். இந்த கலவை சற்று ஆறி வந்த பிறகு உங்களுக்கு விருப்பமான வடிவில் கத்தி வைத்து வெட்டவும். அவ்வளவு தான் சுவையான சத்து நிறைந்த வால்நட் பர்பி ரெடி. மேலே நறுக்கிய பாதாம் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!