gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன்(30.11.23)

சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 30.11.2023, சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.31வரை திருதியை. பிறகு சதுர்த்தி. இன்று மாலை 04.36 வரை திருவாதிரை. பின்பு புனர்பூசம். அனுஷம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

வேலையிடத்தில் ஏற்படும் சிக்கலை வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். புதிய தொழிலில் அதிகமாக பண முதலீடு செய்யாதீர்கள். பங்குப் பரிவர்த்தனை வியாபாரத்தில் எச்சரிக்கையாக ஈடுபட மறக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் கவனமாக செயல்பட தவறாதீர்கள். மேலதிகாரி மனப்போக்கு அறிந்து நடந்து கொள்ளுங்கள். எதிலும் வீண் பிடிவாதம் செய்யாதீர்கள்.இன்று விநாயகரை வழிபட காரியங்கள்  அனுகூலமாகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள்  உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.

ரிஷப ராசி அன்பர்களே!

கம்பெனி வளர்ச்சிக்காக கடுமையாகப் பாடுபடுவீர்கள். கணினித் துறை, கட்டுமானத் தொழில், கமிஷன் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு பாதகமான செயல்களில் இறங்காதீர்கள். திருமண ஏற்பாடு செய்வீர்கள். காதலில் வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் உங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள்.மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

எந்தக் காரியத்திலும் நிலையான முடிவெடுக்கத் தடுமாறுவீர்கள். காதலித்த பெண்ணால் புதிய சிக்கலை சந்திப்பீர்கள். அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். வாகனங்களில் செல்லும்போது அங்கும் எங்கும் பராக்கு பார்க்காதீர்கள். ரத்த காயங்கள் அடைவீர்கள். உறவினரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கெட்ட பெயர் வாங்குவீர்கள்.துர்கையை வழிபட சிரமங்கள் குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

பைனான்ஸ் தொழிலில் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். கடன் கொடுத்தால் எழுதி வாங்கிக் கொள்ள தயங்காதீர்கள். அடுத்தவருக்காக நீதிமன்ற ஜாமீன் கொடுக்காதீர்கள். நல்ல நண்பர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள தவறாதீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். இரும்பு தொழிலில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் சங்கடப்படுவீர்கள்.இன்று வேங்கடேச பெருமாளை வழிபட நற்பலன்கள் கூடும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

விருப்பப்பட்ட பட்டப் படிப்பில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். நண்பர்களின் உதவியால் அனுகூலமான பலன் பெறுவீர்கள். கண்ணியமாக பேசி காதலை வெளிப்படுத்துவீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி கொடுத்து குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.இன்று முருகப்பெருமானை வழிபட  காரிய அனுகூலம் உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

வெளியூர் பயணங்களின் மூலம் தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை பெறுவீர்கள். வியாபார விருத்திக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். முதுகு தண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். உறவுகளை இணைப்பதற்காக உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் அந்தஸ்தை வெளிக்காட்ட ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். காதலியுடன் உல்லாச பயணம் செல்வீர்கள். மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.

துலா ராசி அன்பர்களே!

குடும்பப் பெண்களின் குழப்பத்தை தீர்ப்பீர்கள். மனைவியின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மருத்துவரை சந்திப்பீர்கள். இடம் விற்பனையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பொதுப்பணித்துறையில் அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள். அரசியலில் கலக்கி முக்கிய இடத்தை பிடிப்பீர்கள். தந்தையார் பட்ட கடனை வாக்கு மாறாமல் அடைப்பீர்கள்.இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் பிற்பகலுக்குமேல் ஈடுபடவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எந்தக் காரியத்திலும் இழுபறியான நிலையை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சலால் டென்ஷன் அடைவீர்கள். இடம் வாங்கும் விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடனை தாமதமாக பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு புதிய தொழில் தொடங்காதீர்கள். வியாபாரத்தில் சிக்கலை எதிர் நோக்குவீர்கள். சந்திராஷ்டம நாள்.தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் செலவுகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் பெறுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தியை பெருக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பைக் கூட்டுவீர்கள். மாணவர்கள் அக்கறையுடன் படித்து தேர்ச்சி பெறுவீர்கள். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் சிரமப்படுவீர்கள். ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல் தீர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் திடீர் செலவுகள் ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

ஓய்வு இல்லாத வேலையால் நேரத்துக்கு சாப்பிடாமல் வயிற்று கோளாறால் அவதிப்படுவீர்கள். அரசாங்க வேலையில் ஏற்பட்ட பிரச்சனையை சாதுரியமாக சமாளிப்பீர்கள். தான் என்ற ஆணவத்தோடு பேசாதீர்கள். காதலி டாட்டா காட்டி விட்டு சென்றதால் கலக்கத்துடன் இருப்பீர்கள். வியாபாரப் போட்டியால் மனம் துவண்டு போவீர்கள். அலட்சியத்தால் வேலையை இழப்பீர்கள்.பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

கும்பராசி அன்பர்களே!

வீட்டில் மங்கல காரியங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். அனைவரிடமும் நல்ல நட்பைப் பேணுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகப் பணி செய்து பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலையை மாற்றுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

மீனராசி அன்பர்களே!

மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் அரசு வேலையில் சேருவீர்கள். தொழிலில் முன்னேற்றமடைந்து லாபத்தை பெருக்குவீர்கள். வாக்கு திறமையால் சுற்று வட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். கனிவாக பேசி காதலியின் மனவேதனையை போக்குவீர்கள். கழுத்து வலி பிரச்சனைக்கு மருத்துவரை சந்தித்து தீர்வு காண்பீர்கள்.
முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!