gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன்(23.11.23)

சந்திர பகவான் இன்று மீனம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.47 வரை ஏகாதசி. பிறகு துவாதசி. இன்று மாலை 05.35 வரை உத்திரட்டாதி. பின்பு ரேவதி. மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

விவகாரங்களை வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்ல தவறாதீர்கள். உயர் அதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபமடைய மாட்டீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலையை விலக்கி இணக்கமான நிலை உருவாக்குவீர்கள். பிள்ளைகளின் போக்கை கண்காணிக்க தவறாதீர்கள். விரயச் செலவுகளை குறைப்பீர்கள்.சிவ வழிபாடு சிரமம் தவிர்க்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

போட்டி பந்தயங்களில் சாதகமான நிலையை அடைவீர்கள். ஷேர் மார்க்கெட் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் பிசினஸில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். காதலுக்கு இருந்த இடையூறுகளை களைவீர்கள். தொடங்கவேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்த வேலைகளை செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள்.இன்று கணபதியை வழிபட தடைகள் விலகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மிதுன ராசி அன்பர்களே!

வியாபாரத்திற்கான உதவிகள் வீடு தேடி வருவதால் சந்தோஷப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். அரசு பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை பார்ப்பீர்கள். கோயில் பிரச்சனைக்காக வாக்குவாதம் செய்வீர்கள். எதிர்பாராத பண வரவால் தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள்.இன்று மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் பணவரவு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

தொழில் செய்யும் இடத்தில் ஏதாவது பிரச்சனைகள் தலை தூக்குவதால் தடுமாற்றம் அடைவீர்கள். இயந்திரங்களில் எச்சரிக்கையாக வேலை செய்யாவிட்டால் ரத்த காயம் படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி தூக்கம் இழப்பீர்கள். மாணவர்களின் கல்விச் செலவு அதிகரித்து பணத்துக்கான நெருக்கடியை சந்திப்பீர்கள்.
ஷண்முகக் கடவுளை வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் பணவரவு உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இடையூறுகள் ஏற்படும் வேலைகளை வீம்புக்காக செய்யாதீர்கள். அதனால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப் போடுவீர்கள். வண்டி வாகனங்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக் காட்டாதீர்கள். நகைச்சுவையாக பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். அரசாங்க வேலைகளில் தாமதம் அடைவீர்கள்.பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

கன்னி ராசி அன்பர்களே!

நல்ல செய்திகளால் குடும்பத்தில் கலகலப்பை கூட்டுவீர்கள். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு வந்து சேமிப்பை உயர்த்துவீர்கள். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை நடத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.சூரியபகவானை வழிபடுவது நன்று.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள்சேர்க்கை ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

துலா ராசி அன்பர்களே!

நல்ல செய்திகளால் குடும்பத்தில் கலகலப்பை கூட்டுவீர்கள். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு வந்து சேமிப்பை உயர்த்துவீர்கள். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை நடத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.இன்று சுதர்சன வழிபாடு நலம் சேர்க்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பால் சோர்வு அடைவீர்கள். கூட இருந்து குழி பறிக்க சிலர் செய்யும் முயற்சியில் மாட்டிக் கொள்வீர்கள். தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கத்தை நீக்குவீர்கள். தாயாரின் கால் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். அரசு பணியில் இருப்பவர் ரகசியம் காக்க பாடுபடுவீர்கள்.இன்று முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலை கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்

தனுசு ராசி அன்பர்களே!

குடும்பம் ஒற்றுமைக்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்ட மனை இடம் வாங்குவீர்கள். பணப்பற்றாக்குறை அறவே நீங்கி ஆனந்தம் அடைவீர்கள். சக ஊழியர்களின் உதவியால் சாதனை செய்வீர்கள். வெளிநாட்டு நண்பரின் உதவியால் தொழிலை விரிவு படுத்துவீர்கள். மனைவியின் குதிகால் வலிக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்க்கும் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய திட்டங்களால் தொழிலை மேம்படுத்த விரும்புவீர்கள். சகோதர சகோதரிகள் உதவியால் சந்தோஷம் அடைவீர்கள். தாமதமான அரசாங்க வேலைகளை சாதகமான நிலைக்கு கொண்டு வருவீர்கள். கேட்ட இடத்தில் பணம் தாராளமாக கிடைத்து வித்தியாசமான வியாபாரங்களில் துணிச்சலாக இறங்குவீர்கள். எதிர்ப்புகளை துடைத்து எறிவீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபட அல்லல்கள் குறையும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவ்வப்போது மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கும்பராசி அன்பர்களே!

அண்டை அயலாரிடம் இருந்த கருத்து வேறுபாட்டை அன்பாக பேசி அகற்றுவீர்கள். உயரதிகாரிகள் கொடுக்கும் உற்சாகத்தால் கடினமான வேலையை சுலபமாக பார்ப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தினரை சந்தோஷத்தில் ஆழ்த்துவீர்கள். வேலையிட பிரச்சினைகளை துரித முயற்சியால் விலக்குவீர்கள்.
விநாயகப் பெருமானை வழிபடுவது நலம் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக் கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் ஏற்படும்.

மீனராசி அன்பர்களே!

மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சூட்சுமங்களை கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள். வாகனங்கள் பழுதாகி செலவு செய்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!