gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (29.11.23)

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.51 வரை துவிதியை. பிறகு திருதியை. இன்று பிற்பகல் 03.21 வரை மிருகசீரிடம். பின்பு திருவாதிரை. விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

 மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

வியாபாரத்தை நல்ல விதமாக நடத்துவீர்கள். வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாகக் காணப்படுவீர்கள். தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வேலை இடங்களில் இடையூறுகளை சுமூகமாக பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.இன்று முருகப்பெருமானை வழிபட முயற்சிகள் பலிதமாகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷப ராசி அன்பர்களே!

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உள்குத்து வேலையால் பாதிக்கப்படுவீர்கள். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களில் அலைவீர்கள். பிள்ளைகளின் ஒத்துழைப்பால் மன நிம்மதி அடைவீர்கள். அரசியல் துறையில் ஏற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து குடும்ப வண்டியை சீராக செலுத்துவீர்கள்.
சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

வேலையிடத்தில் உயரதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வாகனங்களில் செல்லும்போது அக்கம் பக்கம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். பயணங்களின்போது பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள். நுரையீரல் பிரச்சனையை சரி செய்ய மருத்துவரிடம் செல்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை இல்லாமல் தவிப்பீர்கள்.மீனாட்சி  அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கடக ராசி அன்பர்களே!

திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். அதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களளில் நன்மையை பெறுவீர்கள். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற வருமானத்தை கொண்டு வருவீர்கள். தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிரிகளின் ஆசையை தவிடு பொடி ஆக்குவீர்கள். பணவரவு அதிகமாகி பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள்  குறையும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அதிகாரிகளால் நன்மை பெறுவீர்கள் . பெற்றோர்களின் ஆசியால் சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயமும் மன நிம்மதியும் அடைவீர்கள்.இன்று முருகப்பெருமானை வழிபட அதிக நன்மைகளைப் பெறலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

வியாபாரத்தை கெடுக்க நினைக்கும் எதிரிகளின் கனவை கலைப்பீர்கள். எடுத்த காரியத்தில் தாமதமேற்பட்டு சங்கடப்படுவீர்கள் . இனம் தெரியாத கவலையால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவீர்கள். முதலாளிகளின் அன்பைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள மறக்காதீர்கள்.மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பிரச்னைகள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலா ராசி அன்பர்களே!

வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தை அதிகரிப்பீர்கள். ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள். பங்கு முதலீட்டில் அதிக கவனம் செலுத்தாதீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கலை சந்திப்பீர்கள். பொருளாதாரம் மந்த நிலையால் மன வேதனைப்படுவீர்கள். ஆவணங்களில் கையெழுத்து போடும் போது படித்துப் பார்க்க தவறாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.லட்சுமி நரசிம்மரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

விருச்சிக ராசி அன்பர்களே!

வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தை அதிகரிப்பீர்கள். ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள். பங்கு முதலீட்டில் அதிக கவனம் செலுத்தாதீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கலை சந்திப்பீர்கள். பொருளாதாரம் மந்த நிலையால் மன வேதனைப்படுவீர்கள். ஆவணங்களில் கையெழுத்து போடும் போது படித்துப் பார்க்க தவறாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

உறவுக்குள் இருந்த சிக்கலை தீர்த்து சமரச நிலைக்கு கொண்டு வருவீர்கள். குறுக்கே வரும் சிறு சிறு இடையூறுகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வான பலனை அடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த ஊடல் நீங்கி நெருக்கத்தை ஏற்படுத்துவீர்கள். வெளியூர் பயணத்தில் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு அடைவீர்கள்.ஆஞ்சநேயரை வழிபட நினைத்தவை நிறைவேறும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் கோபத்தைத் தூண்டுவதால் டென்ஷன் அடைவீர்கள். முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து எறிவீர்கள். வியாபாரப் பயணங்களில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டபடி சிறப்பாக தொழிலை நடத்துவீர்கள். பைனான்சில் நாணயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அவமானப்படுவீர்கள்.
தட்சிணாமூர்த்தியை தியானிப்பதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பராசி அன்பர்களே!

ரியல் எஸ்டேட் தொழிலை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள். உற்ற நண்பர்கள் உதவியை தகுந்த சமயத்தில் பெறுவீர்கள். திறமையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள்.அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அத்தனையிலும் வெற்றி அடைவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். எதிர்ப்புகள் தாமாகவே விலகும்படி செய்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். துணிச்சலாக காரியம் முடிப்பீர்கள். வேலையில் இடமாற்றம் ஏற்பட்டு வெளியூர் செல்வீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் குறையும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!