gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (16.11.23)

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 30 ஆம் தேதி வியாழக்கிழமை 16.11.2023,சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.34 வரை திருதியை. பின்னர் சதுர்த்தி. இன்று அதிகாலை 04.34 வரை கேட்டை. பின்னர் மூலம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பைனான்ஸ் வரவு செலவுகளை சமூகமாக நடத்துவீர்கள். வேலையிடங்களில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.அம்பிகையை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் கேட்கும் உதவியை செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங் கள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பைனான்ஸ் வரவு செலவுகளை சமூகமாக நடத்துவீர்கள். வேலையிடங்களில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட சிரமங்கள் குறையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள உண்டாகும்.




மிதுன ராசி அன்பர்களே!

மாமனார் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பீர்கள். வீடு புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கு முன்னெடுப்பு செய்வீர்கள். தான தர்மங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சிறு வியாபாரிகள் லாபம் அடைந்து மனநிறைவு கொள்வீர்கள். வேலையிடங்களில் திறனை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுவீர்கள்.
விநாயகரை தியானித்து வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் பெற வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும்.

கடக ராசி அன்பர்களே!

வெளியிடங்களில் சாப்பிடுவதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். உறவுகளால் உபத்திரவம் அடைவீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றிக்கோட்டை தொடுவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். கல்லூரிச் செலவுகள் கை மீறிப் போவதால் கஷ்டப்படுவீர்கள். காதலியின் அன்பை பெறுவதற்காக பரிசு பொருள் வாங்கி கொடுப்பீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் பெற வாய்ப்பு உள்ளது .

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.




சிம்ம ராசி அன்பர்களே!

எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வீடு கட்ட வாஸ்துக்குத் தயார் ஆவீர்கள். வங்கி லோன் எதிர்பார்த்தபடி பெறுவீர்கள். மனை இடங்கள் வாங்குவீர்கள். தன தான்ய விருத்தி அடைவீர்கள். புதிய வாகனங்களை தவணை முறையில் வாங்குவீர்கள்.இன்று துர்கையை வழிபட காரியங்களை வெற்றிகரமாக முடித்துவிட முடியும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வீடு கட்ட வாஸ்துக்குத் தயார் ஆவீர்கள். வங்கி லோன் எதிர்பார்த்தபடி பெறுவீர்கள். மனை இடங்கள் வாங்குவீர்கள். தன தான்ய விருத்தி அடைவீர்கள். புதிய வாகனங்களை தவணை முறையில் வாங்குவீர்கள்.இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.




துலா ராசி அன்பர்களே!

சகோதர உறவுகளால் சந்தோசம் பெறுவீர்கள். தக்க சமயத்தில் உதவி பெற்று முக்கிய பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள். முந்தி வரும் கோபத்தால் சொந்தங்களை பகைப்பீர்கள். தொழிலில் தைரியமாக முடிவெடுப்பீர்கள். கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். சக ஊழியர்களின் தொல்லையால் வேலை இடத்தில் சிக்கலை சந்திப்பீர்கள்.
லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

சாதுர்யமாக காய் நகர்த்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வாக்குத் திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறன் முன்னேற்றமாக இருக்கும். எளியோருக்கு உதவி செய்து சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள் .
இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.




தனுசு ராசி அன்பர்களே!

சொல்வாக்குத் தவறினால் செல்வாக்கை இழப்பீர்கள். சிறியோர்களால் அவமானம் அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து எட்டி நில்லுங்கள். வேலையில் கவனத்தைச் சிதற விடாதீர்கள். வியாபாரத்தில் பொறாமைக்கார்கள் இடையூறு செய்வர். வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர் பெறுவதில் சிரமப்படுவீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு கரையும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மகர ராசி அன்பர்களே!

சுப நிகழ்ச்சிக்கான ஆயத்த வேளையில் இறங்குவீர்கள். தொழிலை விரிவுபடுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபாரிகள் விறுவிறுப்பாக விற்பனை செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். வீடு தேடி உதவிகள் வரும். விருந்து நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.சிவபெருமானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.




கும்பராசி அன்பர்களே!

நில விற்பனை மூலம் அதிக வருமானம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டால் மனம் குளிர்ந்து போவீர்கள். வீடு கட்டுவதில் இருந்த வில்லங்கத்தை விலக்குவீர்கள். ஓயாத உழைப்பால் வியாபாரத்தை உயர்த்துவீர்கள். மழலைச் செல்வத்தின் அழுகுரலால் குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள்.வாராஹி தேவி வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

தந்தையார் வகையில் மருத்துவச் செலவுகள் செய்வீர்கள். கடல் கடந்து பயணம் மேற்கொள்வீர்கள். விட்டுப் போன உறவுகளை கிட்ட கொண்டு வருவீர்கள். நண்பர்களின் உதவியால் சுப காரியங்கள் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அதிக நன்மை அடைவீர்கள். பணியாளர்கள் துணிவாகச் செயல்படுவீர்கள். திடீர் தனவரவால் திக்கு முக்காடி போவீர்கள்.விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!