Samayalarai

தித்திக்கும் ரவா அல்வா

 

ரவா அல்வா செய்வது எப்படி?

ரவா அல்வா தித்திப்பான இனிப்பு ஆகும். இதனை சுவையாகவும், எளிதாகவும் வீட்டிலேயே செய்யலாம்.நாமே அல்வாவைத் தயார் செய்வதால் இது ஆரோக்கியமானதும், தூய்மையானதும் ஆகும். தீபாவளிக்கு இந்த அல்வா செய்து அசத்துங்கள். இனி சுவையான ரவா அல்வா தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

1 கப் ரவை இருந்தால் போதும் நாவில் கரையும் அல்வா ரெடி/Suji Halwa /Rava halwa recipe in tamil/sweet. - YouTube

தேவையான பொருட்கள்

ரவா அல்வாவிற்கு தேவையான பொருட்கள்ரவா அல்வாவிற்கு தேவையான பொருட்கள்

ரவை – 100 கிராம் (1 பங்கு)

வெள்ளை சர்க்கரை – 150 கிராம் (1½ பங்கு)

தண்ணீர் – 300 கிராம் (3 பங்கு)

முந்திரிப் பருப்பு – 10 எண்ணம் (முழுமையானது)

ஏலக்காய் – 2 எண்ணம்

நெய் – 6 ஸ்பூன்

ரவா அல்வா செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் 1 பங்கு ரவையை போட்டு 3 பங்குத் தண்ணீரை ஊற்றவும்.

  • அதனை ஐந்து நிமிடங்கள் ஊற விடவும்.பின்பு ரவையை கரண்டியால் நன்கு கிளறவும்.

  • ரவையுடன் தண்ணீர் சேர்த்ததும். பின்னர் மிகவும் சின்ன துளை உள்ள வடிகட்டியில் ரவைத் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

  • 125 கிராம் சர்க்கரையை வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு நீர் ஊற்றி, அடுப்பில் மீடியம் ப்ளேமில் வைத்து, ஒரு கம்பி பதம் வரைக் காய்ச்சவும்.




சர்க்கரையைக் காய்ச்ச ஆரம்பித்ததும்

  • அதாவது சர்க்கரை கரைந்ததும், கையை தண்ணீரில் நனைத்து சர்க்கரை கரைசலை பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து விரல்களை நகர்த்தியதும், சர்க்கரை கரைசல் ஒற்றைக்கம்பி போல் வரும். இப்பொழுது சர்க்கரைக் கரைசலுடன் வடித்த ரவைத் தண்ணீரை ஊற்றி கிளறவும்.

சர்க்கரைக் கரைசலுடன் ரவைத் தண்ணீரைச் சேர்க்கும் போது

  • சிறிது நேரத்தில் கலவை கெட்டியாகத் தொடங்கும்.

  • அப்போது இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றிக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

  • மற்றொரு வாணலியை இன்னொரு பர்னரில் வைத்து மீதமுள்ள 25 கிராம் சர்க்கரையை போட்டு கிளறவும்.




  • வெறும் சர்க்கரையைக் காய்ச்சும் போது

    சிறிது நேரத்தில் சர்க்கரை முழுவதும் கரைத்து கருஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும்.

கருஞ்சிவப்புநிற சர்க்கரைக் கரைசல்


உடனே கருஞ்சிவப்பு சர்க்கரையை, மற்றொரு பர்னரில் இருக்கும் ரவை சர்க்கரைக் கரைசலுடன் சேர்த்து, ஒருசேரக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கருஞ்சிவப்பு சர்க்கரைக் கரைசலைச் சேர்த்ததும்கருஞ்சிவப்பு சர்க்கரைக் கரைசலைச் சேர்த்ததும்

இடையே 2 ஸ்பூன் நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.

கலவை நன்கு உருண்டு திரண்டதும் அடுப்பினை அணைத்து விடவும்.

திரண்ட கலவைதிரண்ட கலவை

வாணலியில் நெய்யினை ஊற்றி அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து கலவையில் கொட்டவும்.சற்று ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளவும். சுவையான ரவா அல்வா தயார்.

முந்திரி, ஏலக்காயை வறுக்கும் போது

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சாரப் பருப்பு சேர்த்து அல்வா தயார் செய்யலாம்.

ஒருகம்பி பதம் என்பது அவசியம். பாகு முறுகினாலோ, கம்பி பதத்திற்கு முன்னால் ரவைத் தண்ணீர் சேர்த்தால் அல்வாவின் சுவை மாறிவிடும்.

பொடிக்கண் வடிகட்டிக்குப் பதிலாக மெல்லிய காட்டன் துணியால் வடிகட்டலாம்.

விருப்பமுள்ளவர்கள் நெய்யின் அளவினை அதிகரித்து அல்வா தயார் செய்யலாம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!