health benefits lifestyles

உங்கள் குழந்தை தவறு செய்தால் அதற்கு யார் காரணம்..?

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைங்களை வளர்ப்பது பெரிய சாவாலாகி கருதுகின்றனர். ஏனென்றால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப குழந்தைங்களின் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. உதாரணமாக, 10 வருடங்களுக்கு முன்பதாக, ஒருவரின் வீட்டில் பட்டன் செல்போன் இருப்பதே மிகவும் அரிதாக இருந்தது.

குழந்தை வளர்ப்பு முறையில் நீங்கள் எந்த வகை? தெரிந்துகொள்ளுங்கள்..

ஆனால், இன்று ஒரு குடும்பத்தில் பெற்றோர், குழந்தைகள் என அனைவருக்குமே தனி தனி மொபைல் போன்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. குழந்தைகளின் கையில் இந்த மொபைல் போனை கொடுக்கும் போது, மிக சிறிய வயதிலேயே பல காரியங்களை கற்று கொள்கின்றனர்.




   மொபைல் போனை பொறுத்தவரையில், அதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. ஆனால், இந்த மொபைல் போன் குழந்தைகள் எது நல்லது, கெட்டது என அறியும் வயதிற்கு முன்பதாகவே அவர்களது கரங்களுக்கு சென்று விடுகிறது. இது தான் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறுகளில் ஒன்று.

உங்களுக்கான டிப்ஸ் :

குழந்தைகள் தவறு செய்யும் போது, இது தவறு என நாம் சுட்டி காட்டி வளர்ப்பது பெற்றோருக்கு உரிய குணம் தான்.  ஒரு குழந்தையிடம் நல்ல விஷயத்தை பார்க்கிறோம் என்றால், அதற்கு காரணம் பெற்றோர்களாகிய நாம் வளர்க்கும் முறை தான். அதேசமயம் அந்த குழந்தை தவறு செய்தால் அதற்கும் காரணம் பெற்றோராகத்தான் இருக்கிறார்கள். குழந்தைகள் என்பவர்கள் ஒரு கண்ணாடி போல. குழந்தை எந்தமாதிரி சூழலில் வளர்கிறது. என்ன செயல்பாடுகளை பார்த்து வருகிறது என்பது மிக முக்கியமானது.




குழந்தைகளின் முதல் உலகம் அவர்களது குடும்பம் தான். எனவே நாம் சரியாக நடக்கும் போது, குழந்தைகளிடம் அதன் பிரதிபலிப்பை பார்க்கலாம். பெற்றோர்களாகிய நாம் இந்த சமூகத்தில் சிறந்த மனிதர்களாக, பிறருக்கு எடுத்துக்காட்டான மனிதர்களாக வளரும் போது, குழந்தையும் சிறந்த குழந்தையாக வளரும்.

எடுத்துக்காட்டாக, நீங்களே தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி இருந்துகொண்டு, குழந்தையை அதை செய்யக்கூடாது என கண்டிப்பது மிகவும் தவறு. எனவே ஒரு குழந்தை, நல்லவனாக வளர்வதும், கெட்டவனாக வளர்வதும் பெற்றோரின் கைகளில் தான் இருக்கிறது.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!