Entertainment News

செல்போன்களில் இருந்து குழந்தைகளை மீட்பது எப்படி?

இன்றைய காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன் இல்லாமல் இருக்க முடிவது கிடையாது. ஷாப்பிக் முதல் வங்கி சேவைகள் அனைத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்திட முடிவதால் சோம்பேறியாக மாறியது மட்டுமின்றி, இயற்கையுடன் ஒன்றி வாழ மறந்து விட்டோம் என்று கூட சொல்லலாம். அவசரத்திற்கு உதவ வந்த செல்போன், தற்போது இன்றியமையாததாக மாறியதன் காரணம் நம்முடைய சோம்பேறித்தனம் தான்.




இப்போதெல்லாம் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் கைகளில் கூட செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்று துவங்கிய காலம் முதல் தான் குழந்தைகள் அதிக நேரம் ஸ்மார்ட் ஸ்கிரீனை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

செல்போனை பெரியவர்கள் அதிகம் உபயோகிப்பதே தவறு என்று கூறும் இந்த காலக்கட்டத்தில், குழந்தைகள் செல்போனிற்கு மிகவும் அடிமையாகி விட்டனர் என்பது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம். அதிலும், பிறந்தது முதலே குழந்தைகளை செல்போன் கொடுத்து பழக்குவது, குழந்தைகளை அமைதிப்படுத்த விரும்பி ஏதேனும் குழந்தைகளுக்கான பாடல்களையோ கார்ட்டூன்களையோ தங்களுடைய திறன்பேசியில் போட்டுக் காட்டி அவர்களை அமைதிப்படுத்துகிறார்கள். இப்படி செய்வது  உங்கள் குழந்தைக்கு நீங்களே கெட்டது செய்யும்படியான ஒரு செயல் என்கிறார்கள்  குழந்தை நல மருத்துவர்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை செல்போன்களிடம் இருந்து முடிந்தவரை விலக்கி வைக்க, பெற்றோராகிய நாம் கவனிக்க வேண்டிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்:




  • குழந்தைகளின் பார்வை படும்படி பெற்றோர்கள் செல்போனை நோண்டக்கூடாது.

  • குழந்தைகளைத் தனிமையில் விடக்கூடாது. இதனால் அவர்கள் பெரும் ஏக்கம் அடைகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளுடன் போதிய நேரத்தைச் செலவிட வேண்டும். அதனால் அவர்களின் கவனம் செல்போன் பக்கம் .

  • அவர்கள் கொஞ்ச காலமே குழந்தைகளாக இருப்பர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு குழந்தை பருவத்தை அனுபவிக்கட்டும். எந்த வகையிலும் தடை போடாதீர்கள்.

  • அவர்களுக்கு நிறைய கதை சொல்லுங்கள். கதைகளின் மூலமே அவர்கள் உலகத்தின் பல கோணங்களை அறிந்து கொள்ள முடியும்.




  • வண்ணம் தீட்டுதல், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுதல், பொருட்களை வரிசையாக அடுக்கி வைத்தல் போன்ற பல்வேறு நல்ல பழக்கங்களின் மீது அவர்களின் கவனத்தைத் திருப்பப் பாருங்கள்.

  • உணவு சாப்பிடும் பொழுது கட்டாயமாக அவர்களுக்கு செல்போன் தர வேண்டாம். குடும்பமாக அனைவரும் சேர்ந்து சாப்பிடுங்கள். செல்போன் மீது கவனம் போகாது.

  • பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்க வேண்டாம். மாறாகச் செல்லும் ஊரைப் பற்றிய பல்வேறு தகவல்களைப் பேசுங்கள்.

  • சற்று சிறிய குழந்தை என்றால் தினம் ஏதாவது நல்ல புத்தக்கத்திலிருந்து அரைப் பக்கம் வாசித்துக் காட்டுங்கள். சற்று வளர்ந்த குழந்தை என்றால் சொந்தமாகவே வாசிக்க தினமும் ஊக்கப்படுத்துங்கள்.

  • இதே போல சற்று வளர்ந்த குழந்தைகளிடம் எதாவது தலைப்பு தந்து காகிதத்தில் எழுத ஊக்கப்படுத்தலாம்.

  • அருகில் உள்ள பூங்கா, விளையாட்டு மைதானங்களுக்கு குழந்தைகளை அடிக்கடி அழைத்துச் செல்லலாம்.




மூளை வளர்ச்சியை எந்த அளவிற்கு பாதிக்கும்?

  • நேரம் அலைபேசியை பார்ப்பதால் முதலில் ஞாபக சக்தி பாதிக்கப்படும்.

  • படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். தூக்கம் குறைவாக இருந்தால் அவர்களால் ஒரு விஷயத்தை அதிக நேரம் உட்கார்ந்து கவனிக்க முடியாது. கற்றல் திறன் மேம்பாட்டில் தாமதம் ஏற்படும்.

கொரோனா கடந்த மூன்று  ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. ஆனால் இதன் தாக்கம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிறகே தெரியவரும்.இந்த குழந்தைகள் வளர்ந்து நிற்கும்போதும் அப்போது அவர்களின் செயல்பாட்டில் அதிக அலைபேசி பயன்பாட்டின் தாக்கத்தை நாம் கண்கூடாக பார்க்க முடியும்.

குழந்தைகளுக்கு உடல் ரீதியான வேலைகளை செய்ய ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் அலைபேசி பயன்பாட்டிலிருந்து மெதுவாக வெளியே வருவார்கள் என்கிறார்கள்  மருத்துவர்கள்.




What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!