Cinema Entertainment

எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை செய்து காட்டிய விஜயகாந்த்..

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி இவரை வருத்திக்கொண்டு உள்வாங்கி நடிப்பதில் முக்கியமானவர்களில் ஒருவர் தனுஷ். இதற்கு காரணம் இவருடைய கடின உழைப்பு மற்றும் டெடிகேஷன் தான். இவரை இந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு போயிருக்கிறது. இவருக்கு பக்க பலமாக இருந்தது இவருடைய அப்பா கஸ்தூரிராஜா.

இவர் 15 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அப்படி இவர் இயக்கிய ‘வீரம் வெளஞ்ச மண்ணு’ என்ற படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்தார். அப்பொழுது கஸ்தூரிராஜாக்கும் இவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இந்த படத்தை இயக்கும்போது இவர் மிகவும் பதற்றமாக இருந்திருக்கிறார்.

பின்பு விஜயகாந்த், அவரிடம் கேட்டபோது எதுவும் சொல்லாமல் சமாளித்திருக்கிறார்.
ஆனால் அதோடு விட்டு விடாமல் என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்திருக்கிறார். அதாவது கஸ்தூரிராஜா மகள் விமலா கட் ஆஃப்பில் ஒரு மார்க் குறைவாக வாங்கி இருக்கிறார். உடனே விஜயகாந்த், முயற்சி செய்து டாக்டர் சீட்டு வாங்கி கொடுத்து இருக்கிறார்.

அந்த நேரத்தில் எங்க குடும்பத்தை பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விஜயகாந்த் காப்பாற்றியதாக செல்வராகவன் சமீபத்தில் பேட்டியில் கூறியிருந்தார். இப்பொழுது தனுஷின் அக்கா அப்போலோ மருத்துவமனையில் முதன்மை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.





சாதாரணமாக எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை விஜயகாந்த் அவர்கள் தனுஷ் குடும்பத்திற்கு செய்திருக்கிறார். இவங்களுக்கு மட்டுமல்ல நடிப்புக்கு அப்பாற்பட்டு நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இவர் நடிப்புக்கு மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் என்று நிறைய இடத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இதனால் விஜயகாந்த் என்றுமே நம் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இப்பொழுது இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிக்காமல் இருந்தாலும் இவர் செய்த நற்செயல்கள் என்றுமே இவரை பற்றி நினைக்க வைத்துக் கொண்டிருக்கும். அன்றும் இன்றும் என்றும் கேப்டன் என்று அழைக்கப்பட்ட ஒரே மனிதர் நமது விஜயகாந்த் மட்டுமே.




What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!