சூப்பரா தளதளன்னு புதினா செடி வளர வளர என்ன செய்யணுமுன்னு தெரியுமா.?

நம்முடைய வீடுகளில் அதிகமாக வளர்ப்பது பூச்செடிகள் தான். காய்கறிகளை கடையில் தான் வாங்கி வருகிறார்கள். கடையில் வாங்கும் காய்கறிகள் ஆர்கானிக் ஆக இருக்காது. அதில் செயற்கையான உரங்கள் போடப்பட்டிருக்கும். அதிலும் நாம் சமைக்கும் உணவுகள் ருசியாகவும், வாசனையாகவும் இருப்பதற்கு புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலையை பயன்படுத்துவோம்.

இந்த கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவை வாங்கி வந்த 3 நாட்களிலே வீணாகி விடும். அதனால் இதனை வீட்டிலேயே வளர்த்தால் நமக்கு தேவைப்படும் போது பறித்து கொள்ளலாம். அதனால் இந்த பதிவில் கொத்தமல்லி செடி நன்றாக வளருவதற்கு என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்வோம்.



சூரிய ஒளி:

புதினா செடி வளருவதற்கு சூரிய ஒளி ரொம்ப முக்கியமானது, ஏனென்றால் சூரிய ஒளி இருந்தால் தான் அவை நன்றாக வளரும்.  சூரிய ஒளி வெளிச்சம் படும் இடத்திலாவது செடியை வளர்க்க வேண்டும். முக்கியமாக நிழல் உள்ள இடத்தில் வைக்க கூடாது.

தினமும் தண்ணீர் ஊற்றுவது அவசியமானது, அதனால் தினமும் தண்ணீர் ஊற்றுங்கள்.



மண்:

புதினா செடி வளருவதற்கு உகந்தவையாக இருப்பது மண் தான். இந்த மண் ஆனது செம்மண்ணாக இருப்பது நல்லது. அப்படி செம்மண் இல்லையென்றால் தேங்காய் நார் கழிவுகளை சேர்க்க வேண்டும். அதன் பிறகு செடியை நட்டால் செடி நன்றாக வளரும்.

உரம்:

புதினா செடியில் இலைகள் அதிகமாக காய்க்க உரம் கொடுப்பது அவசியமானது. மாட்டு சாணம் உரத்தை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் புளித்த மோரை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இப்படி ஊற்றுவதால் செடிகளானது செழிப்பாக வளரும்.

15 நாட்களுக்கு ஒரு  முறை மண்புழு உரத்தை கொடுக்கலாம். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.



வேர் விட:

புதினா செடியின் சின்ன சின்ன கிளைகளை எடுத்து கொள்ளவும். இதனை ஒரு சின் பாத்திரத்தில் தண்ணீர்ஊற்றி கிளையின் அடிப்பகுதியை வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து பார்த்தால் இந்த செடியிலிருந்து வேர்கள் வந்திருக்கும். இதனை பெரிய grow bag செடி அல்லது வெளிப்பகுதியில் வளர்க்கலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஓ…வசந்தராஜா…!-14

14 " அஸ்ஸு அவன் இங்கேயே வந்து விட்டான்டி" மண்டபத்தின் பால்கனியில் நின்று அப்போதும் விதார்த்துடன் போனில் பேசிக் கொண்டிருந்த…

3 mins ago

இயற்கையான முறையில் கஸ்தூரி மஞ்சள்

அழகான முகம், வசீகரமான முகம், கலையான முகம் ,கவர்ந்திருக்கும் முகம். கருகரு என்று ஆரோக்கியமாக வளரும் தலைமுடி, மாசு மருவற்ற…

8 mins ago

வாழ்வை வளமாக்கும் அட்சய திருதியை:குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

அட்சய திருதியை வந்துவிட்டால் தங்கம் வாங்க வேண்டும் வெள்ளி வாங்க வேண்டும் என்று பலரும் அட்சய திருதியை வருவதற்கு முன்பாகவே…

14 mins ago

பட்டணத்தில் பூதம் விமர்சனம்

1964-ல் அறிமுகமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு 1967 வரை சுமார் இருபத்தைந்து கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல்…

16 mins ago

உடலென நான் உயிரென நீ-5

5 " தமிழ்நாடு எல்லை ஆரம்பம் " வளைவான போர்டு வரவேற்பாய் சொன்ன போது , வானம் நிறம் மாறி வெளுக்கத் தொடங்கியிருந்தது. என்ன ஒரு துல்லியமான ப்ளான் ... ? சொன்னபடி விடியும் போது தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விட்டார்களே ... பிடிக்காத திட்டமென்றாலும்  இந்த  தமிழக வளைவுக்குள் நுழைந்ததும் சஷிஸாவின் மனது ஏனோ அமைதியை உணர்ந்தது . அது வரை  இருக்கை நுனியில் பயணித்த  கார் பயணத்தை  மெத்தென பின் சாய்ந்து  ஆசுவாசிக்க வைத்தது . பின்னால் சீட்டில் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் . " அப்படியே சீட்டில் படுத்துக் கொள்ளலாம். நாம் போக வேண்டிய ஊருக்கு இன்னமும் நிறைய நேரமாகும் ..."  சொன்னபடி தான் அமர்ந்திருந்த எதிர் சீட்டில் கால்களை நீட்டிக் கொண்டு படுத்துவிட்டான் கணநாதன் .…

4 hours ago

உங்க சீலிங் ஃபேன் மெதுவாக சுத்துதா? இதை ஃபாலோ பண்ணுங்க!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில்…

4 hours ago