23

” எப்போது வந்தாள் ? ” தந்தையின் கடினமான குரலோடு மென்மையான அவரது தலை வருடலும் உணர்வில் பட கமலினியின் உறக்கம் கலைய தொடங்கியது .

” மத்தியானம் மூன்று மணி இருக்கும் . அடிச்சிப் போட்டது போல் தூங்கினாள் .தொல்லை தர வேண்டாமென்று சாப்பிடக் கூட எழுப்பவில்லை . நீங்கள் எழுப்பி விடாதீர்கள் .தூங்கட்டும் ” புவனா சொல்ல வேலாயுதம் சரியென்று விலகுவதை உணர்ந்தாள் .

” அங்கே நிறைய வேலை போலங்க .கமலிக்கு கஷ்டமாக இருக்குமோ ? ” புவனா கவலைப்பட ,

” விடிந்த்தும் நான் கமலிகிட்ட பேசுகிறேன் . கஷ்டமாக இருந்தால் அந்த வேலையை விட்டு விடச் சொல்லலாம் “

” சரிங்க .நீங்க படுங்க .நான் போய் வேலையை பார்க்கிறேன். ” புவனா அறையை விட்டு வெளியேறுவதும் அப்பா பாய் விரித்து படுப்பதும் சத்தங்களாக கேட்க விழி திறக்காமலேயே இருந்தாள் கமலினி .அவள் மனம் முழுவதும் குற்றவுணர்வு .டீ கமலி நீ உன் அப்பா , அம்மாவிற்கு துரோகம் செய்கிறாய் .அவள் மனட்சாட்சி அவளை உறுத்தியது .



அப்பா நைட் டியூட்டி முடிந்து வந்திருக்கிறாரென்றால் அதிகாலை ஐந்து மணி .இந்த நேரம் வீட்டில் புவனா அடுப்படிக்குள் நுழைய வேண்டிய நேரம் .கனகவல்லி குடும்பத்தாருக்கு ஏழு மணிக்கு மேல்தான் பொழுது விடியும் .கமலினி கண்களை திறந்து பார்த்தாள். அறைக்குள் மசமச இருட்டு . ஏனோ இந்த இருட்டு அவளுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் இன்னமும் சிறிது நேரத்தில் விடிந்து விடுமே …கொலைக் குற்றவாளி போல் பகலுக்கு பய்ந்தாள் அவள் .

சை …என்னை  இந்த நிலைமையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டானே …எவ்வளவு நம்பினேன் அவனை. நேற்றெல்லாம் எவ்வளவு உயரத்தில் வைத்திருந்தேன் அவனை .நம்பி பழகிய பெண்ணிடம் இப்படி மோசமாக நடந்து கொள்பவன் ஒரு ஆண் பிள்ளையா …? அயோக்கியன் .இனி அவன் முகத்தில் விழிக்கவே கூடாது .கமலினி அன்றே தனது ராஜினாமாக் கடிதத்தை கொடுக்க முடிவு செய்தாள் .அந்த முடிவை அவள் எடுத்த நொடி அவள் போன் ஒலித்தது .

தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவை ஒலி எழுப்பாமல் இருக்க சத்தத்தை சைலன்டில்  அவசரமாக போட்டு விட்டு பார்க்க அழைத்துக் கொண்டிருந்த்து பாரிஜாதம் .கடவுளே …இவர்கள் .இவர்களை மறந்தே போனேனே .சற்று முந்தைய தனது திட்டம் பிசுத்துப் போவதை நிராசையுடன் பார்த்தபடி  போனை எடுத்துக்  கொண்டு அறையை விட்டு ஹாலை கடந்து முன் வராண்டாவிற்கு வந்தாள் .

” ஹலோ மேடம் சொல்லுங்க .ஏன் இவ்வளவு காலையில் கூப்பிடுகிறீர்கள. ? ஏதாவது பிரச்சனையா ? “

” ஆமாம் .ஆனால் நீ எப்படி இருக்கிறாய் கமலினி .நேற்று பாதியில் லீவ் போட்டு விட்டு போனாயே .உடம்பு எப்படி இருக்கிறது ? “

” இப்போது பரவாயில்லை மேடம் .நன்றாக இருக்கிறேன் .நீங்கள் சொல்லுங்கள் “

” இவ்வளவு அதிகாலையில் உன்னை அழைக்கவா என்ற தயக்கம்தான் கமலினி .ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை .உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை என்றாலும் , ஒரு வார்த்தை கேட்கலாமென்றுதான் அதிகாலை போன் செய்தேன் .”

” என்ன மேடம் ..? ஏன் இவ்வளவு பதட்டம் ? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் “

” வ …வந்து விஸ்வா நேற்று இரவு வீட்டிற்கு வரவில்லை .அத்தை பாவம் ரொம்பவும் பயப்படுகிறார்கள் .உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்கத்தான் …”

கொஞ்சம் மனம் துணுக்குற்றாலும் அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் ” சௌபர்ணிகாவை தேடுவது போல் தேடுகிறீர்களே மேடம் . எங்கேயாவது ப்ரெண்ட்ஸோடு போயிருப்பார் .வந்து விடுவார் ” என்றாள் சமாதானமாக .

” இல்லை கமலினி .விஸ்வா அப்படியெல்லாம் ப்ரெண்ட்ஸோடு ஊர் சுற்றுபவர் கிடையாது .கடையை விட்டால் வீடுதான் .அப்படியே பிசினஸ் மீட் , ப்ரெண்ட்ஸ் மீட் என்றாலும் அத்தையிடம் சொல்லாமல் போகவே மாட்டார் .அத்தோடு இன்று போனை வேறு அணைத்து வைத்திருக்கிறார் .அதுதான் மிகவும் பயமாக இருக்கிறது “

பாரிஜாத்த்தின் பயம் இப்போது கமலினிக்கு வந்து விட்டது . போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு , வீட்டிற்கும் ஒன்றும் சொல்லாமல் இவன் எங்கே போனான் ? கமலினியின் இதயம் தாறு மாறாக துடிக்க தொடங்கியது .உடலெல்லாம் வியர்த்து கொட்ட துவங்கியது .



” மேடம் நான் எனக்கு தெரிந்த வரை  பார்க்கிறேன். ஏதாவது தகவல் தெரிந்தால் உங்களுக்கு சொல்கிறேன. ” வேகமாக பாரிஜாத்த்தின் போனை கட் செய்து விட்டு , விஸ்வேஸ்வரனின. போனுக்கு கால் செய்தாள் .சுவிட்ச் ஆப் என்றது .

என்ன ஆயிற்று ? எங்கே போனான் ? சிறிது நாட்களாக விஸ்வேஸ்வரனின் நேரமையான குணத்தை நன்கு அறிந்து வைத்திருந்தாள் கமலினி . அவன் சொன்ன  நேர்மைக்குசற்றும் சம்பந்தமற்று நேற்று நடந்து விட்டோமே என மனம் வருந்தி …அதனால் ஏதாவது விபரீத முடிவற்கு போய்விட்டானா …?  
யோசிக்க யோசிக்க கமலினிக்கு மயக்கம் வருவது போல் இருந்த்து .வாசல் கதவை திறந்து வாசல்படியில் இடிந்து போய்  அமர்ந்து விட்டாள் .

மேலும் இரு முறை அவனது போனுக்கு கால் செய்து அதே பதிலை பெற்றவள் சோர்வுடன் தலையை பக்கவாட்டு சுவரில் சாய்த்தாள் .அவளையறியாமல் அவள் கண்கள் கலங்கி நீர் வடிந்த்து .எங்கே …எப்படி …அவனை தேடப் போகிறேன்?

அப்போது அவளது போன் ஒலித்தது . வேகமாக எடுத்துப் பார்த்தவள் துள்ளாத குறைதான் . விஸ்வேஸ்வரன்தான் அழைத்துக் கொண்டிருந்தான் .

What’s your Reaction?
+1
32
+1
16
+1
2
+1
1
+1
3
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

Recent Posts

மகாபாரதக் கதைகள்/அனுமான் வந்த கதை..!

மகாபாரதத்தில் அனுமான் வந்த கதை..!மகாபாரத இதிகாசத்திலும் அனுமார் தோன்றியுள்ளார். ராமாயணத்தில் அவருடைய அதிமுக்கிய பங்கை யாரும் மறந்திருக்க மாட்டோம். ஆனால்…

47 mins ago

காவல் தெய்வங்கள்/வாழைத் தோட்டத்து அய்யன் கதை

வாழைத் தோட்டத்து அய்யன் துணை பற்றி  இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்: வாழையின் மகிமை – அந்த  ஊரின் தலையாய…

49 mins ago

நாள் உங்கள் நாள் (30.04.24) செவ்வாய்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஏப்ரல் 30.04.24 செவ்வாய்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - சித்திரை 17 ஆம்…

51 mins ago

இன்றைய ராசி பலன்(30.04.24)

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள,…

53 mins ago

ஓ.. வசந்தராஜா..!-4

4 "அக்கா அவசரப்பட்டு நீயே எதையாவது நினைத்துக் கொண்டு உளறாதே" அஸ்வினி அதட்டினாள். ஏனோ அவளுக்கு எரிச்சலாக வந்தது.  கோபமாக…

12 hours ago

வெயிலுக்கு இப்படி இதமான மிக்ஸ் ஃப்ரூட் கஸ்டர்ட் செய்யது சாப்பிடுங்க!

எப்ப பாத்தாலும் குழந்தைங்க ஸ்நாக்ஸ் கேட்டா அவங்களுக்கு வடை போண்டா கட்டில் பிரெஞ்ச் ப்ரைஸ்ன்னு இதையே செஞ்சு கொடுக்காம கொஞ்சம்…

12 hours ago