Categories: Serial Stories

ஓ..வசந்தராஜா..!-2

2

“ராஜ் ஹோட்டல்ஸ் நிறுவனர் வசந்த் ராஜ்” என மைக்கில் அறிவிக்கப்பட, அஸ்வினிக்கு அவனை ஞாபகம் வந்துவிட்டது. அவன் தமிழ்நாட்டில்… இல்லை அநேகமாக தற்போது இந்தியாவில் கூட மிகப் பிரபலமாகி கொண்டிருக்கும் செப். இவன் சமைத்துக் காட்டும் வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலம்.

 சைந்தவிக்கு இவன்தான் மானசீக குரு. அவளுடைய போனிலோ வீட்டில் டிவியிலோ என எந்நேரமும் இவனுடைய வீடியோக்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பாள். அப்படி அங்கும் இங்கும் நடக்கும் போது அடிக்கடி கண்ணில் பட்டதால்தான் இவன் முகம் பரிச்சயமானதாக அஸ்வினிக்கு தோன்றியிருக்கிறது.

 எவ்வளவு இனோவேட்டிவ்(innovative)… என்ன கிரியேட்டிவிட்டி(creativity) என்று சமையலில் இவனுடைய பண்டங்களை பாராட்டியபடி இருப்பாள். இவனுடைய ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை கிடைத்தால் கூட போதும், செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று புலம்புவாள்.

 அது சரி ஐந்து நட்சத்திர ஹோட்டல் சமையல்காரனுக்கு இந்த தொழில்நுட்பக் கல்லூரியில் என்ன வேலையாம்? இரும்படிக்கிற இடத்திற்கு ஈ ஏன் பறந்து வருகிறது…தனக்குள் எண்ணி சிரித்தபடி தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி. அவளுக்கு மேடையோரமாக சிறு மறைப்பு வைத்து இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இவளை மேடையில் இருப்பவர்கள் பார்க்க முடியாது. ஆனால் அரங்கத்தையும் மேடையையும் இவளால் மிக நன்றாகவே பார்க்க முடியும்.

ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஃபுல் சூட்டில் மேடையின் பக்கவாட்டுப் படிகளேறி மேலே வருபவனை எதிர் திரை மறைவில் அமர்ந்து  அகன்ற விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“எந்நேரமும் இவன் மூஞ்சியைத்தான் பார்த்துக் கொண்டிருப்பாயா? போரடிக்கவில்லை? அப்படி என்ன டிஷ் இது?”டிவியில் எதையோ அரைத்து பச்சை கலரில் வடிகட்டி கொண்டிருந்த அவனை சலிப்புடன் பார்த்தபடி ஒருநாள் அஸ்வினி கேட்க, உட்புறம் அம்மாவின் தலை தெரிகிறதா என திரும்பி பார்த்துவிட்டு அஸ்வினியிடம் கண்சிமிட்டினாள் சைந்தவி.

 “ஏதோ கிண்டிக் கொண்டிருந்தான். கவனிக்கவில்லையே…

இன்று ஓவர் மேன்லியாக இருந்தானா அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்”

” அடச் சை  உன்னைப் போய் ரொம்ப நல்ல மாதிரியாக நினைத்து விட்டேனே” அக்காவை கிண்டல் செய்தபடி டிவிக்கு பார்வையை திருப்பிய அஸ்வினிக்கு பெரிய அளவில் அவனிடம் ஒன்றும் தெரியவில்லை. செப் தலையில் வைத்திருக்கும் மிகப்பெரிய வெள்ளை தொப்பியை வைத்துக்கொண்டு மேலாக குக்கிங் கவுனையும் மாட்டிக் கொண்டிருப்பவனிடம் என்ன கவர்ச்சியை பார்க்க முடியும்!

” அடப் போக்கா எனக்கு ஒன்றும் தெரியவில்லை” சலித்தபடி எழுந்து போய்விட்டாள். ஆனால் இன்று இதோ இப்படி ஃபுல் சூட்டில் எதிரே வந்து கொண்டிருப்பவன் மிக நிச்சயமாக கவனிக்கத்தக்க ஒரு கவர்ச்சிகரமான ஆண் என்பதில் அஸ்வினிக்கு மாற்றுக் கருத்து எழவில்லை.

 எதிர்ப்புற படிகளிலேறி அவன் மேடையில் போட்டிருந்த நாற்காலியில் வந்து அமரும் வரை கண்சிமிட்டாமல் அவனையே பார்த்தபடி இருந்தாள். “மெஜஸ்டிக் அன்ட் மேன்லி(majestic and manly)  அவள் இதழ்கள் அவளையறியாது முணுமுணுத்தன.

 மேடையில் அவன் பேச போகும் நேரத்தை இப்போதே எதிர்பார்க்கத் துவங்கினாள் அஸ்வினி. திடுமென ஒரு எண்ணம் தோன்ற தனது போனை எடுத்து மேடையில் அமர்ந்திருந்தவனை வீடியோ எடுத்து அதனை சைந்தவிக்கு அனுப்பினாள்.

” ஏய் எங்கேடி இருக்கிறாய்? இவரை எங்கே பார்த்தாய்?” உடனே அவளிடமிருந்து மெசேஜ் வந்தது.

” எங்கள் காலேஜ் ஃபவுண்டர்ஸ் டே விழாவில் சீப் கெஸ்ட்”

” அடிப்பாவி முதலிலேயே சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே”

” எனக்கே தெரியாதுக்கா. இப்போதுதான் பார்த்தேன்”

 அதன் பிறகு சைந்தவியிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை.அவளிடம் மறைத்து விட்டேன் என்று கோபமாக இருப்பாளாயிருக்கும் என்றெண்ணியபடி தன் வேலையை தொடர்ந்தாள். 

மேடையில் மைக்குகளின் சப்தத்தை, இரைச்சல்களை கட்டுப்படுத்துவது, மேடை விளக்குகளை நேரத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றி ஒளிர வைப்பது, ஆங்காங்கே வைத்திருக்கும் வானவெடிகளை சரியான நேரத்தில் வெடிக்க வைப்பது போன்ற விஷயங்களை தனது மடிக்கணினி மூலமே செய்து கொண்டிருந்தாள்.



 அரை மணி நேரம் கழித்து வசந்த் ராஜ் பேசுவதற்காக எழுந்து போய் மைக் முன்னால் நின்றான். அவனுடைய உயரத்திற்கு மைக் சிறியதாக இருக்க சரி பண்ண வேண்டியவர் அப்போதுதான் சற்று தள்ளி போய் பேப்பர் கப்பில் டீ குடித்துக் கொண்டிருந்தார். கல்லூரி நிர்வாகி கோபத்துடன் பக்கவாட்டில் திரும்பி பார்க்க அஸ்வினி வேகமாக எழுந்து ஓடி வந்து மைக்கை அட்ஜஸ்ட் செய்து உயர்த்தி வைத்தாள்.

” சாரி சார்” மெல்லிய குரலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். “இட்ஸ் ஓகே… தேங்க்ஸ்” என்றவன் மைக்கை லேசாக தட்டி சப்தத்தை சரி செய்து பார்க்க, “நீங்கள் பேசுங்கள் சார்.நான் என் சிஸ்டத்திலேயே அதை சரி பண்ணி விடுவேன்”என்று தனது திரை மறைவு இருப்பிடத்தை காட்டிவிட்டு மீண்டும் ஓடி வந்து தன்னிடத்தில் அமர்ந்தாள்.

 மைக்கின் செயல்பாடுகளை அவள் தன் லேப்டாப்பிலேயே சரி செய்வதை ஓரக்கண்ணால் கவனித்தபடி பேச ஆரம்பித்தான் வசந்த் ராஜ். “நான் யார் என்பது இங்கே சிலருக்கு தெரிந்திருக்கும். பலருக்கு தெரியாமலிருக்கும். தெரிந்தவர்கள் இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று நினைத்திருப்பீர்கள்”

 அவன் பேச்சைக் கேட்டதும் வெளியே தலை சாய்த்து எட்டிப்  பார்த்தாள் அஸ்வினி.அந்த நேரம் அவனும் அவளை…அவளது வியந்த விழிகளை பார்த்தான். சமையல்காரனின் பேச்சு போல் தெரியவில்லையே… அவள் ஒரு வித ரசனையோடு அவன் பேச்சை கவனிக்க துவங்கினாள்.

“இந்த காலேஜின்  பவுண்டர்களில் ஒருவனாக இணைந்திருக்கிறேன் என்பதை தாண்டி இப்போது இந்த மேடையில் நான் நிற்பதற்கு காரணம் இருக்கிறது. அடுத்த ஆண்டிலிருந்து உங்கள் கல்லூரியில் கேட்டரிங் ஒரு பிரிவாக பயிற்றுவிக்கப்பட போகிறது. அந்த பிரிவின் தலைவர் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நான் இப்போது இந்த மேடையில் இருப்பது நியாயம் என்றுதான் நினைக்கிறேன் “

அவன் பேசிக் கொண்டிருக்க இதென்ன ட்விஸ்ட்… இந்த கல்லூரியில் கேட்டரிங்கா… என்று அவனை பார்த்துக் கொண்டிருந்த அஸ்வினியின் தோள் பின்னிருந்து சுரண்டப்பட்டது. திரும்பிப் பார்த்தவள் திகைத்தாள். சைந்தவி நின்று கொண்டிருந்தாள்.

” அக்கா நீ எங்கே இங்கே?”

” நம் வீட்டிலிருந்து அரை மணி நேரம்தானே உன் காலேஜ்?ஸ்கூட்டியை விரட்டிக் கொண்டு வந்தேன்” என்றவள் பேசிக் கொண்டிருந்த வசந்த் ராஜை ஆவலாக பார்த்தாள். “வாவ் எவ்வளவு அழகாக இருக்கிறான் பார்த்தாயா?”

” அக்கா யார் காதிலாவது விழுந்து விடப் போகிறது”

” அங்கே பார் அந்த நுழைவு வாயிலில் இருந்து இந்த மேடை வரை இவ்வளவு தூரத்தை நான் கடந்து வருவதற்குள் இங்கே கூடியிருப்பவர்களில்  80 சதவீதம் பேர் அடுத்தவர் காதுகளைப் பற்றிய கவலையின்றி இவனைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் பேசுவதில் என்ன வந்து விடப் போகிறது”

” அது சரி, ஆமாம் உன்னை யார் உள்ளே விட்டார்கள்?”

” உங்கள் காலேஜ் ஸ்டுடென்ட் என்று நினைத்திருப்பார்கள்” பெருமிதமாய் தன்னை குனிந்து பார்த்துக் கொண்டாள் சைந்தவி.அஸ்வினி வந்த சிரிப்பை அடக்கி கொண்டாள்.

” அஸ்வினி உன் அக்கா வந்தார்கள் பார்த்தாயா?” மேடையின் மறுமறைவில் நின்றபடி உடன் பயிலும் சுரேஷ் ரகசிய குரலில் கேட்க சைந்தவி இங்கே வந்த வழி அஸ்வினிக்கு புரிந்தது. இடையில் தொங்கிய ஸ்கிரீனை லேசாக விலக்கி சுரேஷிற்கு தமக்கையை காட்டினாள்.அவன் தலையசைத்து நகர்ந்தான்.

“என் பெயரைச் சொல்லி மேடை ஏறினாயாக்கும்?” என்றாள்.

“போடி இவள் பெரிய காலேஜ் செலிபிரிட்டி”  நொடித்த சைந்தவி “வெளியிடத்தில் குறிப்பாக உன் காலேஜில் என்னை அக்கா என்று கூப்பிடாதே என்றிருக்கிறேனே, பெயர் சொல்லிக் கூப்பிடு” என்று அதட்டினாள்.

 மேடையில் வசந்த் ராஜ் தனது பேச்சை முடித்திருக்க எல்லோரோடு சேர்ந்து சைந்தவியும் படபடவென்று கைகளை தட்டினாள்.”ஏய் நான் போய் ஒரே ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்கிறேன்”

” அக்கா அவர் நடிகர் இல்லை. என்ன இது காலேஜில் வைத்துக் கொண்டு இன்டிசென்டாக…” அஸ்வினி ஆட்சேபித்து கொண்டிருக்கும் போதே சைந்தவியின் விழிகள் வட்டமாய் விரிந்தன.” ஏய் இங்கே வர்றான்டி” 

வேகமாக திரும்பிப் பார்த்த அஸ்வினி திகைத்தாள். அவனது பேச்சு முடிந்ததும் அவனுக்கான இருக்கையில் அமராமல் இவர்கள் இருந்த திரைமறைவு நோக்கி வந்து கொண்டிருந்தான் வசந்த் ராஜ்.



What’s your Reaction?
+1
32
+1
20
+1
1
+1
0
+1
3
+1
0
+1
1

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ-7

7 வாசலில் பிரம்மாண்டமான நான்கு தூண்களை தாங்கி நின்ற அந்த பெரிய வீட்டின் தோற்றம் ஏதோ ஓர் இந்திப் படத்தில்…

24 mins ago

அன்னையர் தினம் வரலாறு

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னையர் தினம் தோன்றிய வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, அன்னையர் தினம்…

26 mins ago

உண்மையை உடைத்த பாக்யா-பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சோபாவில்…

28 mins ago

இப்படி நடிக்க மோகனால் மட்டுமே முடியும்… கே. பாக்கியராஜ்

80 களில் மிக பிரபலமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் கே. பாக்கியராஜ். இயக்குனர் மட்டுமல்லாமல் திரைக்கதை அமைப்பாளர், வசன…

30 mins ago

ஆசை மகனே! (அன்னையர் தின ஸ்பெஷல் -சிறுகதை)

அன்னையர் தின ஸ்பெஷல்  (சிறுகதை)  மாலதி அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். பள்ளிக்குச் சென்றிருந்த குழந்தைகள் இருவரையும் பாதியிலேயே அழைத்து…

3 hours ago

வெற்றி பயணம் ஏவி.எம்..நிறுவனம்!

பிசினஸ் என்பது தராசு போல. அதில் ஏற்ற இறக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால், துணிச்சலான முடிவு, சரியான திட்டமிடல்கள் மூலம்…

3 hours ago