49

உற்சவங்கள் உருகி நிற்கும்

நம் விழா பொழுதுகளில்

உளி கொண்டு சிதைத்துக் கொண்டிருக்கும்

இந்த குளிர் காற்றிற்கு

என்ன பெயரிட ?



உங்கள் கணவருக்கு ஒன்றுமில்லை சிஸ்டர் .சாதாரண மயக்கம்தான் .இதோ இப்போது எழுந்துவிடுவார் . ” மாலிக் நிதானமான குரலில் சொன்னான் .

” அடப் பாவி ஏன் இப்படி செய்தாய் …? இவரை ஏன் தூக்கி வந்தாய் …? “

” எங்களுக்கும் கொஞ்சமே கொஞ்சம் மூளை இருக்கிறது சிஸ்டர் .பாஸ்வேர்ட் தெரியாத லேப்டாப்பை எங்கள் கைகளில் வெறுமனே கொடுத்துவிட்டு உங்கள் தேவையை நீங்கள் நிறைவேற்ற திட்டமிட்டால் , அதில் ஒரு பகுதியாவது நாங்கள் யோசிக்க மாட்டோமா …? இந்த லேப்டாப்பின் பாஸ்வேர்ட் …” என்றவன் குனிந்து அவளருகே அமர்ந்து ” உங்கள் கணவன்தானே .” என்றான் .சாத்விகா அதிர்ந்து பார்த்தாள் .

பகபகவென சிரித்தான் . அவன் சிரிப்பு ஓநாய் ஊளையிடுவதை போல் கொடூரமாக இருந்த்து .” எங்களை அவ்வளவு இலகுவாக நினைத்துவிட்டீர்களே சிஸ்டர் …?” என்றவன் குனிந்து பனிக்குள் புரண்டு கொண்டிருந்த வீரேந்தரின் வலது கையை எடுத்தான் .அதில் ஒட்டியிருந்த பனித்துகள்களை தட்டிவிட்டு அவன் விரல்களை வருடி கட்டை விரலை தேர்ந்தெடுத்தான் .

அதனை சாத்விகாவிடம் காட்டி ” பாஸ்வேர்ட் ” என கேலியாக சிரித்தபடி தன்னிடமிருந்த லேப்டாப்பில் அந்த விரலை பதிக்க கொண்டு போனான் .திடீரென லேப்டாப் தள்ளி விடப்பட்டு பனியில் விழுந்த்து .மாலிக்கின் நெற்றியில் துப்பாக்கி பொருத்தப் பட்டிருந்த்து .சாத்விகாதான் .

” யாரும் பக்கத்தில் வராதீர்கள் .தள்ளி போங்கள் .” எல்லோரையும் எச்சரித்தாள் .” அவ்வளவு எளிதாக நீ எங்கள் நாட்டு ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியாது மாலிக் .எருந்து நால்வரும் வரிசையாக கையை கட்டி திரும்பி   நில்லுங்கள் …” சாத்விகா சொன்னது போன்றே நால்வரும் நின்றனர் .மற்றவர்கள் முகம் கோபத்தில் கொந்தளித்தபடி இருக்க , மாலிக் முகம் மட்டும் இன்னமும் சிரித்தபடியே இருந்த்து .

” எப்போதும் இப்படித்தான் இளிப்பாயா …? “

” அதென்னவோ தெரியவில்லை சிஸ்டர் ்எனக்கு உங்கள் மேல் கோபமே வர மாட்டேனென்கறது .அழகாக பார்பி பொம்மை போல் இருக்கிறீர்கள் .உங்களுக்கு பொருந்தாமல் இது போல் துப்பாக்கியெல்லாம் தூக்கலாமா ..? “

” வாயை மூடுடா நாயே .இருக்கும் நிலைமை தெரியாமல் என்ன சிரிப்பு …? “

” ஆ …பார்த்தீர்களா…நான் இப்போது வரை உங்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து கொண்டிருக்கிறேன் .நீங்கள் திடீரென்று என்னை இவ்வளவு கீழாக பேசுகிறீர்களே …? “

” உனக்கெல்லாம் என்னடா மரியாதை …? கையை அசைக்காதே .நிச்சயம் சுடுவேன் …”

” நீங்கள் இந்த அளவு யோசித்து துப்பாக்கியோடு வருவீர்களென நினைக்கவில்லை நான் .முதலிலேயே உங்களை செக் செய்திருக்க வேண்டும் . .உங்களை சிறு குழந்தையென நனைத்துவிட்டேன் “

” பேசாதே , அசையாதே …” துப்பாக்கியை வலது கையால் அசைக்காமல் அவன் பக்கம் பிடித்தபடி , இடது கையால் வீரேந்தரை எழுப்ப முயன்றாள் .

” எல்லாம் உன்னால்தான் மாலிக் . நீதான் இவளை ஆரம்பத்திலிருந்தே சாதாரணமாக நினைத்துவிட்டாய் …” வஹூப் எரிச்சலுடன் குரல் கொடுத்தான் .

” இப்போதும் நம் சிஸ்டர் சாதாரணமானவர்கள் தான் வஹீப் .அவர்களுக்கு துப்பாக்கியால் சுடெல்லாம் தெரியாது .அப்படித்தானே சிஸ்டர் …” பேசியபடி சடக்கென திரும்பி துப்பாக்கியை பிடுங்க நினைத்தவன் அதிர்ந்து நின்றான் .

” ஆனால் , நான் நன்றாக சுடுவேன் மாலிக் …” என்றபடி எழுந்து நின்றிருந்தான் வீரேந்தர் .சாத்விகாவின் கை துப்பாக்கி இப்போது அவன் கையில் இருந்த்து .சாத்விகா தெளிவான முகத்துடன் அவன் தோள்களைபற்றியபடி அருகே நின்றாள் .

முதன் முறையாக மாலிக்கின் முகத்தில் கருமை படர்ந்த்து .இல்லை இவன் ஆபத்தானவன் .இவன் எழுந்திரிக்க கூடாது .அவன் கண்கள் நிதினை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தன. என்ன வேலை செய்தாய் நீ …என அதட்டின. நிதினோ திடுமென எழுந்து நின்ற வீரேந்தரை ” பே ” என வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தான் .

” நீங்கள் சொன்ன அளவு மயக்க மருந்துதான் கொடுத்தேன் மாலிக் .இவர் எப்படி அதற்குள் எழுந்தார் என தெரியவில்லையே .போச்சு …கேப்டன் ஒரு குண்டில் நாலு பேர் தலையை பெயர்த்தெடுப்பாரே …நான் என்ன ஆகப் போகிறேனென தெரியவில்லையே …” புலம்ப தொடங்கினான் .

” வாயை மூடுடா முட்டாள் …” மாலிக் அவனிடம் சீறினான் .பரபரத்து சுற்றிய அவன் கண்கள் சாத்விகாவிடம் நிலைத்த போது , சாந்தமானது . இப்போது மீண்டும் அவன் முகம் புன்னகைக்க தொடங்கியது .

” உன் பாக்கெட்டில் இருக்கும் பென்டிரைவை எடுத்து என்னிடம் கொடு மாலிக் …” வீரேந்தர் புன்னகை ததும்பி நிற்கும் அவன் முகத்தை கூராக பார்த்தபடி கேட்டான் .

” அது என்னுடைய இரண்டு வருட உழைப்பு கேப்டன் “

” எங்கள் நாட்டுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டு எங்களிடையேயே உங்களுக்கு ஆள் பிடித்து , அவர்கள் விபரங்களை பென்டிரைவில் ஏற்றி வைத்துக் கொண்டிருக்கிறாய் .இதெல்லாம் ஒரு உழைப்பு ..ச்சீ .கொண்டா அதை .எங்கள் நாட்டு பச்சோந்திகளை எனக்கு தெரியவேண்டும் ” கையை நீட்டினான் .



” பச்சோந்திகள் நீங்களா …நாங்களா …? பாவங்களை நீங்கள் செய்துவிட்டு பழிகளை எங்கள் மேல் தூக்கி போடுவீர்களே ..மறந்து விட்டீர்களா கேப்டன் …? ” மாலிக்கின் குரல் இறுகியிருந்த்து .

” எதையும் நினைத்து பார்க்க நான் விரும்பவில்லை. பென்டிரைவை கொடு .”

” உங்களுக்கு தெரியுமா சிஸ்டர் …அந்த காஷ்மீர் சம்பவத்தை நீங்கள் அறிவீர்களா …? இளம் பெண்ணொருத்தி ஐந்து பேரால் சீரழிக்கப்பட்டாளே …உங்களுக்கு தெரியுமா …? ” மாலிக் சாத்விகாவிற்கு மாறினான் .

” வாயை மூடு மாலிக் .பேசினால் சுடுவேன் …” வீரேந்தரின் கை ட்ரிக்கரில் பதிய , சாத்விகா அதை தடுத்தாள் .” கொஞ்சம் பொறுங்கள் …”

” அந்த சம்பவம் எனக்கு நன்றாக தெரியும் .ஐந்து பாகிஸ்தான் மிருகங்களால் அந்த பெண் சிதைக்கபட்டாள் .கொடுமையான அந்த சம்பவத்தை நான் அறிவேன் .அதை எதற்கு இப்போது பேசுகிறாய் …? “

” உண்மையை உங்களுக்கு தெரியப்படுத்த , இந்தியர்களின் கபடங்களை நீங்கள் அறிந்து கொள்ள , இந்தியா உங்களை போல் பூப்போன்றவர்களுக்கு உரிய இடமல்ல என உறுதி செய்ய …உங்கள் வாழ்வின் ஆரம்ப இடமாக இருந்த அந்த சம்பவத்தை நிகழ்த்தியது பாகிஸ்தானியர்கள் அல்ல சிஸ்டர் .உங்கள் இந்தியர்களேதான் .”

” என்ன …? ” அதிர்ந்த சாத்விகாவின் விழிகள் வீரேந்தரை நோக்க , அவன் அவள் பார்வையை சந்திக்காமல் மாலிக்கை கொலை வெறியுடன் பார்த்து கொண்டிருந்தான் .அந்த தோற்றமே சாத்விகாவிற்கு மாலிக்கின் சொற்களிலிருந்த உண்மையை விளக்கியது .

” நேரிடையாக எங்கள் இயக்கத்தை தடை செய்ய முடியாத உங்கள் ராணுவத்தினர் , பல குயுக்தி வழிகளை கையாண்டனர் .அதில் ஒன்று எங்கள் இயக்கத்தினரின் சீருடையை அணிந்து , எங்களுக்குள்ளேயே ஊடுறுவி எங்களை கொல்வது .இந்த குள்ளநரி திட்டத்தை வகுத்தது யார் தெரியுமா …? கேப்டன் சக்கரவர்த்தி . அது போல் எங்களின் உடையணிந்து எங்களுடனேயே போரிட்ட ஐந்து உங்கள் நாட்டு ராணுவத்தினர்தான் அன்று அந்த கொடுமையை நடத்தியது .உங்கள் பிறப்பிற்கு வித்திட்டது .இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா சிஸ்டர் …? “

” கடவுளே ….” முனகியபடி அதிர்ச்சி தாளாமல் பனியில் முட்டியிட்டு அமர்ந்து விட்டாள் சாத்விகா .

” சாத்விகா மனதை தளர விடாதே .இதை பற்றி நாம் பிறகு தெளிவாக பேசலாம் .இப்போது எழுந்திரு …” சாத்விகாவிடம் ஒரு கண்ணும் , அவர்களிடம் ஒரு கண்ணுமாக பேசினான் வீரேந்தர் .

” இதையெல்லாம் ரேணுகாதேவி அறிவார்கள் .இந்தியா மீது எழுந்து விட்ட விரக்தியில்தான் அவர்கள் தனது கடைசி காலத்தை பாகிஸ்தானில் கழிக்க நினைத்து அங்கே வந்துவட்டார்கள் .உங்களை அவரிடம் அழைத்து போய் எல்லா விபழங்களையும் கேட்க செய்யலாமென நினைத்திருந்தோம் .   அதனை அறியாமல் நீங்கள் எங்களிடமே துப்பாக்கி நீட்டி விட்டீர்கள் …”

” நிறைய பேசிவிட்டாய் மாலிக் ்போதும் நிறுத்தி கொள் ” வீரேந்தரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து மாலிக் தொடர்ந்தான் .

” உங்கள் தாயை சீரழித்தவர்கள் பக்கமா நீங்கள் நிற்க போகிறீர்கள் சிஸ்டர் .? நான் சும்மா பேச்சுக்கு உங்களை சிஸ்டரென அழைக்கவில்லை .மனமார உங்களை என் தங்கையாகவே நினைக்கிறேன் .வாருங்கள் சிஸ்டர் .நம் நாட்டிற்கு போய்விடலாம் .அங்கே உங்களுக்கு ஒரு மகாராணி போன்ற வாழ்க்கை அமைத்து தருகிறோம் “



” சாத்விகா இவன் பேச்சை நம்பாதே .அன்று தெரியாமல் நடந்துவிட்ட அந்த தவறை சொல்லிக் காட்டியே இவன் கும்பல் முதலில் அப்பாவை தங்கள் பக்கம் இழுக்க பார்த்தது .அப்பாவின் ஓய்வுக.கு பின் எனக்கு மூளைச்சலவை செய்ய முயன்றனர் ்இப்போது உனக்கு .இவர்களை நம்பாதே ….”

” நாங்கள் பொய் எதுவும் சொல்லவில்லை சிஸ்டர் .உண்மையைத்தான் சொன்னோம் .சரியான சாட்சிகளுடன் அதனை உங்களுக்கு விளக்கவும் தயாராக இருக்கிறோம் .எழுந்து கொள்ளுங்கள் சிஸ்டர்.எழுந்து உங்கள் கணவர் கையிலிருக்கும் துப்பாக்கியை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் .” 
சாத்விகா மெஸ்மெரிக்கப் பட்டவளை போல் எழுந்து நின்றாள் .வீரேந்தர் அவளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த போதே அவனை நெருங்கி , அவன் கை துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டாள் .தனது இரு கைகளாலும் அழுத்தமாக துப்பாக்கியை பிடித்தபடி சேப்டி கேட்சை விடுவித்தாள் . ட்ரிக்கரில் விரல் வைத்தாள் .

நினைத்தது நடந்த மகிழ்வில் மாலிக் முகம் மலர கைகளை இறக்கி திரும்பிக் .  கொ ண்டான் .வீரேந்தர் முகம் வெளிறியது .

” வீரேந்தர் நீங்கள் மாலிக் பக்கம் போங்கள் ” சாத்விகாவின் குரல் உத்தரவாக ஒலித்தது .

What’s your Reaction?
+1
15
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

ஓ.. வசந்தராஜா..!-5

5 "அது… வந்து… அக்கா" அஸ்வினி தடுமாறினாள். " என்னடி பெரிய இவள் மாதிரி எனக்கு ஆறுதல் சொல்ல வந்தாயே,…

5 hours ago

கோபியை ஓட விட்ட பாக்கியா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி டீ…

5 hours ago

விமர்சனம்: ஒரு நொடி

நம்ம தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு? சில மாதங்களாக குறைந்த எண்ணிக்கை படங்கள்தான் ரிலீஸ் ஆகுது. ரிலீஸ் ஆகும் படங்களில்…

5 hours ago

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமான சூப்பர் தர்பூசணி மில்க்‌ஷேக்…

கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும்…

5 hours ago

நந்தனின் மீரா-33

33 முகாந்திரங்களற்ற உன் முன்கோப பொழுதுகளை முதிர்ந்த நெல்லென சமனித்து கொள்கிறேன் , சலித்துக்கொள்ளாதே சாணக்யா மணம் கமழும் உன் தந்திர…

9 hours ago

சொதப்பும் கோமாளிகள்.. நடுக்கடலில் தத்தளிக்கும் CWC-5

விஜய் டிவியில் ஒரு காலத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. சமையலில் காமெடியை…

9 hours ago