5

“ஏண்டி கோமளம்,” ” இன்னும் பத்து நாளைக்குள் நாம பட்டணம் கண்டிப்பாக போயாக வேண்டும்”.

ஏன்னா; ” உங்க வீட்டு ஆளுங்களோட கல்யாணம்”. ” எனக்கு அவாளை யாரையும் சுத்தமா பிடிக்காது”, “நான் வர்லை ”  “நீங்க போறதுனா போயிட்டு வாங்கோ”!.
“அது எப்படி”, நீ இல்லாம நான் மட்டும் போனா நல்லா இருக்கும்னு சொல்றியா, அசட்டுத்தனமாய் ஏதாவது உளறிட்டு  இருக்காதே!.

ஆமான்னா ;  ” நான் அசடுதான் ” உங்க வீட்டு ஆட்களை பொறுத்தவரைக்கும் நான் ஆசடாவே  இருந்துட்டு போறேன். அதுக்காக உங்க ஆத்து விசேஷத்துக்கு எல்லாம் வந்து,  ” ஈ “ன்னு பல்லை இளிச்சுன்டு  நிக்கிறதுக்கு என்னால முடியாது.

கோமளா பழசெல்லாம்  மறந்துருடி. இந்த மாதிரி கல்யாணம் காட்சியில நாம ஒண்ணு சேரலேனா எப்ப சேர்ர தாம்?.

எதன்னா மறக்க சொல்றேள்?உங்கள மந்திரவாதி என்று சொன்னாலே அதையா? இல்ல என்ன பட்ட மரம் என்று சொன்னாலே அதையா ?பத்து பேருக்கு மத்தியில் எனைய ‘மலடினு’ சொன்னாவா தானன்னா  அவாலாம். ” என்னால முடியாதுன்னா;”, நான் உங்களை தடுக்கல  , நீங்க போயிட்டு வாங்கோ , என்ன கட்டாயப்படுத்தாதேள்.
என்னடி இப்படி சொல்ற, “உன் ஆத்துக்காரி எங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது”?

“அந்த மலடி செத்துப் போயிட்டான்னு சொல்லுங்கோ”! கண்ணில் நீர் வழிய நறுக்கென்று பேசிவிட்டு அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள் கோமளம். இனி அவளிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.

அய்யருக்கு தன் மனைவி மீது எப்பொழுதுமே பாசம் அதிகம். ஒரு நாளும் அவளை விட்டு அவர் பிரிந்ததில்லை. இப்பொழுது, பட்டணம் போய் வருவதானால் முழுவதாக மூன்று, நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிடும். அத்தனை நாட்கள் அவளை தனியாக விட்டு விட்டு செல்வதற்கு அவர் மனது இடம் தரவில்லை.

இதில் குறிப்பிட்ட இடைவெளி நாளில் தீபாவளிப் பண்டிகை வேறு வருகிறது. பண்டிகையும் அதுவுமாக அவள் மட்டும் தனியாக வீட்டு வேலைகளை பார்ப்பது என்பது அய்யரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.




“கோமளம்” ….மனைவியின் பின்புறம் நின்றபடி, அவளது தோளைப் பிடித்து தன் புறம் திருப்பினார் ஐயர்.

சொல்லுங்கோ!! கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடி, ஐயரின் இழுப்புக்கு வளைந்து கொடுத்து அவர் புறம் திரும்பினாள் கோமளத்தம்மாள்.

‘ சரி ‘ “நான் மட்டும் போயிட்டு வந்துடறேன்”. ஆனா, நீ மட்டும் வீட்ல தனியா இருக்கிறதுல எனக்கு பிரியம் இல்ல. அதுனால, வீட்டுல உனக்கு வீட்டு வேலைக்கு ஒத்தாசையா ஒரு ஆளை வைத்து விட்டு போயிட்டு வாரேன். இதனை மறுக்க மாட்டியே?

சரின்னா ; உங்க இஷ்டப்படி செய்யுங்கோ…..

‘ சரி ‘ முதல்ல வீட்டு வேலைக்கு ஆளை பார்க்கிறேன். சொன்னதோடு நில்லாமல் உடனடியாக வேலைக்கு ஆள் தேடும் படலத்தில் இறங்கிவிட்டார் ஐயர்.

நாட்கள் நகர ஆரம்பித்தன. ஆனால், வீட்டு வேலைக்கு ஆள் கிடைத்தபாடில்லை. அவரும் தனக்கு தெரிந்தவர்கள் அத்தனை பேரிடமும் சொல்லி வைத்துவிட்டார். ஆனால், அவர் நினைப்பது போல் வேலைக்கு ஆள் கிடைப்பது அவ்வளவு இலகுவாக இல்லை.

கோமளம் நான் ஊருக்கு போகிற நாள் நெருங்கி கிட்டு இருக்கு, ஆனா இன்னும் உனக்கு ஒத்தாசைக்கு ஆள் கிடைக்கல. எனக்கு என்ன செய்யறதுன்னே புரியல.

தெரிஞ்சவா, உங்க சினேகிதகாரா அத்துணை பேர் கிட்டயும் சொல்லிட்டீங்களாண்ணா?

எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். ஆனா நீ சினேகிதகாரார் அப்படின்னு சொன்ன உடனே தான் ‘ சங்கர்ராமன் ‘ ஞாபகம் வருகிறது. அவனை நான் மறந்தே போயிட்டேன். நாளைக்கு அவன பாத்து சொல்லிடுறேன்.

அந்த சங்கரராமன் ஒரு ஆளு அப்படின்னு அவன் கிட்ட  சொல்லப் போறீங்களா?, என்னமோ செய்யுங்கோ!

கோமளத்தம்மாள் உனக்கு எப்பொழுதும் சங்கர்ராமனை பிடிக்காது. இருந்தாலும் இப்போது ஆபத்துக்கு அவனிடமும் கேட்டு வைப்போம் என்று சங்கர்ராமனையும் பார்த்து ,வேலையாள் விஷயம் பேசிவிட்டு வந்தார் ஐயர்.

நாட்கள் நகர ஆரம்பித்தன. ஆனால் சங்கரராமன் மூலமாகவும், எந்த வேலையாட்களும் கிடைக்கவில்லை.

நிலைமை இப்படியே சென்றால் என்ன செய்வது? கோமளம் கண்டிப்பாக ஊருக்கு வரப்போவதில்லை .அவளை தனியாக விட்டுவிட்டு என்னால் செல்ல முடியாது. அதேநேரம் ஊருக்குப் போகாமல் இருக்கவும் முடியாது. இப்பொழுது, என்ன தான் செய்வது மண்டையைப் போட்டு பிய்த்துக்கொண்டார்  ஐயர்.

அப்பொழுதுதான், அவருக்கு அந்த எண்ணம் வந்தது. ஏன் நாம் அப்படி செய்யக்கூடாது? அவரை அவரே கேட்டுக்கொண்டார்.

” சபாஷ்”! சரியான யோசனை. அவருடைய யோசனைக்கு அவரே அவருக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டார். இந்த யோசனை மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் ஆகும். அதனால், இது அவருக்கு மிகவும் பிடித்தமானதாக போய்விட்டது.

இருந்தாலும் கோமளத்தம்மாளுக்கு தெரியாமல் சில விஷயங்களை நகட்டி ஆகவேண்டும்.  உடனடியாக அந்தக் காரியங்களில் இறங்க ஆரம்பித்தார் ஐயர்.

(தொடரும்…..)



What’s your Reaction?
+1
6
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

6 hours ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

6 hours ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

6 hours ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

6 hours ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

10 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

10 hours ago