12

அடர்த்தியான இலை பச்சை நிற சேலையில் தங்க நிற கொடிகள் பின்னி பிணைந்த மென்மையான டசர் சில்க் சேலையில் பூங்கொடி போல் வாசலில் வந்து நின்ற மருமகளை உள்ளே அனுமதிப்பதா? வேண்டாமா? குழம்பி நின்றாள் சகுந்தலா.

இவள் முன்பை விட இன்னமும் நிறம் கூடியிருக்கிறாளோ? தகதகத்து நின்ற பெண்ணை தடுமாற்றமாய் அளந்தன அவள் விழிகள்.கொஞ்சம் உயரம், ஆனாலும் வெற்றி தோளுக்குத்தான் இருப்பாள்.முகம் மட்டும் பச்சைக் குழந்தை போல்தான் இருக்கிறது.

இரண்டு வயது மூத்தவளென்று இவர்களாக சொன்னால்தான் உண்டு.ஆனால் அதை ஏன் சொல்லப் போகிறார்களாம்?

“உள்ளே வரலாமா?” கம்பீரமாய் ஒலித்த அவள் குரலுக்கு தானே பின் வாங்கி வழி விட்டாள் சகுந்தலா.

 டிரைவர் சிவஜோதி கையில் பழத்தட்டை  கொடுத்துப் போக, உள்ளே வந்தவள் “நான் திருமணம் பேச வந்திருக்கிறேன்” என அறிவித்தாள். சோபாவில் அமர்ந்து கம்பீரமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டாள்.

 மாடியிலிருந்து இறங்கி வந்த வெற்றிவேலன்,விழிகள் நிலை குத்த நின்றான். காதிலும் கழுத்திலும் வைரங்கள் மின்ன மென்பட்டில் உயிரோவியமாய் நிமிர்ந்து அமர்ந்திருந்த மனைவியை கண்டதும் தன்னையே தொலைத்தான்.

 அவனுக்கு சிவஜோதியிடம் பிடித்தது இந்த ஆளுமையும் கம்பீரமும்தான். இதில்தான் அவன் தன்னையே அவளிடம் பறி கொடுத்தான்.

எங்கே மறைந்து விடுவாளோ என்ற பயத்தில் கண்களை சிமிட்டாமல் நின்றிருந்த சகோதரனை வாஞ்சையாய் பார்த்து நின்றாள் மானசி.என்ன பேசுவதென தெரியாமல் திகைத்து நின்றார் மணிவண்ணன்.

“நான்கு நாட்களாக வீட்டில் ஒரே பிரச்சனை. சிவா இதோ இவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக நிற்கிறான். அப்பா அம்மாவிற்கு எனக்கு  இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. அவன் விஷயத்தில் இனி தலையிடப் போவதில்லை என்று அப்பா அம்மா ஒதுங்கிக் கொண்டார்கள். அந்த அளவு போக எனக்கு மனம் இல்லாததால், என் தம்பிக்காக பெண் கேட்டு நானே வந்துள்ளேன். தட்டு மாற்றிக் கொள்ளலாமா?”

இதுதான் முடிவு என்பதுபோல் நின்றவளை பார்க்க மணிவண்ணனுக்கு கோபம் வந்தது. இவள் எப்போதும் இப்படித்தான் நடந்து கொள்கிறாள்.

“அந்த குடும்பத்திலிருந்து ஒரு பெண் எடுத்துவிட்டு நாங்கள் படும் கஷ்டம் போதாதா? இன்னமும் எங்கள் பெண்ணையும் அங்கு கொடுத்துவிட்டு துயரப்பட வேண்டுமா?” கோபமாக கத்திய மாமனாரை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் சிவஜோதி.

“உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”

“எவ்வளவு தைரியம்?” மணிவண்ணன் கொதிக்க பாட்டி வெற்றிவேலனிடம் முணுமுணுத்தார். “டேய் வெற்றி உன் பொண்டாட்டி பக்கம் சேர்ந்து கொள். இதுதான் சந்தர்ப்பம் உன் வாழ்க்கையை விட்டு விடாதே”

“எனக்கு சம்மதம்” கை உயர்த்தி அறிவித்தான் வெற்றிவேலன். “எத்தனை நாட்களுக்குத்தான் இரு குடும்பங்களுக்குள்ளும் இந்த தொழில் போட்டியும் பொறாமையும், இரு குடும்பமும் சம்பந்தம் கலந்துவிட்டால் தொழில்களும் ஒன்றாகி விடும்தானே?”

மகனின் அரிய பெரிய கண்டுபிடிப்பிற்கு மணிவண்ணன் ருத்ர மூர்த்தியின் பார்வையை கடன் வாங்க சிவஜோதி தனது திருப் பார்வையை கணவன் பக்கம் மெல்ல திருப்பினாள்.

“இளையவர்களின் மன விருப்பங்களில் பெரியவர்கள் தலையிடக்கூடாது என்று இப்போது நினைக்கிறேன்” மனைவியை பார்த்தபடி சொன்னான்.



இதை ஏன்டா நம் வாழ்க்கையில் சொல்லவில்லை கண்களால் கேள்வி கேட்ட அண்ணிக்கு  அண்ணன் அங்கேயே தோப்புக்கரணம் போட்டுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்த மானசி பாட்டியை சிவஜோதி பக்கம் மெல்ல தள்ளினாள்.

“அப்போ கல்யாணம் பேச பெரியவங்க யாரும் வர மாட்டாங்களா?” பாட்டி கேட்டார்.

” ஏன் என்னைப் பார்த்தால் ஸ்கூல்பேக் மாட்டிப் போகும் சின்ன குழந்தை போல் தெரிகிறேனா? போன வாரம்தான் இல்லங்குடி மாரியம்மன் கோவிலில், என் செலவில் 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் தெரியுமா?” உதடுகள் துடிதுடிக்க கேட்டாள் சிவஜோதி.

அதென்ன தொழிலில் ஒரு பெரிய இடத்தை லட்சியமாக கொண்டு நடந்து கொண்டிருப்பவளை, இந்த வீட்டில் மட்டும் பப்பாவே என்று பார்க்கிறார்களே!

அடப்பார்ரா என அனைவரும் வியந்து நிற்க, மணிவண்ணனின் கோப யாகத்தீ பால்குடம் ஊற்றப்பட்டது போல் அணைந்தது. ஏனெனில் அந்த இல்லங்குடி மாரியம்மன் அவர்கள் வீட்டு குலதெய்வம்.

” திருத்தங்கல்லுக்கு எப்போது போனாயம்மா?” சந்தோசமாய் மணிவண்ணன் கேட்க, நாக்கை கடித்துக் கொண்டாள் சிவஜோதி. திருமணம் முடிந்து ஒரே ஒரு முறைதான் அங்கே சென்றிருந்தாள். நம் குடும்பத்தின் குலதெய்வம் என பெருமையாய் மணிவண்ணன் அறிமுகம் செய்து வைத்த கோவில் ஏனோ அவள் மனதில் பச்சென்று ஒட்டிக் கொண்டிருந்தது.

இதுபோல் 51 ஜோடிகளுக்கு திருமணம் செய்யலாமா என்று அவளுடைய பி.ஏ கேட்டபோது தன்னையறியாமல் அவள் தேர்ந்தெடுத்த கோவில் திருத்தங்கல் இல்லங்குடி மாரியம்மன். அதன் காரணம் இப்போது வரை அவளுக்கு புரிபடவில்லை.

“ஆனாலும் இந்த திருமண விஷயத்தில் நான் நிறைய யோசிக்க வேண்டும்” மணிவண்ணன் சொல்ல “நீங்கள் யோசித்துக் கொண்டே இருங்கள் அப்பா, நாங்கள் வேலைகளை தொடங்குகிறோம்” என்றான் வெற்றிவேலன்.உள்ளே போய் பழத்தட்டை கொண்டு வந்திருந்தான்.

” எனது தங்கையின் திருமணத்திற்கு பரிபூரண சம்மதம்” மனைவியுடன் தட்டு மாற்றிக் கொண்டான்.

“மற்ற விஷயங்களை தொடர்ந்து பேசலாம்” வெற்றிப் புன்னகையுடன் விடை பெற்றாள் சிவஜோதி.

“முன்பே ஒரு முறை என்னை தாண்டி நாம் பாரம்பரியம் சட்ட திட்டங்களை மீறி போனதால்தான் இப்போது இப்படி நிற்கிறான். இன்னமும் புத்தி வரவில்லை உன் மகனுக்கு” மனைவியிடம் மணிவண்ணன் கொதிக்க,

” கொஞ்சம் பேசாமல் இருங்கள் மாப்பிள்ளை” குரலை உயர்த்தி பேசியபடி வந்தார் ரோஜாமணி.



What’s your Reaction?
+1
44
+1
20
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

1 hour ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

2 hours ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

13 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

13 hours ago