(15)

   மௌரியன் மடிகணிணியை மேசை மீது வைத்து அதன் திரையில் தெரிந்த முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

   சாரல்!

கோவிலில் அத்தனை கூட்டம் கலகலப்பாக இருக்க அதில் அவனால் ஐக்கியப்பட முடியவில்லை.

   கோவிலின் அழகு அடுத்து சில மணித்துளிகளில் கருவரையிலிருந்து வரப்போகும் காளி…அது ஆடப்போகும் ஆட்டம், கோவிலின் முன் நோய் வாய்ப்பட்டவர்களை பிணங்களைப் போல் வெள்ளைத் துணியால் போர்த்தி பாடையில் போட்டு வைத்திருக்கும் காட்சி, காளி வெளிப்பட்டு மஞ்சள் தண்ணீர் தெளித்து அவர்கள் எழப்போகும் காட்சி என எல்லாவற்றையும் பார்க்க மக்கள் பயபக்தியுடன் இருக்க அவனால் அங்கே இருப்புக் கொள்ள முடியவில்லை. அவன் மனதை நிறைத்து ஆட்டுவித்து உசுப்பேற்றிக் கொண்டிருந்தது சாரல். சாரல் மட்டுமே. வீட்டிற்கு வந்துவிட்டான்.

   சாரலின் முகத்தைப் பார்க்க பார்க்க அவனுக்குள் கொலை வெறி உண்டானது.

   அந்த தனிமை அவனுக்குள் அந்த வெறியை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது.

     ‘சாரல்…உன்னை உன்னை’ இரு கைகளையும் குவித்து திரையில் தெரிந்த அவளை நெரித்து விடுவதைப் போல் நெருங்கினான்.

    ‘நோ…நோ…உன்னைக் கொல்லக் கூடாது. கொன்றால் உடனே உன் உயிர் போய்விடும். நீ…காலம் பூராவும் உயிருடன் இருந்து சித்ர வதைப்பட்டு சாக வேண்டும். என் காதலுக்கு நீ செய்த துரோகத்தை நினைத்துக் கொண்டேயிருக்கும்படி உனக்கு ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?

   இதோ இந்த அழகு தானே இது தந்த கர்வம்தானே பெரிய சினிமா நடிகையாக வேண்டும் என்ற ஆசைதானே என்னை கழட்டிவிட்டது.

  அதனால்தானே டைரக்டரின் மகனை தேட வைத்தது.

  இந்த அழகு இல்லாவிட்டால்…நீ எப்படி சினிமா நடிகையாவாய்?

  உலகமே பார்த்து ரசிக்க வேண்டும் என நீ நினைத்த அழகை…உன் முகத்தை…உலகமே பார்த்து அலற வேண்டும். பேய்..பேய் என கத்த வேண்டும். பிசாசு…பிசாசு என பயந்து ஓடவேண்டும்.

    எஸ். இந்த அழகு இல்லாமல் போக வேண்டும். உன் முகம் கோரமாக வேண்டும். உன் முகத்தை நீயே பார்க்க முடியாமல் அழ வேண்டும். வர்றேன்டி…நாளைக்கு சென்னை வர்றேன்.

   ஒரு பாட்டில் ஆசிட் போதும். நீ ஆயிரம் அழகு சாதனங்கள் போட்டுப் போட்டு ஜொலிக்க வைக்கும் உன் அழகு….அஸ்தமனமாக!

   பற்களை நற நறவென கடித்தான் மௌரியன்.

   அதே சமயம்…

   தலைத் தெறிக்க வீட்டை நோக்கி ஓடி வந்துக் கொண்டிருந்தாள் ஆச்சி.

     “ஆத்தா…பேச்சியாத்தா…பாவி புள்ள எந்த தப்பான முடிவுக்கும் போயிடக் கூடாது.  அது மனசுக்குள்ள புகுந்து நீதான் தடுக்கனும். நான் போற வரைக்கும் பார்த்துக்க அந்த புள்ளைய. நான் போன பின்னாடி நான் பாத்துக்கறேன்…” என வேண்டிக் கொண்டாள்.

   நான் காப்பாத்துவேன் கவலைப்படாதே என பேச்சியம்மன் சொல்வதைப் போல் கோவிலில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் அவளுக்கு முன்னால் வீட்டை நோக்கி ஓடுவதைப் போலிருந்தது.

    வீட்டுக்கு வந்தவள் மூச்சிரைக்க மாடிப் படிகளில் தபதபவென ஓடினாள்.

    இதயம் திக் திக்கென அடித்துக் கொண்டது.

    அவனுடைய அறைக் கதவு திறந்தே இருந்தது.

    படபடப்புடன் உள்ளே வந்தவளுக்கு மடிகணிணி முன் அமர்ந்திருந்த அவனைப் பார்த்ததும்தான் மூச்சே வந்தது.

   ஓசைக் கேட்டுத் திரும்பியவன் மூச்சிரைக்க நின்றிருந்தவளைப் பார்த்து திகைத்தான்.

   அதே நேரம் தன்னை நோக்கி திரும்பிய அவனுடைய முத்தோற்றத்தைக் கண்டு அடிவயிற்றில் சில்லிட்டாள் ஆச்சி.



   கோபமும் கொடூரமுமாய்…இதுவரை பார்க்காத முகம்.

   தனிமையில் அமர்ந்திருக்கும் ஒருவனின் முகம் எப்படி இவ்வளவு கொடூரமாக இருக்கும்? யோசித்தவாறே கணிணியின் திரையைப் பார்த்தவள் திகைத்தாள்.

    அதிலிருந்த பெண்ணின் புகைப்படம்.

    இவள்தான் ஜானகி சொன்ன பெண்ணோ? என நினைத்தாள்.

       “நீ கோவில்லதானே இருந்தே. இங்க ஏன் வந்தே? ஏதாவது எடுத்துட்டுப் போக வந்தியா?” என்றான்.

     “இல்லை…நீ தனியா இருக்கேன்னு வந்தேன்” என்றாள் பெருகி வழிந்த வியர்வையைத் துடைத்தபடி.

     “நான் என்ன சின்னக் குழந்தையா? யாராவது என்னைத் தூக்கிட்டுப் போயிடுவாங்களா?” என்றான் எரிச்சலாக.

    “ஏதோ வேலை இருக்குன்னு வந்தேயில்லையா? ஏதாவது படிக்கிற வேலையிருக்கும். காபி கீபி போட்டுத் தரலாமேன்னு வந்தேன்.” என்றவள் மறுபடியும் மடிகணிணியின் திரையைப் பார்த்தாள்.

     “யாரு இந்த பொண்ணு?” என்றாள்.

     “ஃபிரண்ட்”என்றான்.

     “ஃப்ரண்ட்டுன்னா…லவ்வா? நீ லவ் பண்ற பொண்ணா?” என்றாள் குறும்பாக.

   அவனுக்குள் இருந்த மனநிலைக்கு எரிச்சல் இன்னும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

     “ஆமா…” என்றான் கடுப்பாக.

   அவள் கலகலவென சிரித்தாள்.



அந்த சிரிப்பு முதலில் சாரலை விட்டு விட்டு இவளை கொன்றால் தேவலாம் போலிருந்தது.

     “ஏன்…சிரிக்கிறே?” என்றான்.

   அருகே வந்த அவள் சட்டென்று அவனுடைய கன்னத்தைப் பிடித்து ஆட்டினாள்.

    “அப்படியே உங்க தாத்தா மாத்திரியே இருக்கே” என மறுபடியும் சிரித்தாள்.

    “ஏன்…தாத்தாவும் காதலிச்சாரா?”

    “ஆமா…”

  அவனுக்குள் இருந்த கோபம் வெறி சற்றே இறங்கியதைப் போலிருந்தது.

  தாத்தாவும் காதலித்திருக்கிறார் என்றதும் அந்த காதலை அறிந்துக் கொள்ள அவனுக்குள் ஆசை உண்டானது.

    “அப்படின்னா…தாத்தா பாட்டியை காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரா?” என்றான்.

      “இல்லை. உங்க தாத்தா உங்க பாட்டியை காதலிக்கலை. என்னைத்தான் காதலிச்சார்” என்று அந்த அறை முழுவதும் எதிரொலிக்க சிரித்தாள் அந்த வீட்டினரால் ஆச்சி என அழைக்கப்படும் மஞ்சளழகி.



What’s your Reaction?
+1
14
+1
9
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

2 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

2 hours ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

2 hours ago

குக் வித் கோமாளியை முதல் எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…

2 hours ago

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

5 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

5 hours ago