அடுத்த இரண்டு நாவல்களுக்கான என் நினைவூட்டல் …
உங்களுடன் நான் – ஆசிரியர் கடிதம்வாசகர்களுக்கு வணக்கம் ,

நான் உங்கள் பத்மா கிரகதுரை . மாத நாவல்களில் நான் எழுதிய கதைகள் கற்பகம் புத்தகாலயம் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டு உள்ளன .அவ்வகையில் இதோ இரண்டு கதைகள் உங்கள் கைகளில்.

நலிந்து போய்க்கொண்டிருக்கும் நெசவுத் தொழிலைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்தபோது பரமக்குடியும் அதன் சுற்றுவட்டாரங்களும் அதன் களமாக அமைந்தது எனக்கு .அங்கே நெசவு தொழிலாளர்களோடு இன்னமும் அடி மட்டத்திலேயே வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றொரு பிரிவினரும் என் கவனத்திற்கு வந்தனர் .அவர்கள் கரிமூட்டம் போடும் தொழில் செய்பவர்கள். அதாவது தரிசு நிலங்களில் வளரும் கருவேலம் போன்ற மரங்களை வெட்டி குவியல் ஆக்கி எரிய வைத்து சாம்பலாகும் முன் பக்குவம் பார்த்து அணைத்து கரியை சேமித்து விற்பவர்கள் .மிகவும் கீழ்மட்டத்தில் தாழ்ந்த ஜாதியாக அந்தப்பக்கம் பார்க்கப்படும் இவர்களின் ஒரு வேளை உணவிற்காவது உதவுவது இந்த தொழில்தான் .அழிந்து கொண்டிருக்கும் நெசவாளிகளும் இந்த கரிமூட்டம் போடுபவர்களும் இணைந்து வேலை பார்த்தால் தொழிலும் முன்னேறி அந்த ஊரும் முன்னேறி விடாதா …என்ற என்னுடைய இந்த நப்பாசைதான் இந்நாவலின் முடிவு .ஜவுளிக்கடை முதலாளிகளை சரிப்படுத்தி நெசவாளிகளுக்கான ஒரு ஒருங்கிணைப்பாளரை உண்டாக்கி உழவும் நெசவுமாக அந்த ஊர் உயர்கிறது என கதையை முடிக்கிறேன். இதனை உழவு , நெசவு , சாதி சண்டை என கடற்கரை நெறு நெறு சுடுமணல் ஆக்காமல் மயில்வாகனன் – தாரிகா என்ற இளமை கூட்டணியின் துணையுடன் அவர்கள் குடும்ப குழப்பங்கள் எப்படி தொழிலை பாதித்தன, எப்படி அவை சரி செய்யப்பட்டன போன்றவற்றை
இனிமையாக ” #இது_ஒரு_காதல்_மயக்கம் ” என சொல்லி இருக்கிறேன் .மயிலு – தாருவை படித்துப் பாருங்கள்.



அடுத்த கதையான ” #நந்தன்_என்_காதலன் ” நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் ஒரு காலனியில் இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் , தீர்வுகள் பற்றியது .காதலித்து பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் வீட்டு நிலைமை என்ன ? பெண் மட்டுமன்றி காதலை காட்டி வீட்டை விட்டு வெளியேறும் ஆணின் வீட்டிற்கும் அது அவமானம் தானே ? அப்படி ஒரு வீட்டின் நிலைமையை சொல்லியிருக்கிறேன் .கூடவே கேட்டரிங் படித்து தொழில் செய்யும் ஒரு ஆணின் வாழ்வையும் , குழந்தைப் பருவம் முதலே அவனுள் துளிர்விட்டு வளர்ந்த காதலையும் , அது நிறைவேறிய விதத்தையும் எப்போதும் போல் எனது பாணியிலேயே ஜாலியாக சொல்லியிருக்கிறேன் .கதையில் வரும் முரளி போன்ற சுயநல ஆண்களை ஒதுக்கி தலைநிமிரும்
ரேகா போன்ற பெண்கள் மிக உயர்வானவர்கள். நந்தகுமார் – ராகவி உங்கள் மனதிலும் இடம் பிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்த கதைகளைப் பற்றிய நிறைகுறைகளை Padma.graham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் என்னுடன் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்வேன் . தொடர்ந்து என் கதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் தோழமைகள் அனைவருக்கும் பேரன்பும் , பிரியங்களும் .

What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

மகாபாரதக் கதைகள்/நாயினும் கடையேன் நான் (சிறுகதை 1)

நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில்…

2 hours ago

மாவட்ட கோவில்கள்: திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில்

ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உள்ள கோவில்களை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம். அந்த வரிசையில் முதல் மாவட்டமாக சென்னையில் உள்ள …

2 hours ago

நாள் உங்கள் நாள் (08.05.24) புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 08.05.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - சித்திரை 25 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (08.05.24)

இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நாம் பொதுவாக ராசி பலன் பார்ப்போம். அவ்வாறு ராசி…

2 hours ago

ஓ…வசந்தராஜா…!-12

12 சைந்தவியின் திருமணத்தின் போது அணிந்து கொள்ளப் போகும் பட்டுச்சேலைகளுக்கான சட்டைகளை  வாங்கிக் கொண்டு வந்தாள் அஸ்வினி. லிப்ட்டிலிருந்தே வெளியே…

13 hours ago

விதவிதமாக குளு குளு குல்ஃபிஸ்!

‘குல்ஃபி' 16ஆம் நூற்றாண்டில் டெல்லியில் முகலாய ஆட்சியிலேதான் முதன் முதலில் உருவானது. இது இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, மியான்மர் போன்ற…

13 hours ago