1

கனன்று கொண்டிருந்த கங்கின் மீது சாம்பிராணி தூளை தூவினாள் அபிராமி.. சுருசுருவென்ற சத்தத்தோடு அடர்ந்த புகையோடு மணக்க ஆரம்பித்தது பூஜை அறை.. எழுந்த புகையில் தோன்றி விட்ட தெய்வீக தன்மையில் திருப்தியானவள், எழுந்து நின்று சாம்பிராணி கரண்டியை கையில் எடுத்து ஒவ்வொரு தெய்வமாக காட்ட ஆரம்பித்தாள்..

நடுநாயகமாக நின்ற முருகப்பெருமானின் முன் கண் மூடி நின்றாள்.. வேண்டுவதற்கு ஆயிரம் தேவைகள் இருந்தும் இறைவனின் முன் கண் மூடி நிற்கவும் நிச்சலனமாய் அமைதியானது மனது.. கணவன் குருநாதனுடன் அபிராமி வாழ்ந்த நிறைவான வாழ்வின் அன்பளிப்பு இந்த மன அமைதி..

பக்தி பொருந்தி கற்பூரம் காட்டி நைவேத்யம் படைத்து என வரிசைக்கிரமமாக தனது பூஜையை முடித்தவள், கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு பூஜையறையை விட்டு வெளியே வந்தாள்..ஹாலின் நடுவில் நின்று விழி சுழற்றி தன் வீட்டை பார்த்தாள்.. மூன்று தளங்களுடன் மிகப் பெரிதான அழகான அந்த வீடு எப்போதும் போல் இப்போதும் அவள் நெஞ்சினுள் பெருமிதத்தை விதைத்தது..

கீழ்தளத்தில் அலுவலக அறை, வேலை செய்பவர்களுக்கான அறைகள்.. இரண்டாவது தளத்தில் அபிராமியின் அறை, சமையலறை, பூஜையறை போன்றவைகள்.. மூன்றாவது தளத்தில் அபிராமியின் பிள்ளைகளின் அறைகள். அபிராமியின் பிள்ளைகள் இருவருமே ப்ரைவசி பார்ப்பவர்கள்.. வீடு முழுவதும் எந்நேரமும் சுற்றி வரும் வேலையாட்கள் கூட அவர்களது மூன்றாவது தளத்திற்கு குறிப்பிட்ட நேரம் சுத்தப்படுத்துவதற்கு மட்டுமே வரவேண்டும்.. மற்ற நேரங்களில் அழைத்தால் மட்டுமே வர வேண்டுமென்ற உத்தரவை பெற்றிருந்தனர்.



மூன்று தளங்களுக்குமிடையே எந்நேரமும் இயங்கும்படி லிப்ட் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.. மூன்றாவது தளத்தில் பிள்ளைகளின் ப்ரைவசிக்காக ஒரு சிறிய நீச்சல்குளம்.. அபிராமியின் மகன் பாலகுமரனுக்கும், மகள் கார்த்திகாவிற்கும் மட்டுமே அதில் நீந்த அனுமதி..

அபிராமி பூஜையறையிலிருந்து சமையலறைக்கு போனாள்.. சமைத்துக் கொண்டிருந்த, உதவிக் கொண்டிருந்த பெண்களை மேற்பார்வையிட்டவள் சில திருத்தங்களையும் சொல்லிவிட்டு காபி செட் பண்ணி வைத்திருந்த டிரேயுடன் லிப்டினருகே வந்த போது, கீழ்தளத்திலிருந்து வந்த லிப்ட் அங்கே நின்றது..

லிப்டின் கதவு திறந்து உள்ளிருந்து வந்தாள் சரண்யா.. அவள் அந்த காலை வேளையிலேயே குளித்து கிளம்பி மொடமொடப்பான காட்டன் புடவை உடலை தழுவியபடி இருக்க, கரு கருவென நீண்டிருந்த கூந்தலில் மின்னல் கீற்றென சிறு துண்டு மல்லிகையையும் சூடியிருந்தாள்..

 

பளிச்சென தெரியும்படி நடு நெற்றியில் இருந்த சிவப்பு ஸ்டிக்கர் பொட்டின் மீது கீற்றாய் தீற்றியிருந்த திருநீறு அவள் சாமி கும்பிட்டு விட்டாள் என அறிவித்தது.. காதிலாடிய குடை ஜிமிக்கியும், கழுத்தில் கிடந்த மெல்லிய சங்கிலியுமாக கண்களையும், மனதையும் நிறைக்கும் பொலிவான அழகோடு இருந்தாள் சரண்யா..

பொழுது விடியும் காலை பொழுதில் இவளை போலொரு பெண் பட்டாம்பூச்சியாய் வீடு முழுவதும் சுற்றியபடி எதிரில் வந்தால் அன்றைய நாள் இனிதாக கழிந்து விடாதா..? அபிராமியின் கண்கள் சிறு ஏக்கத்துடன் அவள் மேல் பதிந்தது..

“நான் கொண்டு போகவா மேடம்..?” அமைதி புன்னகை ஒன்றுடன் கை நீட்டி டிரேயை கேட்டாள்..

அபிராமிக்கும் அவளிடம் கொடுத்து விட்டால் என்ன என்றுதான் தோன்றியது.. அடுத்தடுத்து வேலைகள் அவளுக்கென இங்கே காத்துக் கொண்டிருந்தன.. மகனுக்கு காபி கொடுக்கும் வேலையை அவனது அலுவலக ஊழியையான இந்த பெண்ணிடம் கொடுக்கலாம்.. தவறில்லை.. ஆனால்.. அது.. பாலகுமரனுக்கு பிடிக்காது..

அலுவலக வேலை அலுவலகத்தில்.. வீட்டில் அவர்கள் வேலை பார்க்க கூடாது என்பான்.. அவர்களென்றால் சரண்யாவும், அவள் அண்ணன் சாரங்கனும், சாரங்கன் பாலகுமரனின் பள்ளி தோழன்.. பள்ளி படிப்பின் பின் சந்தித்திராத தோழர்கள் ஒரு சிறிய சாலை விபத்தில் சந்தித்த போது சாரங்கனின் குடும்பம் மிகவும் கஷ்ட ஜீவனத்தில் இருந்தது..



பாலகுமரன் சாரங்கனுக்கு தனது அலுவலகத்தில் வேலை கொடுத்தான்.. கல்லூரி படிப்பில் பாதியில் இருந்த அவனது தங்கை படிப்பை முடிக்க உதவினான்.. அவளுக்கும் தனது அலுவலகத்தில் வேலை கொடுத்தான்.. பெண் பிள்ளைக்கு பாதுகாப்பென இருவரையும் தங்கள் வீட்டிலேயே தங்கவும் அனுமதித்தான்..

இத்தனை நன்மைகளையும் பாலகுமரனிடமிருந்து பெற்ற சரண்யா, சாரங்கனுக்கு அவனிடமும், அந்த குடும்பத்தினரிடமும் மலையளவு மரியாதையும், அக்கறையும் இருந்தது.. கிடைத்த சிறு வாய்ப்புகளிலெல்லாம் அதனை காட்டி விட முயற்சிப்பார்கள் அண்ணனும், தங்கையும்..

“என்னிடம் கொடுங்க மேடம்..” சரண்யா திரும்ப கை நீட்ட அபிராமி புன்னகைத்து மறுத்தாள்..

“வேண்டாம்மா.. நானே கொண்டு போகிறேன்..”

“சரி எனக்கு வேறு ஏதாவது வேலையாவது சொல்லிவிட்டு போங்க..”துடிப்புடன் நின்றவளை பார்த்து சிரிப்புதான் வந்தது அபிராமிக்கு..

“உனக்கு எங்கள் அலுவலகத்தில்தானே வேலை சரண்யா.. இவ்வளவு காலையில் இங்கே வந்து வீட்டு வேலைகளை ஏன் செய்யவேண்டும்..?”

“விழிப்பு வந்துவிட்டது மேடம்.. என்னால் சும்மா இருக்க முடியாது.. அதுதான் இங்கே வந்தேன்..” சொன்னபடி அங்கிருந்த சோபாக்களின் லேசாக கலைந்த உறைகளை சரி செய்ய தொடங்கினாள்..தேனீயை போல் இந்த பெண்.. கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டாள்..

லிப்டின் கண்ணாடி கதவுகள் வழியாக அவளை பார்த்தபடியே மூன்றாவது தளத்திற்கு ஏறினாள் அபிராமி..

கதவை தட்ட கையை வைத்த போது அது திறந்து கொண்டது..“குமரா..” அழைத்தபடி உள்ளே போனவள் இன்னமும் படுக்கையில் போர்வை குவியலுக்குள் இருந்த மகனை பார்த்ததும் திகைத்தாள்..“டேய்.. நீ இன்னமும் எழுந்திரிக்கலையா..?”

“படுத்ததே நான்கு மணிக்குத்தாம்மா.. இதோ இப்போதான் எந்திரிச்சேன்.. மெயில் செக் பண்ணிட்டிருக்கேன்..”“நான்கு மணி வரை என்ன வேலைப்பா..?”

“ஒரு அமெரிக்க கம்பெனியோடு லைவ் மீட்டிங்.. சக்சஸ்புல்லா முடிச்சு அக்ரிமெண்டே போட்டாச்சு..”“ஒரே ராத்திரியிலா..?” அபிராமி ஆச்சரியப்பட்டாள்.

“இது போல் வெளிநாட்டு கம்பெனிகளோடு ஒப்பந்தம் என்றால் உன் அப்பாவிற்கு ஒரு வருடமாவது ஆகும்.. இவர் அங்கே போக, அவர்கள் இங்கே வர என்று குறைந்தது ஆறு மாதமாவது ஆகும்.. நீ என்னவென்றால் ஒரு ராத்திரியில் ஒரு ஒப்பந்தத்தை முடித்து விட்டேன் என்கிறாய்..”

“அப்பா காலம் வேறு.. என் காலம் வேறு அம்மா.. இப்போது வேர்ல்டே ஒரு குளோபல் ஆகிவிட்டது.. இதெல்லாம் ரொம்ப சாதாரண விசயம்..”

“சரிப்பா இப்போது காபி கலக்கவா..?”

“ஐயோ அம்மா நான் இன்னும் பல்லே தேய்க்க வில்லையம்மா.. பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க..” பாலகுமரன் பாத்ரூமுக்குள் நுழைந்தான்..

இறைந்து கிடந்த கட்டிலை ஒதுக்கி, பெட்சீட்களை மடித்து தலையணைகளை அடுக்கினாள் அபிராமி..

“இதையெல்லாம் செய்வதற்கும் அந்த பெண் தயாராக இருக்கிறாள்..” பாத்ரூமிலிருந்து வெளியே வந்த மகனிடம் சொன்னாள்..

“யாரும்மா..?”

“சரண்யா.. நான் காபி கொண்டு போய் கொடுக்கிறேன்னு என் கை டீரேயை பிடுங்காத குறைதான் போ..”

“ப்ச்.. விடுங்கம்மா அவளை.. அவள் ஒரு ஆர்வக்கோளாறு..”



“நீ அவளை பற்றி என்ன நினைக்கிறாய் குமரா..?”

“என்ன நினைக்க..? என் நண்பனின் தங்கை.. என் ஆபிசில் வேலை பார்க்கும் பெண்..”

“ஆனால்.. அவள் அத்தோடு நிற்க நினைக்க வில்லை.. நம் குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டுகிறாள்..”

“சொன்னேனேம்மா.. அது ஆர்வக்கோளாறு..”

“உனக்கு அவளிடம் ஏதாவது அபிப்ராயம் இருக்கிறதா குமரா..?”

“உங்கள் கேள்வி புரியவில்லை அம்மா..”

“அந்த சரண்யாவை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எதுவும் உனக்கு இருக்குதான்னு அம்மா கேட்குறாங்க..”அறை வாசலிலிருந்து வந்த சத்தத்திற்கு திரும்பிய இருவரும் மலர்ந்தனர்..

அங்கே கார்த்திகா நின்றிருந்தாள்..

“கார்த்திகா வாடா.. எப்போ வந்தாய்..?” அபிராமி வேகமாக போய் மகன் கையை பிடித்து அழைத்தாள்..

“போச்சு.. இன்னைக்கும் வந்தாச்சா..? ஏம்மா இவளுக்கு விடிகிற பொழுதெல்லாம் நம் வீட்டில் இருக்கும்போது எதற்காகம்மா இவளுக்கு கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு அனுப்பினோம்..?”

கிண்டலாய் வரவேற்ற சகோதரனை இடுப்பில் கை தாங்கி முறைத்தபடி உள்ளே வந்தாள் அந்த அழகான கார்த்திகா..



What’s your Reaction?
+1
45
+1
21
+1
1
+1
3
+1
1
+1
0
+1
1

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-14

14 ‘‘பேபி.. சஷ்டி.. சஷ்டிகா.." மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தும் மீளாதிருந்த அவளைப் பற்றி உலுக்க.. ஒரு நெடுமூச்சுடன் மயக்கத்தில்…

9 hours ago

பாண்டியனை அடக்கிய கோமதி- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் ஓவர் ஆட்டம் ஆடுகிறார் என்று கோமதிக்கு கோபம் வந்துவிட்டது.…

9 hours ago

உருளைக்கிழங்கை வைத்து 10 நிமிடத்தில் செய்யலாம் போஹா நக்கெட்ஸ்

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது…

9 hours ago

’நானும் ஒரு அழகி’ திரைப்பட விமர்சனம்

நாயகி மேக்னாவுக்கு தனது அத்தை மகன் நாயகன் அருண் மீது காதல் மலர்கிறது. அருணுக்கும் மேக்னா மீது காதல் இருந்தாலும்,…

9 hours ago

சரணடைந்தேன் சகியே – 24

24         “என் ஹஸ்பென்ட், சாரோட கம்பெனியில் மேனேஜர்.. நான் ஒரு யோகா டீச்சர்.. யோகா…

13 hours ago

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மனோஜ்…

13 hours ago