Categories: Samayalarai

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமான சூப்பர் தர்பூசணி மில்க்‌ஷேக்…

கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றிலும் நீர் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

நீர் சத்து அதிகம் நிறைந்த உணவு பொருள்களில் தர்பூசணி முக்கியமான ஒன்று. அதை அப்படியே சாப்பிட்டு பழகிய நீங்கள் ஒருமுறை தர்பூசணி மில்ஷேக் செய்து குடித்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். தர்பூசணி மில்ஷேக் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.



தேவையான பொருட்கள்:

தர்பூசணி – அரை பழம்

பால் – அரை லிட்டர்

சர்க்கரை – தேவையான அளவு

பாதாம் பிசின் – 2 ஸ்பூன்

சப்ஜா விதை – 1 ஸ்பூன்



செய்முறை விளக்கம் :

  • முதலில் அரை தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  • பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த தர்பூசணி ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் ரெண்டு ஸ்பூன் பாதாம் பிசின் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகள் சேர்த்து நன்கு கலக்கவும்.

  • பின்பு அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் குளு குளுவென வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க் ஷேக் தயார்.

  • இது போன்ற ஜூஸ்களை வீட்டிலேயே தயார் செய்து குடித்தால் சுகாதாரமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.


வீட்டுக்குறிப்பு:

  • பொடி வகைகளில் உப்பு அதிகமாகி விட்டால் அதில் உள்ள பருப்பு எதுவோ அதை கொஞ்சம் வாணலியில் வறுத்து தனியாக பொடி செய்து நன்கு கலந்து விட்டால் உப்பு குறைந்து விடும்.

  • பெருங்காயம் கட்டியாகி இறுகி விட்டால் அதில் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைத்தால் இளகிவிடும்.

  •  தோசை மாவு நீர்த்து இருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விட்டால் மேலும் நீர்த்துப் போகாது, புளிப்பும் தெரியாது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/இந்திரன் வியந்த கர்ணன்!

பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான துரியோதனனைத்…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு பயறணீநாத சுவாமி திருக்கோவில்

சுவாமி : பயறணீஸ்வரர். தலச்சிறப்பு : இவ்வாலயம் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாகும். தல வரலாறு : இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு முன்…

2 hours ago

நாள் உங்கள் நாள் (22.05.24) புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 22.05.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 9 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (22.05.24)

குரோதி வருடம் வைகாசி 9, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு…

2 hours ago

ஆனந்தியிடம் உண்மையை சொல்ல போகும் அன்பு.. ஆட்டத்தை கலைக்க ரெடியான மகேஷ்- சிங்க பெண்ணே சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த வார எபிசோடில் இருந்தே…

13 hours ago

பாக்கியாவுக்கு வந்த புது சிக்கல் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வி ஜே…

13 hours ago