Categories: CinemaEntertainment

கர்ப்பமான பின் திருமணம் செய்த தமிழ் நடிகைகள்! இத்தனை பேரா?

தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக மாறியவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக மாறிய பின்னர்.. பாலிவுட் திரையுலகின் பக்கம் சென்ற நடிகை ஸ்ரீதேவிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்த ஸ்ரீதேவி, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து… திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்ட போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



சரிகா (Sariha):

உலக நாயகன் கமல்ஹாசனை உருகி உருகி காதலித்தது திருமணம் செய்து கொண்டவர் மும்பையை சேர்ந்த நடிகை சரிகா. ஏற்கனவே கமலஹாசனுக்கு வாணி கணபதி என்பவருடன் திருமணம் நடந்த விஷயம் தெரிந்தும், கமல்ஹாசனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த சரிகா, கர்ப்பம் ஆன பின்னரே கமல்ஹாசனை திருமணம் செய்து கொண்டார்.

எமி ஜாக்சன் (Amy Jackson):

தமிழில் மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, பின்னர் ஐ, வேலையில்லா பட்டதாரி, 2.0, தெறி, போன்ற பல படங்களில் நடித்தவர் எமி.  இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஜார்ஜ் பனாயுடுவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், திடீர் என கர்ப்பமானார். குழந்தை பிறந்த பின்னர் இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு முன்பே இருவரும் பிரிந்தனர்.



நடிகை இலியானா (Ileana):

தமிழில் ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, பின்னர் பல தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார் இலியானா. தமிழில் கடைசியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்த இவர், பின்னர் பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தினார். இவர்  தன்னுடைய காதலனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார். இவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்த நிலையில், கர்ப்பமான பின்னர் திருமணம் செய்த தகவலை உறுதி செய்தார்.

அமலாபால் (Amala Paul):

ஏற்கனவே இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால், கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு முன்பே இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்த தகவல் பின்னரே தெரியவந்தது.

ஆலியா பட் (Alia Bhatt):

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் ஆன 2 மாதத்திலேயே நான்கு மாதம் கர்ப்பமாக இருந்த தகவலை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான பின்னரே ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு தெரியவந்தது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

விஜய் டிவியின் 5 சீரியலின் கதை..ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி! தான்.

என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான்.…

10 hours ago

பாக்யா குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…

10 hours ago

பாலியல் தொழிலாளிகள் சூழலை பேசும் வெப் சீரிஸ்: ஹீராமண்டி எப்படி? ஓடிடி திரை அலசல்

பாலியல் தொழில் நடக்கும் புகழ்பெற்ற ஹீராமண்டியின் ஷாஹி மஹாலின் தலைவியான மல்லிகாஜானை வென்று அந்த இடத்தைப் பிடிக்க அவரது சகோதரியின்…

10 hours ago

பேரிச்சம்பழம் அல்வா

ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் பேரீச்சை பழங்களில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன. பேரீச்சை பழங்கள் துரிதமான…

10 hours ago

உடலென நான் உயிரென நீ-12

12 " என்னாயிற்று பேபி ...? "  தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன்…

14 hours ago

வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு

முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும்…

14 hours ago