Categories: Serial Stories

சரணடைந்தேன் சகியே – 17

17

 

 

 

 

பாலகுமரனது அறைக் கதவை தட்டி விட்டு தயக்கமாக “நான் உள்ளே வரலாமா..?” என்றாள்..
அவள் குரலில் வியந்தவன்.. “கதவு திறந்துதான் இருக்கு வா சகி..” என்றான்..

நடுங்கிய கால்களுடன் உள்ளே வந்தாள்.. கண்களை சுழற்றி அறையை பார்த்தவள், எதிரேயிருந்த பாலகுமரனை பார்த்ததும் முகத்தில் செந்தூரம் பூசிக் கொண்டாள்..

காபி கொட்டிய சட்டையை கழட்டி விட்டு வெற்று மார்பாய் இருந்தான் அவன்.. ஆழ் பார்வையாய் அவளை பார்த்தபடி நின்றான்..

“என்ன சகி..?”

“வ.. வந்து நான் தெரியாமல் மேலே காபி..” தலை நிமிர்ந்து அவனை பாராமல் குனிந்தே பேசினாள்..
மெல்ல நடந்து அவளருகில் வந்தவன் அவள் தோள்களை பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டான்.. முகம் நிமிர்த்தி தன் முகம் பார்க்க வைத்தவன்..

“ம்.. இப்போ சொல்லு..” என்றான்..தடுமாறிய சஸாக்கியின் விழிகள் உயர்ந்த போது அவன் வெற்று மார்பு கண்களில் பட்டது.. பதறி மீண்டும் விழி தழைந்தாள்.. அவன் குனிந்து அவள் கன்னம் உரசினான்..

“ஏதோ பேச வந்துவிட்டு பேசாமலே நின்றால் எப்படி சகி..” கொஞ்சலாய் கேட்டான்..

“அ.. அது.. காபி.. கொ.. கொட்டினது வலிக்கிறதா..?”

“ஆமாம் சகி.. ரொம்ப.. இதோ இங்கே..” தனது இதயப் பகுதியை தொட்டு காட்டினான்..
பரபரப்பாய் அவன் சுட்டிய இடத்தை பார்த்தவள் மெல்ல வருடினாள்..

“அச்சோ.. ரொம்ப காந்துதா..? நான் மருந்து போடவா..?”

“ம்.. போட்டு விடு..” சுனை நீரள்ளி குடிக்கும் மானின் தாகம் அவன் விழிகளில்..
சஸாக்கி ஆயின்மென்டை கைகளில் எடுக்க..

“ஏய் அந்த மருந்தில்லை இந்த மருந்து..” என அவள் இதழ்களை வருடினான்..
புரியாமல் பார்த்தவளின் கன்னங்களை பற்றி முகத்தை இழுத்து அவள் இதழ்களை தன் மார்பில் பதித்துக் கொண்டான்..

“மருந்து இப்படி போடனும்..” கிசுகிசுத்தான்..கற்பாறையொன்றில் மோதி நிற்கும் மனநிலை சஸாக்கிக்கு.. உடல் சிலிர்த்து விழி மூடி நின்றவளை இறுக அணைத்தான்..

“இப்போது சில்லுன்னு இருக்குது சகி..” காது மடல்களை இதழால் வருடியபடி கிசுகிசுத்தான்..



“ம்.. விடுங்க.. நான் போகனும்..”

“எங்கே..?”

“கீ.. கீழே.. வந்து நா.. நான்..” அவனிடமிருந்து விடுபட திமிறினாள்..

“போகலாம் சகி.. என்ன அவசரம்..?”அவளை கேட்டுவிட்டு அந்த அவசரத்தை அவன் பட்டான்.

“மம்மா தேடுவாங்க.. ரூபனை பார்க்கனும்.. உங்க அம்மா..”பேசிக் கொண்டிருந்த அவள் இதழ்களில் அழுத்தி முத்தமிட்டான்..

“விட்டால்.. வீட்டு மெம்பர் ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டே இருப்பாய்.. புருசன் அறையில் இருக்கும் பொண்டாட்டியை யார் தேடப் போகிறார்கள் சகி..?” தாபமாக கேட்டபடி அவளை இன்னமும் இறுக்கினான்..

“புருசனா.. பொண்டாட்டியா..?”
அவளது முணுமுணுப்பு அவனுக்கு கோபத்தை கொடுத்தது..

“என்ன உளறுகிறாய்..?”

“நாம்.. கணவன்.. மனைவியா..?” சட்டென அவளை தன்னிடமிருந்து தள்ளினான்..

“கட்டிய தாலியை கழட்டி வைத்துவிட்டால் கணவன், மனைவி இல்லையென்று ஆகிவிடுமா.. ம்… சொல்லு.. ஏன் அன்று அப்படி செய்தாய்..?” அவள் தோள் பற்றி உலுக்கினான்..

“எ.. என்று.. எ.. எப்படி..?” பரக்க பரக்க விழித்தவளை பார்த்ததும் தன் வேகம் குறைத்தான்.. தடதடவென உடல் நடுங்க நின்றவளை மெல்ல கட்டிலில் அமர வைத்தான்.

“சகி.. பயப்படாதேடா ஒன்றுமில்லை..” மென்மையாய் அணைத்துக் கொண்டான்..
சிறிது நேரம் அவன் அணைப்பில் இருந்தவள், சமாதானமானாள்..

“நான் போகவா…?” மெல்ல கேட்டவளை பெருமூச்சுடன் விடுவித்தான்..

“சரி போ..”

சிறு விடுதலையுணர்வுடன் செல்பவளை யோசனையாய் பார்த்திருந்தான்..

“தலை சரிகிறது பார் சஸி.. சரியாக குழந்தையை பிடி..” அன்னம் அதட்டியபடி இருக்கும் போதே குழந்தையின் தலையை விட்டு விட்டாள் சஸாக்கி.. தலை சாய்ந்து விட குழந்தை வீழென்று அழத் துவங்கியது..
அருகிலிருந்த அபிராமி சட்டென குழந்தையை பத்திரமாக தூக்கிவிட்டாள்..

“என்ன நினைப்பில் இருக்கிறாய் சஸாக்கி..?” அதட்டினாள்..

“சாரி கவனிக்கவில்லை..” அழும் குழந்தையை பார்த்தபடி சொன்னாள் சஸாக்கி..

“குழந்தை பிறந்து மூன்று மாதமாகி விட்டது.. இன்னமும் சரியாக குழந்தையை தூக்கிக் கொள்ளகூட தெரியவில்லை.. என்ன பழக்கி வைத்திருக்கிறீர்கள் உங்கள் மகளை..?” அபிராமியின் குறைபாட்டிற்கு அன்னலட்சுமி மௌனமானாள்..

“சீக்கிரமே அவளுக்கு சொல்லி தருகிறேன் அண்ணி..”

“ம்.. ம்.. இப்படி ஒரு அரை லூசை வைத்துக் கொண்டு பெரும்பாடுபட வேண்டியதிருக்கிறது..” முணுமுணுத்தபடி அழும் குழந்தையை சமாதானப்படுத்த தோட்டத்திற்கு தூக்கி போனாள்..
தெளிவாக காதில் விழுந்த அந்த முணுமுணுப்பில் அன்னத்தின் முகம் வாடியது மகளின் மேல் எரிச்சல் வந்தது..

“ஏன்டி தினம் தினம் குழந்தையை தூக்க சொல்லித் தருகிறேனே.. உன் மூளையில் ஏறவில்லையா..?”

“சரியாகத்தான் மம்மா பிடித்தேன்.. கை நழுவி விட்டது..”
எப்போதும் இல்லாமல் இப்போது மகளின் கொஞ்சலின் மீது கோபம் வந்தது..

“உனக்கே ஒரு குழந்தை பிறந்துவிட்டது சஸி.. இன்னமும் நீயே ஒரு குழந்தை போல் கொஞ்சிக் கொண்டிருந்தாயானால் எப்படி..?”சஸாக்கி குழப்பமாய் பார்த்தாள்..

“நான் என்ன செய்ய வேண்டும் மம்மா..?”எரிச்சல் மிக சட்டென மகளின் தலையில் கொட்டினாள்..

“மட்டி.. மரமண்டை..”



“ஆன்ட்டி..” கண்டிப்பான குரலுடன் உள்ளே வந்தான் பாலகுமரன்..

“எதற்காக சஸியை கொட்டுகிறீர்கள்..?”

“மூன்று கொட்டு கொட்டி விட்டார்கள் பாலா..” சிறு பிள்ளையாய் புகாரளித்தாள் சஸாக்கி..
அந்த பாவனையில் அவளை இறுக கட்டிக்கொள்ள தோன்ற,

“நீங்க போங்க ஆன்ட்டி.. நான் பார்த்துக் கொள்கிறேன்..” அன்னத்தை அனுப்பிவிட்டு, தான் நினைத்ததை செய்தான் பாலகுமரன்..

அவன் வாசம் நாசி நுழைந்து மூளையை தாக்க.. “விடுங்க பாலா..” மெலிதாய் முணுமுணுத்தாள்..

“ம்.. எப்போதும் விடுங்கதானா..? என்னைக் கட்டிக்கோங்க பாலான்னு சொல்லவே மாட்டாயா..?”
அவனது ஏக்கத்தில் அவளுக்கு மேனி சிலிர்த்து சிவந்தது..

“ச்சீ போங்க..” அவனை தள்ளி விட்டு அவனிருந்து விலக முயன்றாள்.. ஆனால் அவளது முயற்சி தோல்வியுற்றது..

“என்னடா சகி.. உன் அம்மாவிற்கும் உனக்கும் என்ன சண்டை..?”

“சண்டையா.. இல்லையே அம்மா என்னை திட்டினார்கள்.. அவ்வளவுதான்..”

“மக்கு அதுதான் ஏன் என்று கேட்டேன்..”

“அது.. குழந்தையை நான் கீழே போட பார்த்தேன்..” சொன்னபடி சென்றவளின் உடல் நடுங்கியது..
ஆதரவாய் அணைத்திருந்தவளை தன்னை விட்டு விலக்கியிருந்தான் அவன்..

“என்ன சகி குழந்தையை சரியாக தூக்ககூட முடியாதா உனக்கு..?”

“இ… இல்லையே.. சரியாகத்தான் பிடித்திருந்தேன்.. ஆனால் எப்படியோ நழுவி விட்டது..” அவள் குரலும் நடுங்க தொடங்க,

“ப்ச்..” என்ற எரிச்சல் குரலுடன் அவளை விட்டு போனான் பாலகுமரன்..

“கோபமாக இருக்கிறீர்களா பாலா..?” பத்தே நிமிடங்களில் கெஞ்சலாய் கேட்டபடி தன் அறைக்குள் வந்து நின்றவளை கோபிக்க தோன்றவில்லை அவனுக்கு.. கை நீட்டி அணைத்துக் கொள்ளவே தோன்றியது..
இதமான சில நிமிட அணைப்பின் பின் நண்டுக் கால்களாய் தன் உடலின் மூமீது ஊற ஆரம்பித்து விட்ட அவன் கைகளில் சஸாக்கியின் உடல் வியர்வையில் நனைய தொடங்கியது..

“விடுங்க பாலா..”

“எனக்கு பயமாக இருக்கிறது..”

“நான் போக வேண்டும்..”
போன்ற அவளது மறுப்புக்களை லட்சியம் செய்யாமல் அவளுள் மூழ்க துடித்திருந்தான் பாலகுமரன்..
திடுமென எழுந்து விட்ட வேகத்தில் அவனை தன்னை விட்டு தள்ளியிருந்தவள் பட்டென அவன் கன்னத்தில் அறைந்தாள்..

“தொடாதேன்னு சொல்லிட்டே இருக்கேன்.. திரும்ப திரும்ப தொடுறியே.. தப்புன்னு தெரியலை உனக்கு..?” பாலகுமரன் அதிர்ந்து நின்றான்..



What’s your Reaction?
+1
16
+1
10
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-11

11 ‘‘வி.கே.வி நம்முடைய கான்ட்ராக்ட் கோட் தெரிந்து கொள்ள என்னிடமே பேரம் பேசினார் தெரியுமா மேடம்?" சஷ்டிகா சுமேரியாவிடம் சொல்ல,…

6 hours ago

மீனா -ராஜியை பார்த்தவுடன் எஸ்கேப்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல பாண்டியன் கதிரை திட்டுவதாக அமைந்திருந்தது. இரவில்…

6 hours ago

‘கதாநாயகன்’ விமர்சனம்

பயந்த சுபாவம் கொண்ட ஹீரோ விஷ்ணு விஷாலுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹீரோயின் கேத்ரின் தெரசாவுக்கும் காதல். காதலியை…

6 hours ago

நூடுல் பாக்கெட்டில் இருக்கும் மசாலாவை வீட்டிலேயே செய்யலாம்.. இதோ ரெசிபி

வீட்டில் வகை வகையாக மசாலா போட்டு சமைத்தாலும் கடைகளில் இருந்து வாங்கி உண்ணும் மசாலாக்களின் சுவையை போல நம்மால் செய்ய…

7 hours ago

சரணடைந்தேன் சகியே – 21

21     சிலீரென கண்ணாடி விழுந்து நொறுங்கும் சத்தத்தில் அபிராமி வேகமாக வந்து பார்த்தாள்.. சில விருந்தாட்கள் வருவதால்…

11 hours ago

மாமியாரை அடிக்க கை ஓங்கிய கோபி.. – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சாவித்திரியை…

11 hours ago