மே மாத ராசி பலன்கள் (மேஷம், ரிஷபம்)

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை – ராசியில் சூரியன், குரு, சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 01-05-2024 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 07-05-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 13-05-2024 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20-05-2024 அன்று சுக்கிர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 24-05-2024 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 31-05-2024 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.



 

பலன்கள்: எந்த காரியங்களிலும் நேர்மையும் உண்மையும் கொண்ட மேஷ ராசி நண்பர்களே! நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். நேரத்தின் அருமையை உணர்ந்தவர். இந்த மாதம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சினையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.

கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.



 

அஸ்வினி: இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடல் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.

பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். போட்டிகள் குறையும்.



ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 01-05-2024 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 07-05-2024 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-05-2024 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 20-05-2024 அன்று சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 24-05-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 31-05-2024 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிக்கும் திறமை உடைய ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம்.

செய்தொழிலில் மனநிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேலஅதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மன மகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

 



 

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும்.

ரோகிணி: இந்த மாதம் நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சினை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ-17

17 " காஸ்மெடிக் சர்ஜரி " மதுரவல்லி முணுமுணுத்தாள் . " அ ...அப்படின்னா ? " சங்கரவல்லியின் கிராமத்து மூளைக்கு எட்டாத விசயங்கள் இவை . " ப்ளாஸ்டிக் சர்ஜரி கேள்விப்பட்டிருப்பீர்களே அம்மா ? முகத்தை  ,உடலை…

2 hours ago

யூடியூப்பர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவத்துறை …

தனக்கு பிறக்கப்போகும் குழந்தை தொடர்பாக வெளிநாட்டில் ஸ்கேன் செய்து பார்த்து வீடியோ வெளியிட்ட யூடியூப்பர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க…

2 hours ago

வீட்டில் குடைமிளகாய் செடி வளர்ப்பது எப்படி.?

குடைமிளகாய் என்று அழைக்கப்படும் கேப்ஸிகம்ஆனது பயிரிடப்பட்டு விற்பனைப்படுத்தப்படும் ஒன்றாகும். இது பல்வேறு வகையான சமையலுக்கு பயன்படுகிறது. மேலும் இது உணவிற்கு…

2 hours ago

பூவே உனக்காக பட ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்

இன்று தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிமுகத்தால் சினிமாவில் நுழைந்து…

2 hours ago

சாகர் ரத்னா ஓட்டல் – இது ஜெயராம் பனன் வெற்றிக் கதை!

புதுமையான யோசனைகளாலும், கடின உழைப்பாலும் கோடீஸ்வரர்களாக முன்னேறிய பல தொழில்முனைவோரின் கதைகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பிரபல தென்னிந்திய…

5 hours ago

சிட்டியின் பிளானுக்கு ஆப்பு வைத்த முத்து-சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சத்தியா…

5 hours ago