Categories: lifestyles

கண்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

“தானத்தில் சிறந்த தானம் கண் தானம்” என்பார்கள். இந்த உலகை நம்மிடம் அறிமுகப்படுத்தும் மிக முக்கியமான உறுப்பு கண் தான். மற்ற உறுப்புகளை விட கண்ணிற்கு என்று தனித்துவம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.இந்த முக்கிய உறுப்பைப் பற்றி தெரிந்து கொள்ளுவோம்:

  • மனிதன் சராசரியாக 10 செக்கன்களுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான்

  • கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சாரியான பாராமரிப்பு இருந்தால்…

  • குழந்தைகளுக்கு கண்ணீர் வராது அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும்.

  • உலகினில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக குருடாக உள்ளனர்

  • கண்மணியை மற்றும் சத்திரசிகிச்சைகளை பற்றிய ஆய்வு தற்போதும் வைத்தியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. கண்களுக்கும் மூளைக்கும் தொடர்புடைய நரம்புகளை எவ்வாறு இணைப்பது என்பது பற்றிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகிறது.

  • கண்களின் கோள வடிவ செல்கள் (ராட் செல்) வடிவத்தையும் கூம்பு வடிவ செல்கள்(கோன் செல்) நிறங்களையும் பார்க்க உதவுகின்றன.

  • உங்கள் கண்களின் அளவு கிட்டதட்ட 1inch அகலம் கொண்டது. பாரம் கிட்டத்தட்ட 0.25 அவுன்ஸ்.

  • சிலருக்கு இயற்கையாகவே ஒரு கண்ணில் ஒரு நிறமும் மற்ற கண் இன்னொரு நிறமுமாக பிறந்திருப்பார்கள். இது ஒரு நோய் பெயர் ஹீடகோமியா.(heterochromia)

  • மற்ற தசைகளை விட கண் தசைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் விரைந்து இயங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன.



  • 80% கண்நோய்கள் உலகில் தீர்க்கப்படக் கூடியதாகவும் நிவாரணம் பெற கூடியதாகவும் உள்ளது.

  • உலகில் பொதுவான கண் நிறம் கபிலம் (பிரவுன்) ஆகும். கண்களின் நிறம் கருவிழி படலத்தில்( iris) உள்ள மெலனினை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

  • நாங்கள் கண்களால் பார்த்தாலும் உண்மையான பார்வையாளன் மூளை தான். அதுதான் பார்த்தவற்றை அறிந்துகொள்ளவும் வகைப்படுத்தவும் உதவுகிறது.

  • நாம் பிறந்ததிலிருந்து அனைத்து உறுப்புகளும் வளர்கின்றன கண்களை தவிர. கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும் .

  • கண்கள் திறந்தபடி தும்முவது சிரமமானது பெரும்பாலும் முடியாது.

  • தீக்கோழியின் மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும்.

  • புகைப்பிடிப்பது கண்களைப் பாதிக்கும் குறிப்பாக இரவு கண் பார்வையை..

  • எமது கண்களுக்குள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக வேலை செய்யும் உறுப்புக்களைக் கொண்டுள்ளது.

  • மனிதக் கண்களுக்கு மனிதக் கண்களுக்கு சிவப்பு, நீலம், பச்சை நிறங்களை மட்டுமே பார்க்க முடியும். ஆற்ற நிறங்களைப் பார்ப்பது இதன் கலவையை களாகவே உருவாக்கப்படுகிறது.

  • பல்லிகள் மனிதனைவிட நிறங்களை அறிவதிலும்  மந்த ஒளியில் பார்ப்பதிலும் 350 மடங்கு சிறந்ததாக விளங்குகிறது.

  • டால்பின்கள் ஒரு கண் திறந்தபடியே படுக்கும்.

  • தேனிக்கு 5 கண்கள் உண்டு.

  • மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.

  • கண் முடியில் (eyelashes) கண்களுக்குப் புலப்படாத, தீங்கு செய்யாத நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/இந்திரன் வியந்த கர்ணன்!

பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான துரியோதனனைத்…

3 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு பயறணீநாத சுவாமி திருக்கோவில்

சுவாமி : பயறணீஸ்வரர். தலச்சிறப்பு : இவ்வாலயம் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாகும். தல வரலாறு : இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு முன்…

3 hours ago

நாள் உங்கள் நாள் (22.05.24) புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 22.05.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 9 ஆம்…

3 hours ago

இன்றைய ராசி பலன் (22.05.24)

குரோதி வருடம் வைகாசி 9, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு…

3 hours ago

ஆனந்தியிடம் உண்மையை சொல்ல போகும் அன்பு.. ஆட்டத்தை கலைக்க ரெடியான மகேஷ்- சிங்க பெண்ணே சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த வார எபிசோடில் இருந்தே…

14 hours ago

பாக்கியாவுக்கு வந்த புது சிக்கல் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வி ஜே…

14 hours ago