பெண் தெய்வத்தின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க இந்த பரிகாரம் செய்து பாருங்க!

ஒரு குடும்பத்திற்கு அம்பாளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் போதும். அந்த வீட்டில் சுபகாரியத் தடை இருக்காது. நோய்நொடி பிரச்சனை இருக்காது. செல்வ கடாட்சத்திற்கும் எந்த ஒரு குறைபாடும்  வராது. சில வீடுகளில் பெண் தெய்வம், குலதெய்வம் ஆக இருக்கும். ஆனால் அந்த குலதெய்வம் ஆனது வீட்டில் தங்காமல் இருக்கும். இதனால் அந்த வீட்டிற்கு குலதெய்வ ஆசீர்வாதம் கிடைக்காமலே இருக்கும். கன்னிப்பெண்களின் கையால் இந்த ஒரு பொருளை கொண்டு வந்து பூஜை அறையில் வழிபாடு செய்யும்போது, அம்பாளின் ஆசிர்வாதத்தை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது நடக்க, பெண் தெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.



பெண் தெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற பரிகாரம்.

வேப்பமரம். நம் வீட்டு பக்கத்தில் கட்டாயம் இருக்கும். அந்த வேப்ப மரத்தில் இருந்து கொஞ்சம் தடிமனாக இருக்கும் குச்சியை உடைத்துக் கொள்ளுங்கள். அதை வீட்டிற்கு கொண்டு வந்து மஞ்சள் தண்ணீரால் கழுவி, காய வைத்து விடுங்கள். பிறகு அந்த வேப்பங்குச்சியை உங்கள் வீட்டு கன்னிப்பெண் கையில் கொடுக்க வேண்டும். திருமணம் ஆகாத பெண் பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா. அவர்களுடைய கையில் இந்த வேப்பங் குச்சியை கொடுத்து அதில் ஒரு மஞ்சள் நூலை கட்டச் சொல்லுங்கள். ஒரு மஞ்சள் நூலை எடுத்து வேப்பங்குச்சியை சுற்றி கட்டி மூன்று முடிச்சு போட்டு விட்டால் அவ்வளவுதான். அது அப்படியே இருக்கும். அந்த வேப்பங்குச்சுக்கு ஒரு காப்பு கட்டுறீங்க அவ்வளவுதான். அந்த கன்னிப் பெண்ணின் கையாலேயே அந்த வேப்பங்குச்சுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, உங்கள் வீட்டு குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி, இந்த குச்சியை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். கூடவே உங்களுடைய வீட்டில் பெண் பிள்ளைகள் யாராவது சின்ன வயதிலேயே இறந்து இருந்தால், அவர்களையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.



இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. வெள்ளிக்கிழமை காலை 6 – 7, இல்லையென்றால் மாலை 6 – 7, இந்த நேரத்திற்குள் இந்த வேப்பம் குச்சியை பூஜை அறையில் கன்னிப் பெண்ணின் கையால் வைத்து விடுங்கள். பிறகு விளக்கு ஏற்றி அம்பாளை நினைத்து வழிபாடு செய்யுங்கள். உங்க வீட்டிற்குள் குலதெய்வம் நிரந்தரமாக தங்க வேண்டும் அம்பாள் நிரந்தரமாக தங்க வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை இந்த வேப்ப குச்சுக்கு வீட்டில் பூஜை செய்து வர, அந்த அம்பாளின் அனுகிரகம் கிடைக்கும். உங்கள் பெண் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால் வேப்ப மரத்தில் சக்தி தேவி குடி இருப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. உங்க வீட்டில் சுபகாரிய தடை இருக்கிறது. தேவையில்லாத பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுடைய வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது எனும் பட்சத்தில் இந்த வழிபாட்டை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

எங்க வீட்ல பெண் பிள்ளைகளே இல்லை என்றால் என்ன செய்வது. உங்கள் சொந்தக்காரங்க யாராவது இருப்பாங்க. அந்த குழந்தையை அழைத்து வந்து இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்  தவறு ஒன்றும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

1 hour ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

1 hour ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

2 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

2 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

5 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

5 hours ago