Categories: lifestyles

பெண்களே உங்களுக்கு மாதவிடாய் வரலையா?அப்போ இதை செய்யுங்க!

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் சுழற்சி தான். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை. ஒரு சில பெண்கள் மாதவிடாய் உடனடியாக வருவதற்கு மாத்திரைகளை உட்கொள்கின்றனர். அது அந்த அளவிற்கு நல்லதல்ல.

எனவே முடிந்தவரை இயற்கையான முறையில் மாதவிடாய் வருவதற்கு முயற்சி செய்யுங்கள். அந்த வகையில் இந்த பதிவில் இயற்கையான முறையில் மாதவிடாய் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்கப்போகின்றோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.



தேவையான பொருட்கள்:

  1. எள் – தேவையான அளவு

  2. நாட்டு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

  3. தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை:

  • மாதவிடாய் வர பாட்டி வைத்தியம்: ஒரு கடாயில் தேவையான அளவு எள்ளு சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும். பின் இதை ஐந்து நிமிடம் ஆற வைத்து கொள்ளவும். எள் ஆறிய பின்பு அதனை அரைத்து பவுடர் ஆக்கி கொள்ளவும்.

  • பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸ் பண்ணி கொதிக்க வைக்கவும். வெல்லம் கரையும் அளவிற்கு கொதிக்க வைக்கவும்.

  • வெல்லம் கரைந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் எள் பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இதை நீங்கள் குடித்து வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாகும் மற்றும் மாதவிடாய் சரியான காலத்தில் வர ஆரம்பித்து விடும்.

  • மாதவிடாய் வருவதற்கு எள் உருண்டை, எள் பொடி போன்றவற்றையும் சாப்பிடலாம்.



தேவையான பொருட்கள்:

  1. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

  2. தண்ணீர் – 200 ml

  3. வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை விளக்கம் :

  • ஒரு பாத்திரத்தில் சீரகம் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். பின் அதில் 200 ml தண்ணீர் சேர்த்து வெல்லம் அல்லது கருப்பட்டி 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து 7 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

  • பின்னர் இதை வடிக்கட்டி இரவு குடித்து வந்தால் உடனடியாக மாதவிடாய் வர ஆரம்பித்து விடும். மேலும் இதில் இருக்கும் இரும்புசத்து உடம்பில் இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும்.

உடற்பயிற்சி:

  •  உடனடியாக மாதவிடாய் வருவதற்க்கு உடற்பயிற்சி செய்வது நல்லது. ஒரு சில பெண்கள் எப்போதும் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருப்பார்கள். அது கூட ஒரு சிலருக்கு Period வரமால் இருப்பதற்கு காரணமாக இருக்கும்.

  • அதற்கு நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம். அடிவயிற்றிற்கான உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. இதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து மாதவிடாய் ஏற்படும்.



பப்பாளி, அன்னாசி பழம்:

  • மாதவிடாய் வருவதற்கு என்ன சாப்பிடலாம்: பப்பாளி அல்லது அன்னாசி பழம் மாதவிடாய் வருவதற்கு ஒரு சிறந்த உணவு.

  • ஒரு முழு பப்பாளி அல்லது அன்னாசி பழத்தை காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் சாப்பிட்டு வந்தால் தள்ளிப்போன மாதவிடாய் உடனடியாக வரும்.

பேரிச்சம்பழம்:

  • உடலில் இரத்தத்தை அதிகரிப்பதற்கு பேரிச்சம் பழம் ஒரு சிறந்த உணவு.

  • பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை மற்றும் சரியான நேரத்தில் மாதவிடாய் வருவதற்கும் உதவியாக இருக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

3 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

3 hours ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

3 hours ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

3 hours ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

15 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

15 hours ago