Categories: Samayalarai

சுவையான நண்டு மசாலா குழம்பு..

ஞாயிற்றுக்கிழமை என்றாலே கண்டிப்பாக வீட்டில் ஏதாவது ஒரு அசைவ உணவு இடம் பெற்றிருக்கும். அதற்கு காரணம் அன்று தான் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். மட்டன், சிக்கன், மீன், இறால் என பல அசைவ உணவுகள் இருந்தாலும் காரசாரமான நண்டு குழம்பு என்றால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள்.

அதுவும் நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட எவ்வளவு சிரமப்பட்டாலும் அதன் உள்ளே உள்ள அதன் சுவையான சதை காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இதை சாப்பிடுவார்கள். எனவே நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான நண்டு மசாலா குழம்பு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.



செய்முறை விளக்கம்  :

நண்டு மாரினேட் செய்ய தேவையானவை :

  • நண்டு – 18 – 10

  • மஞ்சள் – 1/2 டீஸ்பூன்

  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

  • உப்பு – சிறிதளவு

குழம்பு வைக்க தேவையானவை :

  • பெரிய வெங்காயம் – 2

  • தக்காளி – 3

  • பச்சை மிளகாய் – 1

  • துருவிய தேங்காய் – 1/2 கப்

  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

  • கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்

  • கருப்பு மிளகு – 2 டீஸ்பூன்

  • பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்

  • எண்ணெய் – 3 டீஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு



செய்முறை விளக்கம் :

  • முதலில் நண்டுகளை நன்றாக சுத்தம் செய்து அலசி அதன் நெறிகளை முழுதாகவோ அல்லது இரண்டு துண்டுகளாகவோ உடைத்து, மேலும் அதிலுள்ள அதன் கால்களையும் தனியாக உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.

  • பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து 15 – 20 நிமிடங்கள் மூடி போட்டு ஊற வைக்கவும்.

  • அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும்.

  • பின்னர் அதனுடன் துருவிய தேங்காய், கருப்பு மிளகு மற்றும் பெருஞ்சீரகம் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

  • தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

  • இதன் மேல் எண்ணெய் பிரிந்து வந்ததும் சுவைக்கேற்ப உப்பு கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து சமைக்கவும்.

  • ஒரு கொதி வந்தவுடன் மாரினேட் செய்த நண்டு துண்டுகளை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

  • பின்னர் நண்டு மசாலா குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி 20 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.

இறுதியாக கொத்தமல்லி இலைகளை நறுக்கி போட்டு இறக்கினால் சுவையான நண்டு மசாலா குழம்பு ரெடி.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

29 mins ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

33 mins ago

அழகிய காஷ்மீரை 6 நாள் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்கலாம்.. எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி காஷ்மீர் டூர் பேக்கேஜை பயணிகளுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பயணம் சண்டிகரில் இருந்து தொடங்கும். ஐஆர்சிடிசியின்…

35 mins ago

உங்க நட்புக்கு நா பலிகிடாவா? கதறும் சுசித்ரா

சாதுமிரண்டா காடு கொள்ளாது என்று சொல்லுவாங்க, அப்படித்தான் இப்போது பாடகி சுசித்ரா பொங்கி எழுந்து கொண்டிருக்கிறார். பேச வேண்டிய நேரத்தில்…

37 mins ago

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

3 hours ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

3 hours ago