18

மீண்டும் ….மீண்டும் எனக்கே ஓட்டு போட்டு முதல்வராக்குகிறாய் ,
இனி சர்வாதிகாரியாகிவிடலாமென்ற முடிவெடுக்கையிலெல்லாம்
சத்தமின்றி உன் அடிமையாகிவிடுகிறேன் …

இதுதான் உங்க மருமகளா …? ” அந்த மிருணாளினியின் அம்மா சங்கீதா கேட்டாள் .

சங்கீதாவும் , மிருணாளியும் லேசர் பார்வை கொண்டு மீராவை அளந்து கொண்டிருந்தனர் .

” ஆமாம் அண்ணி இவள்தான் .நீங்க உள்ளே வாங்க .மிருணா வாடா …” இடையில் நின்ற மீராவின் கையை பற்றி ஒதுக்கிவிட்டு அந்த மிருணாளினியின் கையை பற்றி அழைத்தாள் சுந்தரி .

” எப்படி இருக்கீங்க அத்தை ..? ” கண்களை மீரா மேல் வைத்தபடி அத்தையை விசாரித்தாள் மிருணாளினி .

” உன் பேரென்ன …? ” சங்கீதா மீராவை கேட்டாள் .

பதில் சொல்ல மீராவிற்கு தோணவில்லை .

” ரொம்ப அழகாய் இருக்கிறாய்டா மிருணா …” சுந்தரியின் வர்ணனையில் அந்த மிருணாவை நிமிர்ந்து பார்த்த மீரா சோர்ந்தாள்.

நிறைய வெள்ளியில் கொஞ்சம் தங்கம் சேர்த்து செய்த சிலை போல அவள் மின்னினாள் .விசேச வீட்டிற்கான அவளது அலங்காரம் வைரமாக மினுங்கியது .கலைந்த தலையும் , வழியும் வியர்வையுமாக நின்ற தனது தோற்றம் மீராவிற்கு அசிங்கமாக தோன்றியது .

மிக நேர்த்தியாக பார்த்து பார்த்து அலங்கரித்தால் தான் அந்த மிருணாளினி அருகில் அவளால் வர முடியும் .அப்படி இருக்கையில் இந்த மாதிரி களைத்த தோற்றத்துடன் நின்றால் …மீரா உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர எண்ணி உள்ளே திரும்பினாள் .

” இவுங்களுக்கு ஜீஸ் கொடு மீரா …” 

” அந்த பெட்ஷீட்டை இங்கே விரி …” 

” இந்த டம்ளரையெல்லாம் கழுவு …” 

மீராவிற்கு சொல்ல அடுத்தடுத்து சுந்தரிக்கு வேலை இருந்தது .

சாலை அசிங்கம் தன் மேல் தெறித்திருந்ததது போன்ற அருவெறுப்பை தனது தோற்றத்தில் உணர்ந்திருந்த மீரா பற்களை கடித்தபடி இந்த வேலைகளை செய்தாள் .

” இந்த வெற்றிலைகளை கழுவி இந்த தட்டில் அடுக்கு …கூடவே பாக்கும் , சுண்ணாம்பும் வை….சாப்பிட்டு  முடித்தவர்கள் போட்டுக் கொள்ள ….”

” ஐயோ அத்தை அவர்களை கொஞ்சம் விடுங்க …அவுங்க முதல்ல டிரஸ் மாத்தட்டும் ….” 

ஆதரவாக ஒலித்த மிருணாளினியின் குரலை ஆச்சரியமாக பார்த்தாள் மீரா .

” சரி ..சரி போ …போய் சேலையை மாற்று ….,” சுந்தரி விடுதலையளித்தாள் .



இந்த மிருணாளினியை எந்த கணக்கில் சேர்ப்பது ….பட்டுச்சேலை மடிப்பை சரி செய்தபடி யோசித்தாள் மீரா .கதவு தட்டப்பட்டது .மிருணாளினிதான் வெளியே நின்றிருந்தாள் .

” உள்ளே வரலாமா …? ” புன்னகைத்தாள் .

” வாங்ங்க …” அவளை உள்ளே விட்டு விட்டு தனது தலையை பின்னிக்கொள்ள தொடங்கினாள் மீரா .

” சேலை அழகாக கட்டியிருக்கீங்க ….” சொன்னபடி உள்ளே வந்து அறையை விழிகளை சுழற்றி பார்த்தாள் .

” நன்றி .என்ன பாக்குறீங்க …? ” 

” இந்த ரூம்ல எத்தனை நாள் எப்படியெல்லாம் நாங்க எல்லோரும் விளையாண்டிருக்கிறோம் .புதையல் விளையாட்டு விளையாடுவோம் .நந்து அத்தான்தான் எங்களுக்கு ஹெட் .அவர்தான் ஒளித்து வைத்து டிப்ஸ் அங்கங்கே வைத்திருப்பார் .நாங்க எல்லோரும் வீடு பூராம் சுத்துவோம் .இந்த ரூம்லதான் அடிக்கடி புதையலை வைப்பார் ….ம் …இதெல்லாம் ஒரு காலம் …” பெருமூச்சு விட்டவள் ஒரு நாள் இந்த பீரோவில் ஒளித்து வைத்துவிட்டார் ….” என்றபடி அங்கிருந்த பெரிய மர பீரோவை திறந்தாள் .

” என்ன பேச்சை நிறுத்திட்டீங்க …? ” மிருணாளியின் சிறுவயது விளையாட்டு கதைகளை கேட்க பிடிக்காமல் கண்ணாடியில் விழிகளை பதித்திருந்த மீரா திரும்பி கேட்டாள் .

மிருணாளினி பீரோவை பார்த்தபடியிருந்தாள் .

” உன் டிரஸ்ஸெல்லாம் ஏன் இங்கே இருக்கு …? ” 

நந்தகுமாருடைய துணிகளுடன் சேர்த்து அடுக்கப்பட்டிருந்த மீராவின் துணிகளை பார்த்து கேட்டாள் .

திடீரென அவள் ஒருமை உறுத்த ..” ஏன் என் கணவருடைய உடைகளோடு என்னுடைய உடையை அடுக்கியிருக்கிறேன் ….” என்றாள் அழுத்தமாக .

” நீயும் இதே அறையில்தான் தங்குகிறாயா …? “

” அர்த்தமற்றதாய் இருக்கிறது உங்கள் கேள்வி .கணவனும் , மனைவியும் ஒரே அறையில்தானே தங்குவார்கள் ….” 

” ஓ….அத்தானுக்கு இதே பீரோவில் நானே எத்தனை முறை துணிகளை அடுக்கி கொடுத்திருக்கிறேன் தெரியுமா …? இதோ இந்த பீரோவில் ஒரு ரகசிய அறை உண்டு அது உனக்கு தெரியுமா …? ” 

பீரோ தட்டோடு தட்டாக இருந்த அறையை உயர்த்தி காட்டினாள் .

வலிக்கும் மனதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ” ஓஹோ …” என கண்ணாடியிடம் திரும்பக்கொண்டாள் மீரா .

பீரோவை மூடி விட்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள் மிருணாளினி .கை , கால்களை பரப்பி ஒய்யாரமாக படுத்திருந்தவளை கண்டபோது தான் இன்னமும் ஒரு முறை கூட அந்த கட்டிலில் படுத்ததில்லை என்பது மீராவிற்கு கசப்பாய் நினைவு வந்தது .

” இந்த கட்டிலை அத்தான் யாருக்கும் தரமாட்டார் .ஆனால் நான் வந்தால் மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு வெளியே போய் படுத்துக்கொள்வார் ….” தானாக சொல்லிக்கொண்டாள் .

இனி அந்தக் கட்டிலில் தான் படுக்கத்தான் வேண்டுமா …? யோசிக்க ஆரம்பித்தாள் மீரா .

” எவ்வளவு ஆசையாக ..நாங்கள் பழகினோம் …? எதற்காக எங்களை பிரித்தார்கள் …? ” மிருணாளியின் குரல் தழுதழுக்க மீராவிற்குமே கொஞ்சம் வேதனையாக இருந்தது .

இவள் பாவம்தானே …திருமணம் நிச்சயம் என்ற உறுதியோடு பழகிவிட்டு திடீரென  கிடையாது என்றால் …ஆனால் திருமண உறுதியோடு பழகிய இவர்களின் பழக்கம் எந்த அளவில் இருந்திருக்கும் ..? இது போல் ஒரு வீட்டிற்குள் சுற்றி சுற்றி வரும் …காதல் கலந்திருந்த இவர்களின் பழக்கம் ….மீராவிற்கு வேர்க்க தொடங்கியது .

உடனேயே இல்லை அவள் கணவன் அப்படிப்பட்டவன் கிடையாது .தாலி கட்டிய மனைவியையே தொடாமல் தள்ளி வைத்திருப்பவன் .தாலி கட்டாத இவளுடன் கண்டிப்பாக கட்டுப்பாடோடுதான் பழகியிருப்பான் .ஆனால் ….அளவு மீறிய காதல் எந்த கட்டுப்பாட்டிற்கும் அடங்காத்துதானே ….அத்தோடு பிடிக்காத மனைவியிடம் காதல் பொங்கி வரவா செய்யும் …?

தனக்குள்ளேயே இரு கூறாக பிரிந்து வாதிட்டுக் கொண்டிருந்தவள் ….

” உன்னிடம் அத்தான் எப்படி பழகுகிறார் …? ” மிருணாளியின் இந்த அதிரடிக் கேள்வியில் திகைத்தாள் .இவளென்ன இப்படி கேட்கிறாள் …?

” எ..என்ன கேட்கிறீர்கள் ..? ” 

” என் நந்து அத்தான் உன்னோடு எப்படி பழகுகிறார் ..என்று கேட்டேன் ” இப்போது மிருணாளினி எழுந்து வந்து , அவள் முகத்தை உறுத்தபடி நின்றிருந்தாள் .

சுதாரித்துக் கொண்ட மீரா ” ஒரு கணவன் மனைவியிடம் பழகுவது போல் பழகுகிறார் …” அழுத்தி சொன்னாள் .

அவளை கூர்ந்து பார்த்தவள் ” பொய் …என்னை தவிர வேறு யாருடனும் அவரால் அப்படி பழக முடியாது …” உறுதியாக கூறினாள்.

தன் நிராதரவான நிலை உணரப்பட தடுமாறி மீரா நின்றபோது வெளியே சுந்தரி அழைக்கும் குரல் கேட்டது .

” அத்தை கூப்பிடுறாங்க …” வேகமாக வெளியேறப்போனவளை …

” எத்தனை வருடமானாலும் என் அத்தான் மனதில் மனைவியின் இடத்தில் நான் மட்டும்தான் இருப்பேன் …” மீண்டும் கட்டிலில் ஒய்யாரமாய் சாய்ந்து அமர்ந்து சொன்னபடி மீராவை காயப்படுத்தி அனுப்பினாள் .

கலங்கிய கண்களுடன் வெளியேறிய மீரா கை நிறைய பைகளுடன் வெளியிலிருந்த வந்த நந்தகுமாருடன் மோதிக்கொண்டாள் .அவன் கை பைகள் கீழே விழுந்தன.



” பார்த்து வரக்கூடாதா மீரா .எல்லாம் சிந்திவிட்டது பார் …” கோபமான கணவனின் குரலில் மேலும் கலங்கிய தன் விழிகளை குனிந்து மறைத்தபடி கீழே அமர்ந்து சிதறிய சாமான்களை சேர்க்க தொடங்கினாள் .

தானும் அவளுடன் குனிந்து சாமான்களை எடுத்தவன் திடீரென அவள் முகத்தை தன் விரலால் உயர்த்தினான் .
” மீரா …என்னம்மா …? கண்ணெல்லாம் கலங்கியிருக்கிறதே .அழுதாயா என்ன ..?  ” ஆதரவான அவன் குரலில் மீராவின் கண்கள் மேலும் கலங்கியது .

” என்னத்தான் தரையில் எதுவும் புதையல் எடுக்கிறீர்களா ….? அறை வாசலில் ஒயிலாய் சாய்ந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த மிருணாளியின் குரலில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு எழுந்து நின்றான் நந்தகுமார் .

” மிருணா …நீயா …? ” அவன் குரலில் என்ன இருந்தது ….? 



What’s your Reaction?
+1
22
+1
19
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Radha

View Comments

Recent Posts

இந்த 5 முக்கியமான விஷயங்களை பற்றி மருத்துவர்கள் உங்களிடன் ஒருபோதும் சொல்லவே மாட்டாங்க..!

மருத்துவர்கள் நமக்கு தேவையான மருத்துவ வழிகாட்டுதலை வழங்கினாலும், ஒரு சில முக்கியமான விஷயங்களை அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்கலாம். சமச்சீரான வாழ்க்கை…

2 hours ago

வெள்ளை முடிக்கு டாட்டா சொல்லலாம்

வயதானவர்களுக்கு நரைமுடி பிரச்சனை இருந்தால் ஒன்று கவலைப்பட தேவை இல்லை.. ஆனால் இப்போது எல்லாம் டீனேஜ் வயதில் இருப்பவர்களுக்கு கூட…

2 hours ago

கோடை காலத்தில் ஆஸ்துமா பிரச்சனையை சமாளிக்க உதவும் 4 வழிகள்..!

கோடை காலம் தொடங்கிவிட்டதால் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது வெப்பத்தை அதிகரிப்பத்தோடு மட்டுமல்லாமல் ஆஸ்துமாவையும் வரவழைக்கிறது. இதுபோன்ற…

2 hours ago

ஜெமினி கணேசனின் மகள் பாலிவுட் சூப்பர்ஸ்டாருடன் நெருக்கம்

சினிமாவில் கல்யாணம் செய்துக்கொண்ட பின்னரும் கூட நடிகர்கள் நடிகைகளுடன் காதலில் விழுவது தொடர்கதையாக தான் இருக்கிறது. இப்போது மட்டுமல்ல 80ஸ்களிலும்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/மகாபாரதம் நடந்தது உண்மைதானா?விளக்கங்கள்-1

மகாபாரதம் என்பது பண்டைய இந்தியாவின் பழம்பெரும் காவியம் ஆகும். கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர இராச்சியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்…

6 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு சாய் பாபா திருக்கோவில்

தலச்சிறப்பு : இக்கோவிலில் துனி என்கிற அணையாத புனித நெருப்பு உள்ள இடம் நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. மற்ற பாபா…

6 hours ago