Categories: CinemaEntertainment

இந்த வாரம் ஓடிடியில் பட்டையை கிளப்ப வரும் படங்கள்..

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் இயக்கசக்க படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி ஓடிடியில் கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தெலுங்கில் காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவான தில்லு ஸ்கொயர் படத்தில் சித்து ஜொன்னலா கட்டா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் மிக நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றதால் ட்ரெய்லர் வெளியீட்டின் போது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ஆனாலும் படம் கோடிகளை அள்ளிய நிலையில் இப்போது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அடுத்ததாக தெலுங்கில் விஜய்தேவர் கொண்டா நடிப்பில் உருவான தி ஃபேமிலி ஸ்டார் படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. அடுத்ததாக தெலுங்கில் பீமா படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.



பிக் பாஸ் பிரபலம் சிபியின் இடி மின்னல் காதல்

அமேசான் பிரைமில் கன்னட மொழியில் வெளியான யுவா படம் வெளியாகிறது. தமிழில் ஆஹா ஓடிடி தளத்தில் வெப்பம் குளிர் மலை என்ற படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் அதே ஓடிடி தளத்தில் பிக் பாஸ் பிரபலம் சிபிச்சந்திரன் நடிப்பில் இடி மின்னல் காதல் என்ற படம் வெளியாகிறது.

மேலும் இந்த வாரம் கொரியன் வெப் சீரிஸாக நெட்பிளிக்ஸில் குட் பாய் எர்த் படம் வெளியாகிறது. மேலும் ஆங்கிலத்தில் குங்ஃபூ பாண்டா 4 படம் பிஎம்எஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நெட்பிளிக்ஸில் டெட்பாடி டிடெக்டிவ்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளிவர உள்ளது.

மேலும் தி பான் ஜோவி ஸ்டோரி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த வாரம் எக்கச்சக்க படங்கள் ஓடிடியில் வர உள்ளதால் ரசிகர்கள் விடுமுறையை இந்த படங்கள் மூலம் செலவிடலாம்.

 



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

4 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

4 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

4 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

4 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

8 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

8 hours ago