Categories: lifestyles

உங்க வீட்டுக்கு ரூம் ஃபிரெஷ்னர் வாங்கப்போறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!

நமது வீட்டில் இனிமையான ஒரு நறுமணத்துடன் பிறரை வரவேற்பதால் கிடைப்பதே ஒரு தனி அனுபவம் தான். நல்ல வாசனை என்பது நமது மனநிலையை மேம்படுத்தி, உங்கள் அறையை சுற்றி ஒரு வரவேற்புத்தக்க சூழலை உருவாக்குகிறது.



உங்கள் வீட்டை வாசனை நிறைந்த ஒரு சொர்க்கமாக மாற்றுவதற்கு நீங்கள் சரியான ரூம் ஃபிரெஷ்னரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த பதிவில் ரூம் ப்ரெஷ்னரை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலமாக நீங்கள் உங்கள் வீட்டின் சூழலை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

உங்களது விருப்பு வெறுப்புகளை அடையாளம் காணவும் : முதலில் உங்களுக்கு என்ன மாதிரியான வாசனைகள் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பூக்கள் அல்லது சிட்ரஸ் வாசனை பிடிக்குமா என்பதை கண்டுபிடிங்கள் அல்லது உங்களுக்கு வுட்டி மற்றும் ஸ்பைசி வாசனைகள் உங்கள் தேர்வுகளாக இருந்தால் அதனை நீங்கள் வாங்கலாம்.



இடத்தை கருத்தில் கொள்ளவும் : ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு விதமான ரூம் ஃபிரெஷ்னர்கள் ஏற்றதாக இருக்கும். உதாரணமாக உங்களது குளியல் அறையில் லேசான ஃப்ரெஷான வாசனை ஏற்றதாக இருக்கும். அதுவே உங்களுடைய வரவேற்பு அறையில் நல்ல சொகுசான மற்றும் கதகதப்பான வாசனை அற்புதமாக இருக்கும். ஆகவே ரூம் ஃபிரெஷ்னரை தேர்ந்தெடுக்கும் பொழுது அந்த அறையின் அளவு மற்றும் அதன் செயல்பாட்டை உங்களது மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்றவாறு தேர்ந்தெடுங்கள்.

அலர்ஜிகளை மனதில் வைத்துக் கொள்ளவும்: ரூம் ஃபிரெஷ்னரை தேர்ந்தெடுக்கும் பொழுது அதனால் உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி ஏற்படுமா என்பதன் அடிப்படையில் அதனை தேர்ந்தெடுக்கவும். அலர்ஜி ரியாக்ஷன்கள் அல்லது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய வாசனைகளை தவிர்க்கவும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு சில வாசனைகள் பிடிக்காது என்றாலும் அதனை தவிர்த்து விடுங்கள்.



இயற்கை பொருட்களாலானதை தேர்வு செய்யுங்கள் : இயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உங்களுக்கு ஒரு உண்மையான சூழலை தருவதற்கு ஏற்றது. செயற்கை ரூம் ஃபிரெஷ்னர்களைக் காட்டிலும் இவை சிறந்த ஒன்றாக இருக்கும்.

பருவ நிலைக்கு முன்னுரிமை வழங்கவும் : பருவநிலையை பொறுத்தவரை உங்களது ரூம் ஃபிரெஷ்னரை நீங்கள் மாற்ற வேண்டும். இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்திற்கு பட்டை அல்லது வெண்ணிலா போன்ற வாசனைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதுவே ஸ்பிரிங் மற்றும் கோடை காலத்தில் லினென் அல்லது சீ பிரீஸ் வாசனைகள் சிறந்ததாக இருக்கும்.

அதிகப்படியான வாசனைகளை தவிர்க்கவும் : உங்களுக்கு ஃபிரஷான லாவண்டர் அல்லது லெமன் பிடிக்கும் என்றாலும் கூட அதனை அதிகப்படியாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். அறையில் பல மணி நேரம் நீடிக்கக்கூடிய மைல்டான வாசனை கொண்ட ரூம் ஃபிரெஷ்னர்களை தேர்வு செய்யுங்கள்.

இரண்டு ரூம் ஃபிரெஷ்னர்களை ஒன்றாக பயன்படுத்தலாம் தனித்துவமான மற்றும் தனிப்பட்ட வாசனை அனுபவத்தை உருவாக்குவதற்கு நீங்கள் இரண்டு வாசனைகளை ஒன்றாக கலந்து பயன்படுத்தலாம். சிறிய அளவுகளில் அதனை பயன்படுத்தி முயற்சி செய்து பார்க்கலாம்.

பல்வேறு வடிவங்களை பயன்படுத்தி பார்க்கவும் : ரூம் ஃபிரெஷ்னர்கள் பொதுவாக ஸ்பிரே, டிஃப்யூசர், மெழுகு மற்றும் பிளக்-இன்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு வடிவத்தையும் பயன்படுத்தி பார்த்து உங்களுக்கு எது ஏற்றதாக இருக்கிறதோ அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

14 mins ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

16 mins ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

20 mins ago

குக் வித் கோமாளியை முதல் எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…

23 mins ago

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

3 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

3 hours ago