Categories: Samayalarai

கேரளா ஸ்டைல் நெய் பத்திரி ரெசிபி

நெய் பத்திரி ரெசிபி என்பது கேரளாவில் பிரபலமான ரொட்டியான பச்சரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு. பத்திரி பச்சரிசி மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, வெங்காயம் மற்றும் தேங்காய்  துருவல் அரிசி மாவுடன் சேர்த்து பூரிகளாக உருட்டி செய்யப்படுவது.



கேரளா ஸ்டைல் நெய் பத்திரி ரெசிபியை குருமா, கேரளா ஸ்டைல் எக் ரோஸ்ட் கறியுடன் சேர்த்து பரிமாறவும்.ரேஷன் பச்சரிசி இருந்தால் சட்டுனு மாவாக அரைத்து சூப்பரான சுவையில்  இந்த நெய் பத்திரி செய்து அசத்தலாம். வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இது போல முயற்சி செய்து பார்க்கலாம். நெய் பத்திரி போல உப்பி வந்து நன்கு தேங்காய் மனமும் சுவையுடன் கூடிய இந்த பஞ்சு போன்ற மெத்தென்ற நெய் பத்திரி அவ்வளவு அருமையாக இருக்கும். நெய் நிறைய விட வேண்டும், அப்போது தான் நெய் பத்திரி காய்த்து போகாமல் இருக்கும் . நெய் பத்திரிநிறைய பொருட்கள் தேவை இல்லை,  பச்சரிசி மாவு ஒரு கப் இருந்தாலே போதும், நாவில் கரையும் நெய் பத்திரி சில நிமிடத்தில் தயார் செய்து விடலாம். ருசியான நெய் பத்திரி எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம்.



தேவையான பொருட்கள்

▢1 கப் வறுத்த பச்சரிசி மாவு

▢1 கப் தண்ணீர்

▢5 சின்ன வெங்காயம்

▢1/2 கப் தேங்காய் துருவல்

▢1/4 ஸ்பூன் உப்பு

▢1 கப் நெய்



செய்முறை விளக்கம்

▢ முதலில் தேங்காயையும், சின்ன வெங்காயத்தையும்  ப்ளென்டரில் நன்றாக தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும் அல்லது அம்மியில் அரைத்துக் கொள்ளவும்.

▢ தண்ணீரை காயவைத்து அதில் அரைத்த தேங்காய் வெங்காய விழுதை சேர்த்து கொதித்ததும் அரிசி மாவை சேர்த்து தீயை குறைத்து மரகரண்டியால் கிளறி சிறிது கட்டியாகும்பொழுது தீயை அணைத்து விடவும்.

▢ மாவு லேசாக கை பொறுக்கும் அளவு சூடேறியதும் சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.

▢ அதனை சின்ன சின்ன வட்டங்களாக உள்ளங்கை அளவுக்கு தேய்க்கவும் அல்லது ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தொட்டு அதன் நடுவில் மாவை வைத்து கையாலேயே சமமாக அழுத்தவும்.

▢ இது 2 சப்பாத்தியை சேர்த்து வைக்கும் தடிமனில் இருக்க வேண்டும்.  பின்னர்நெய்யை காயவைத்து அதில் இந்த பத்திரிகளை பொரித்து எடுக்கவும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

1 hour ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

1 hour ago

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

4 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

4 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

4 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

4 hours ago