13

அழகான பட்டு ரோஜா வண்ணத்தில் பொன் நிற ஜரிகைகள் வேய்ந்த திருத்தமான பரத உடை வைசாலியின் உடலுக்கு அளவெடுத்தாற் போல் தைத்து வந்துவிட்டது. வெளியில் சுமலதாவின் தங்கை வைசாலியின் நடன அரங்கேற்றம் என்று சொல்லிக் கொண்டாலும் விழாவின் உள்நோக்கம் வைசாலியை அவர்கள் குடும்பத்து மருமகளாக அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதுதான்.

“பெரிய ஆட்கள்தான். நிறைய பணமும் வைத்திருக்கிறார்கள்தான். ஆனாலும் இவ்வளவு தைரியமா? எனக்கென்னவோ பயமாக இருக்கிறது” தனக்குள் போல் பேசிக்கொண்ட சுமலதாவை வினோதமாக பார்த்தால் வைசாலி.

” என்னக்கா யாரைப் பற்றி பேசுகிறாய்?” 

“எல்லாம் நம் புகுந்த வீட்டினரை பற்றித்தான். இப்போது இருக்கும் நிலைமைக்கு இந்த அரங்கேற்றம், அறிமுகம் எல்லாம் தேவைதானா? மாமாவிற்கு ஏன் இப்படி புத்தி போகிறதோ தெரியவில்லை”

” அக்கா”  ஆட்சேபமாய் தமக்கையை முறைத்தாள். எப்போதுமே மாமனாரின் முன் பவ்யமாக நிற்பவள் அவர் தலைமறைந்ததும் இதுபோல் அலட்சியமாக பேசுவது வழக்கம்.இதனை வைசாலியால் ஒத்துக்கொள்ள முடிவதில்லை.

 “இப்படி அவர் முகத்திற்கு முன் ஒன்று முதுகிற்கு பின் ஒன்றாக நீ பேசுவது எனக்கு பிடிக்கவில்லை அக்கா” நேரடியாகவே சொன்னாள்.

 சுமலதாவின் இந்த குணத்தை கந்தவேல் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் அவளை ஒரு பொருட்டாக கருதாது அலட்சியப்  படுத்துகிறார் என்று வைசாலிக்கு தோன்றியது.”உன்னைப் பற்றி தெரிந்துதான் மாமா உன்னை அளவோடு நிறுத்தி வைத்திருக்கிறார்”

 அவ்வளவுதான் சுமலதா வெடித்துக்கொண்டு வந்துவிட்டாள். “என்னடி அளவு? எனக்கேதடி இங்கே அளவு? நான் பார்த்து சொன்னால்தான் இங்கே எல்லாம் நடக்கும். என்னை மீறி இங்கே யாரும் எதுவும் செய்ய முடியாது. இந்த குடும்ப ரகசியங்கள் எல்லாம் என் கைக்குள் இருக்கிறது தெரியுமா?”

 ஏதேதோ பேசிய சுமலதாவை அலட்சியப்படுத்தி நகர்ந்தாள் வைசாலி. அப்படி இல்லாமல் கொஞ்சம் பொறுமையாக அக்காவை அரவணைத்து பேசியிருந்தால் நிறைய விஷயங்கள் அவளுக்கு தெரிய வந்திருக்கும். இந்த அரங்கேற்ற விழாவினை முன்பே நிறுத்தி இருப்பாள். ஆனால் விதி இதுதான் போலும்.

 நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் பரத உடையை அணிந்து கொண்டு,  அழகாக அலங்கரித்தபடி கண்ணாடி முன் நின்று பார்த்திருந்தாள் வைசாலி. லிப்ஸ்டிக்கை இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக்கலாமே எண்ணியபடி அதனை எடுக்க போனவளின் கை பற்றியிருந்தான் சித்தார்த்தன்.

” லிப்ஸ்டிக் தானே? வா நானே போட்டு விடுகிறேன்”

” ஐய்யே  உங்களுக்கு தெரியுமாக்கும்?”



” ஏதோ கொஞ்சம், உன்னுடைய உதடுகளை இப்படி பக்கத்தில் பார்க்க கிடைத்த சந்தர்ப்பம். அதனை விட மாட்டேன்” பிடிவாதமாக அவளருகே நெருங்கினான்.

 உடல் எங்கும் பனி தூவிய மேகத்தை விரட்டிய வைசாலி “இன்னமும் இந்த உதடு ஆராய்ச்சியை விடவில்லையா நீங்கள்?” செல்லமாய் கடிந்தாள்

” ஆராய்ச்சியை ஆரம்பிக்கவே இல்லையே! பிறகெப்படி விட முடியும்?” நாடியைப் பற்றி தூக்கி முகத்தை தனக்கு தோதாக உயர்த்தி கொண்டவன் லிப்ஸ்டிக்கால் அவள் உதடு தொட்டான்.

தென்றல் வந்து இதழ்களை வருடுவது போல் சிலிர்த்து கண் சொருகினாள் வைசாலி.” ப்யூட்டிஃபுல் லிப்ஸ்” மேல் உதட்டை முடித்து கீழ் உதட்டிற்கு வந்திருந்தவன் உணர்ச்சியுடன் கிசு கிசுத்தான்.

வைசாலியின் கண்கள் இயல்பாக அவன் உதடுகளில் படிந்தன.”இந்த உதடு ஜோசியமமெல்லாம் ஆண்களுக்கு கிடையாதா?”

“இருக்கிறதே, பார்க்கிறாயா?” பேன்ட் பாக்கெட்டில் இருந்து தனது போனை எடுத்து திரையில் நகர்த்தி அவளிடம் காட்டினான். “உதடுகளை வைத்து ஒருவரின் குணத்தை கணிப்பது சீன தேசத்து ஜோசியம். நீயே பாரேன்”

 அவன் டவுன்லோட் செய்து வைத்திருந்த ஆர்டிக்கலில் உதடுகளின் வடிவங்கள் வண்ணங்கள் தெளிவாக படங்களுடன் காட்டப்பட்டு, அவற்றிற்கான குணநலன்களும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.

 உதடுகளில் இத்தனை வடிவங்களா?  ஆச்சரியமாக அவற்றைப் பார்த்தாள் வைசாலி. தன்னுடைய உதட்டு வடிவத்தை பார்த்தவுடன் அழகான உதடுகள் என்று அவளுக்குமே தோன்றியது.

 “வில் போன்ற மேல் உதடு, சற்றே தடித்த கீழ் உதடு, பலன்களை பாரேன்” அவன் சுட்டிக்காட்ட ஆங்கிலத்தில் இருந்ததின் தமிழாக்கம் மனதில் ஓடியது. மேல் உதட்டிற்கு சித்தார்த்தன் சொன்ன விளக்கங்கள் அதில் அப்படியே இருக்க, தடித்த கீழ் உதட்டிற்கான விளக்கம் காதலை சார்ந்திருந்தது. காதலில் ஆழமானவர்கள், கற்பனை வளம் மிக்கவர்கள், நேர்மையானவர்கள் என்றிருக்க வைசாலியின் முகம் சிவந்தது.

 அழகாக வெட்கப்பட்டவளை ரசித்தபடி பக்கங்களை நகர்த்தியவன் நடுவில் சிறு கோடு கிழித்தாற் போல் மேல் உதடும் கீழ் உதடும் ஒரே  அளவில் இருக்கும் ஆணின் உதடுகளில் நிறுத்தி “பார்” என்றான்.

 அந்தப் படத்துடன் சித்தார்த்தனின் உதடுகளையும் ஒத்து பார்த்து திருப்தியானவள், விளக்கங்களை வாசிக்க அழுத்தமானவன், நேர்மையானவன், பொறுமைசாலி என்று குணம் சொன்ன உதடுகள் காதலில் கைதேர்ந்தவன் காதலுக்காக உயிரையும் கொடுப்பான் என்று முடிந்திருக்க அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள் வைசாலி.

 ” ம்…போங்க எல்லாம் உங்கள் திட்டம் போல் இருக்கிறது” 

“ஏய் நான் தற்செயலாக இந்த இ புக்கை படித்தேன். நானே இதை எழுதியது போலல்லவா சொல்கிறாய்?” என்றவன் அவள் இடைப்பற்றி தன்னருகே இழுத்தான்.

” முன்பே இருக்கும் இடம் தெரியாது. இப்போதோ இந்த ஒட்டியானத்தை வேறு மாட்டிக் கொண்டால், இன்னமும் இடுங்கி எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியதிருக்கிறது ” அவன் கைகள் அவள் இடையைச் சுற்றி தாளமிட, வைசாலி கால்கள் துவண்டு கீழே விழுந்து விடுவோமோ என்று தடுமாறினாள்.

“அதெப்படி உன்னுடைய உடம்பு இவ்வளவு ஷேப்பாக இருக்கிறது வைஷு?” அவள் இடை வடிவை அளந்தபடி கேட்டான்.

” அ…இ…இந்த நடன பயிற்சிதான் காரணம்” அவன் கைகள் உண்டாக்கிய மயக்கத்தை விலக்க முயன்றபடி பதில் அளித்தாள்.

 “ஓ எனக்கும் இந்த நடனத்தை கற்றுத் தருகிறாயா வைஷு, ப்ளீஸ்..”



” என்ன நீங்கள் பரதநாட்டியம் ஆட போகிறீர்களா?”ஆறடி உயர உடலை வளைத்து சித்தார்த்தன் நாட்டியமாடும் காட்சி கண்ணுக்குள் தெரிய வைசாலிக்கு சிரிப்பு பீறிட்டது. 

“எனக்கு ஆடத் தெரியாதென்று நினைத்தாயா?” செல்லமாய் கோபித்தவன், அவள் இடைப்பற்றி இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டு அங்கு மிங்குமாக அசைய துவங்கினான். “எப்படி ஆடுகிறேன் பார்”.

 அடப்பாவி இதற்கு நாட்டியம் என்றா பெயர் வைத்திருக்கிறான்! உடல் முழுவதும் கதகதப்பாக படிந்த அவனுடைய தேக சூட்டிலிருந்து விடுபட முடியாமல் தடுமாறினாள் வைசாலி.

” இந்த லிப்ஸ்டிக் என்ன டேஸ்டில் இருக்கும் வைசாலி? எனக்கு தெரிய வேண்டுமே” சித்தார்த்தனின் சந்தேகத்திற்கு  வைசாலி சிலிர்த்து நின்றாள்.

அப்போது அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த சுமலதா இருவரின் நிலையைக் கண்டு திகைத்து நிற்க அவளுக்கு பின்னால் வந்த பெண்ணோ கண்களில் குரோதத்துடன் நின்றாள்.

” என்னக்கா இது கதவை தட்டாமல்…” எரிச்சலுடன் அக்காவை கடிந்தபடி யார் இவள் என்பது போல் அந்த பெண்ணை பார்த்தாள் வைசாலி. முதலில் இருந்த குரோதம் மறைந்து போய் கண்களில் உற்சாகம் காட்டிக்கொண்டு நின்றாள் அந்த பெண்.

 வேகமாக முன்னால் வந்து வைசாலியின் கைப்பற்றி குலுக்கினாள்.” ஹாய் நான் மாயா. சித்தார்த்தனின் மனைவி” 

 இதோ இன்னும் சிறிது நேரத்தில் இந்த பூமி இரண்டாக பிளந்து விடத்தான் போகிறது, வெகு நிச்சயமாக வைசாலி நினைத்தபடி சித்தார்த்தனை பார்க்க அவன் முகம் சுண்ணாம்பாக  வெளுத்திருந்தது.



What’s your Reaction?
+1
40
+1
20
+1
2
+1
1
+1
1
+1
0
+1
7

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

2 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

2 hours ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

2 hours ago

குக் வித் கோமாளியை முதல் எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…

2 hours ago

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

4 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

5 hours ago