13

பாஸ்கர் , உடனடியாக வினயாவின் அம்மாவை மருத்துவமனைக்கு கூட்டிப் போனான்.

வினயா , வைத்தியும் அங்கே செல்ல,ஒன்றும் செய்ய தோன்றாமல் பாஸ்கர் குடும்பத்தினர் தங்களது வீட்டுக்கு திரும்பினர்.

ஒரு புறம் அம்மாவின் உடல் நிலை.

இன்னொரு புறம் மாமா பற்றிய செய்தி.

இதெல்லாம் இருக்க…பாஸ்கர் பெண் பார்க்க வந்த போது

இப்படி ஏற்பட்ட நிகழ்வு…

இந்த பெண்ணின் வாழ்க்கையில் தான் எவ்வளவு போராட்டம்.

மைல்ட் அட்டாக்…

தீவிர சிகிச்சைப் பிரிவில் மாற்றம்.

24 மணி நேரம் வெளியிலே இருந்தார்கள் வினயாவும், வைத்தியும்.

பாஸ்கரும் இங்கே வந்து இருந்தான்.

“நீங்க எதுக்கு இங்க இருக்கீங்க.. தம்பி…” “முதல் முறையே சகுனம் சரியில்லே..” “எங்க கவலை எங்களுக்கு.. நீங்க போய் உங்க குடும்பத்தை கவனிங்க…”

அவரிடம் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை..

அவன் வீட்டுக்கு போகும் போது பாஸ்கர் போனுக்கு ஒரு

ஃப்ளாஷ் மெஸ்ஸேஜ் வந்தது..

நான் உயிருடன் இருக்கிறேன்.

வினயாவை கை விடாதே!!!..

என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம்.”

 

இது போன்ற sms மிகவும் ரகசியமான தருணத்தில் செய்ய பயன்படும். ஆனால் இதனை சேவ் செய்து வைக்க முடியாது.

பாஸ்கரிடமிருந்து என புரிந்தது.

அவனை போனில் தொடர்பு கொள்ளப் பார்த்தால் ‘உபயோகத்தில் இல்லை’ என வந்தது ..

“சார்..பிரகாஷ் சார்…உயிருடன் தான் இருக்கிறார்.. எனக்கு செய்தி அனுப்பினார்.” தகவல் கூறினான் வைத்தியிடம்.

“இதை என்னை நம்ப சொல்றியா தம்பி..??

முதலில் அனு குணமாகட்டும்.”

“நீயும் என்னை நம்ப மாட்டாயா.???..”

என வினயாவைப் பார்க்க,

“எனக்கு தெரியும் நீ பொய் சொல்ல மாட்டாய் என…ஆனால் நான் எப்படி இதை இவர்களுக்கு புரிய வைப்பேன்?..தெரிந்த ஒரே ஆளும் இப்போ இல்ல…”என பார்வையால் கூறினாள்.

பாஸ்கர் மெல்ல அங்கிருந்து அகன்றான்.ஆனால் அவன் தன் இதயத்தை இங்கே தொலைத்து விட்டுதான் சென்றான்.

ஆனால் வினயா அதை எடுத்து பத்திரப் படுத்தி இருந்தாள்.

ஒரு வாரம் மருத்துவமனை யில் இருந்து இதயத்தில் ஏற்பட்ட சின்ன அடைப்புக்கு ‘ஆஞ்ஜியோ’ செய்து பிழைத்து வந்தாள் அனுஷா.

இப்போதெல்லாம் அதிக சந்தோஷம் , துக்கம் கொள்ளக் கூடாது என வீட்டில் வினயாவும் வைத்தியும் ஆதரவாக நடக்க ஆரம்பித்தார்கள்.

மெதுவாக உடல் தேற ஆரம்பித்தது. ஒரு மாதம் போனது.

பேச்சு வாக்கில்  ‘அந்த பையன் வீட்டில் போன் செய்தார்கள் ‘ என்றார்.

“யாரு..அன்னிக்கு வந்தவங்களா?, முத நாளே என் தம்பியை பலி கொடுத்தேன்..” “இன்னொரு முறை வந்தா…நானோ நீங்களோ…”

“அவளுக்கு என ஒருத்தன் பிறந்திருப்பான்.ரெண்டு வருஷம் போகட்டும்.” “நீ மேல படி வினயா.”

“அம்மா சொன்னா சரி, எந்த பையனையும் கல்யாணம் பண்ணிக்கறேன்நு மாமா” கூட சேர்ந்து நாடகமாடிய வினயாவுக்கும்

வேறு வழி தெரியவில்லை..

ஒரு மாதம் கழித்து பாஸ்கரிடம் போனில் தான் மேல  படிக்க சேர்ந்த தகவலை கூறிக் கொண்டிருக்கையில,



“யாருடி போன்ல..”

“என் ஃப்ரெண்ட் பாக்யாம்மா..”

“ஹலோ…வினு..வினு..கேக்கலியே..”

என சத்தமாக ஆண் குரல் கேட்க..

“யாருடி…பட்டென பிடுங்கினாள்”

போனின் திரையில் பாஸ் ..என்றிருந்தது..

“யாருப்பா?”

இவள் அம்மாவின் குரல் கேட்ட பாஸ்கர்,

“மாமி…நான் தான் பாஸ்கர்..”

“உங்க தம்பி உயிருடன் தான் இருக்கிறார்..எனக்கு செய்தி வந்தது..”

“ஏண்டா ராஸ்கல்..” ஒண்ணும் தெரியாத என் பொண்ணை ஏதாவது செய்யலாம்நு போன் பண்ணி பேசறயா.” “அவ அழகா பொறந்தது தப்பா?.. அதுக்காக இப்படி ஒரு பொய்யை சொல்லி அவளை உன் பக்கம் நகர்த்திருக்கியா??? போலீஸுக்கு தகவல் கிடையாது..

எங்களுக்கு தகவல் கிடையாது.. ஆனால் உனக்கு மட்டும் தகவல் அனுப்ப அவன் என்ன உனக்கு அண்ணனா..தம்பியா…??”

“சீ அலையாதீங்கடா. இன்னொரு முறை என் பொண்ணுக்கு போன் செய்து அவ மனசை கலைக்காதே..” “அவ குழந்தை….

வைடா போனை..”

கத்தி தீர்த்து விட்டாள்.

வைத்தியும் அப்போது தான் வெளியிலிருந்து வந்தார்.

வினயாவின் கண்ணில் கண்ணீரை பார்த்த அவர்..

கொஞ்ச நாள் போகட்டும்.

“நீ ஒரு வருடம் படி.அப்புறம் நானே வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்..” என்றார் அப்பா.

என் கண்ணெதிரே அவன் நம்பரை அழி..

அதுக்கு முன்னாடி.. “இனிமேல் போன் பேச வேண்டாம் ..

நீங்க யாரோ..

நான் யார் நு செய்தி அனுப்பு..” அம்மா சொன்ன படி..அனுப்பினாள்.

கூடவே..”என் வாழ்க்கையில் வர வேண்டாம்.வேறு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செஞ்சுக்கங்க..” என சேர்த்தாள்.

அம்மா கண் முன்னாள் எல்லா பதிவுகள், எண் அனைத்தையும் டிலீட் ஆல் போட்டு அழித்தாள்.

அவன் நினைவுகள் அடி மனதில் வைத்து மேல் படிப்பு என்ற பாறாங்கல் போட்டு மூடினாள்.



What’s your Reaction?
+1
9
+1
14
+1
0
+1
0
+1
1
+1
0
+1
3

Radha

Recent Posts

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

2 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

2 hours ago

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

4 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

4 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

4 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

4 hours ago