இந்த மாத குடும்ப நாவல்

” ராமனின் மோகனம் ”

சுதந்திர தின சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது தோழமைகளே .இப்போது உங்கள் ஊர் கடைகளில் கிடைக்கிறது .

 

 

திருக்குமரனின் முகம் தெளிந்தது. ” ட்ரெயினில் பாதுகாப்பு தேவை இல்லை தானேடா செல்லம் ? நீ வாகமன் போகவும் உனக்கான பாதுகாப்பு ஸ்டேஷனுக்கே வந்துவிடும் “

 

அது கூட தேவையில்லை என்றுதான் நிலானிக்கு தோன்றியது . அவள் செல்லப்போகும் கேரளா அருகில் உள்ள மலை வாசஸ்தலத்தில் அவளை தெரிந்தோர் அதாவது மந்திரியின் மகள் என அவளை தெரிந்தோர் யாரும் இருக்கப்போவது இல்லை. பின்னே எதற்கு பாதுகாப்பு ? அத்தோடு அந்த அம்பாசிடர் கார் காரனை கைது செய்து உள்ளே போட்டாயிற்று. அவனாலும் ஆபத்து இல்லை.

 

ஓடிய யோசனைகளின் பின்னே அன்றைய அவனது கொடூர முகம் நினைவில் வந்தது. அவளது கறுப்பு பூனை படைகள் தள்ளிக் கொண்டு போக முகம் சுருங்க அவளை பார்த்தபடி அவன் நகர்ந்த போது …நிலானியின் உடல் உள்ளூர உதறியது.ஷ்…ஷப்பா … என்ன பார்வை ? உடலை பொசுக்கி விடுவது போன்ற அந்தப் பார்வையின் தீட்சண்யத்தை இப்போதும் உணர்ந்தாள். தலையை உதறி அவனை தன் நினைவில் இருந்து தூக்கி எறிந்தாள்.

 

 


 

தான் வெளியேற முடியாததைக்காட்டிலும் அவன் மீது மோதி நின்றது அவளுக்கு அதிகமான குன்றலைக் கொடுத்தது .சட்டென பின்வாங்கி நின்று அவன் உடலுடன் மோதிய தன் உடலை தட்டி விட்டுக் கொண்டாள் வலுக்கட்டாயமாக ஒட்டிய சகதியை போல…

 



” அரிக்கிறதோ …? ” எகத்தாளமாக கேட்டான் .

 

” இல்லை .அருவெறுப்பாக இருக்கிறது.” அவன் முகம் இறுகியது .

 

” பட்டாலே அருவெறுப்பா…? தொட்டால் …கட்டிக்கொண்டால் …” பேசியபடி அவன் அவளை நெருங்கி வர , நிலானி மிரண்ட விழிகளுடன் பின்னடைந்தாள் .இனி பொறுக்க வேண்டாம் , கத்தி விட வேண்டியதுதான்….” ஆ” வென திறந்த அவளது வாய் சத்தம் வெளி வரும் முன் அவனது அகன்ற கரத்தால் அடைக்கப்பட்ட்டது .

 

மிக அழுத்தி தன் சுதந்திரம் பறித்த அவனது உள்ளங்கையை நறுக்கெனக் கடித்தன அவளது பற்கள். சட்டென கையை உதறியவன் பட் பட்டென அவள் வாயினில் அடித்தான். விரல்களால் உதடுகளை கொத்தாக பற்றி நசுக்கினான்.

” ஏய் இங்கே கவனி. இப்போது நீ கத்துவதாலோ வெளியே ஓடுவதாலோ எந்த பயனும் கிடையாது. நீ என்னோடு தான் வரும் சில நாட்களை கழிக்க போகிறாய். எனது இஷ்டப்படி நடந்து கொள்ளப் போகிறாய். இது உனக்கு விதிக்கப்பட்டது. இதனை உன்னால் மாற்ற முடியாது. அதனால் வீணாக அடம் பிடிப்பதை விட்டு விட்டு எனக்கு ஒத்துழைத்தால் இருவருக்குமே நல்லது ” அவனது பேச்சு அந்த ஏசி அறைக்குள்ளும் நிலானியின் தேகத்தை தொப்பல் தொப்பலாக நனைய வைத்தது .


அதோ அங்கே கற்களை அகற்றுகிறார்களே அவர்களிடம் உதவி கேட்டால் என்ன …என்ற நிலானியின் நப்பாசை அவன் அவர்கள் அருகே போய் சிரித்துப் பேசிக் கொண்டு தானும் அவர்களுக்கு வேலையில் உதவுவதை கண்டதும் மடிந்தது .இவன் இந்தப் பகுதியில் மிகவும் தெரிந்த ஆள் போலிருக்கிறதே… மலையேறும்போது செக்போஸ்டில் கூட இவனை நிறுத்தவில்லை. மேலே ஊரில் இவனுக்கு தெரிந்த இடத்தில் இவனிடம் இருந்து தப்பிக்க முடியுமா ?நிலானியின் மனது கவலையில் பாரமானது.

உடலுக்கு தெம்பு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவன் தூக்கி போட்ட பிஸ்கட்டுகளை வேகமாக காலி செய்தாள் .தண்ணீர் குடித்ததும் உடம்பு கொஞ்சம் பரவாயில்லை போன்றே தோன்றியது . சாலை சுத்தமாக்கப்பட மீண்டும் அவர்களது குலுக்கல் பயணம் தொடர்ந்தது .இப்போது கொஞ்சம் ஆறுதல் மலையில் குளிர் சேர்ந்திருந்தது .அத்தோடு ஒரு பக்கம் மலை ஒரு பக்கம் பள்ளத்தாக்கு என்றிருந்த நிலை மாறி இரு பக்கமும் மலைத்தொடர்கள் அணிவகுத்து உடன் வந்தன .கூடவே இயற்கையும் பசுமையாக வர மனது கொஞ்சம் லேசானது.

இடையில் ஒரு சிறிய ஊரை அவர்கள் கடந்தனர் . ” இதுதான் மேகமலை. அடுத்து நாம் போக போகும் இடம் ஹைவேவிஸ் “

அவன் சொல்ல அட்ரஸ் கொடுத்து தைரியமாக ஆளை கடத்துகிறானே …இவன் எப்பேர்ப்பட்ட கிரிமினலாக இருப்பான் நிலானியின் மனது கசந்து வழிந்தது.

——————

” இது எந்த இடம் ? “கிசுகிசுத்தாள்.அவள்  தலையில் கை வைத்து அழுத்தினான் ” பேசாதே “.
சிறிது நேரம் யோசனையோடு அங்கேயே பார்த்தபடி நின்றவன் , பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் போனை எடுத்து அந்த இடத்தை போட்டோக்கள் எடுக்கத் துவங்கினான். பிறகு அந்த போட்டோக்களை ராஜலட்சுமிக்கு அனுப்பினான் .கூடவே அந்த லொகேஷனை அவளுக்கு ஷேர் செய்து விட்டு அப்படியே சரிந்து அந்த மரத்தடியில் அமர்ந்தான். கையை மடக்கி சக் சக் என்று நிலத்தை குத்தத் தொடங்கினான்.
விரும்பாத ஒரு காரியத்தை செய்துவிட்டு தளர்ந்து அமர்ந்திருந்தான் போல் அப்போது அவன் தென்பட்டான் .கவலைப்படாதே என அவன் தலை வருடி ஆறுதல் அளிக்க விழைந்த தனது உள்ளத்தை நினைத்து திடுக்கிட்டாள் நிலானி.
மெல்ல அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவள்  ” என்ன விஷயம் ? ” மென்மையாக கேட்டாள்.
மறுப்பாய் தலையசைத்தான்.”  இதை நான் செய்யக்கூடாது .ஆனால் செய்து விட்டேன் .எனக்கு வேறு வழி தெரியவில்லை. இது என் மனதை காலம் முழுவதும் உறுத்திக் கொண்டே இருக்கும் ” வேதனை கலந்து ஒலித்த அவன் குரலில் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் நிலானி.



இயலாமையுடன் பூமியை குத்திக்கொண்டிருந்த அவனது கரத்தை ஆட்காட்டி  விரல் நீட்டி மெல்ல தொட்டாள் .” எல்லாம் சரியாகிவிடும் ” எதற்கு ஆறுதல் சொல்கிறோம் என்று தெரியாமலேயே சொன்னாள்.
அபி சட்டென்று அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான் .இருவரும் வேறு ஒன்றுமே பேசவில்லை .சிறிது கூட அசையவும் இல்லை .அப்படியே அமர்ந்து இருந்தனர். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை …சருகுகள் மேல் காலடிச் சத்தம் கேட்கவும்   இருவரும் பிரிந்து எழுந்தனர். வந்தது  ராஜலட்சுமி தான். இப்போது அவள் போலீஸ்  யூனிபார்மில் இருந்தாள். அவளுடன் நான்கு காவல்துறையினர் .அனைவரும் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

Recent Posts

மகாபாரதக் கதைகள்/ஆயிரம் துச்சாதனர்

குனி தளர்ந்த நடையோடும் எங்கோ வெறித்த பார்வையோடும் துரியோதனின் மாளிகையின் வெளி அறைக்கு வந்தார். துரியோதனனை சந்திக்க வரும் முக்கிய…

35 mins ago

காவல் தெய்வங்கள்/கோட்டை முனீஸ்வரர்

மைசூர் மகாராஜாவின் அரசாங்கப் பிரதிநிதி ஒருவன், கோயம்புத்தூர் பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி செய்து வந்தான். எதிரிகள் தேச எல்லைக்குள் வராமலும், அப்படி யாரேனும்…

36 mins ago

நாள் உங்கள் நாள் (02.05.24) வியாழக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 02.05.24 வியாழக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - சித்திரை 19 ஆம்…

37 mins ago

இன்றைய ராசி பலன் (02.05.24)

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள,…

39 mins ago

ஓ.. வசந்தராஜா..!-6

6 அன்று மாலை சைந்தவி வேலை முடிந்து வந்ததும் வசந்த் ராஜின் லேப்டாப்பில் இருந்து திருடிய தகவல்களை அஸ்வினி காட்ட…

12 hours ago

கோபி வாங்கிய பல்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரூமுக்கு வந்த…

12 hours ago