Categories: lifestyles

வடா பாவ் செய்து தினமும் ரூ. 40,000 வரை சம்பாதிக்கும் பெண்

நாம் பல நேரங்களில் சமூக வலைதளங்கள் மூலமாக, சிறிய முதலீட்டில் தொடங்கி பெரிய அளவில் வளர்ந்தவர்களின் கதைகளைப் பற்றி கேட்டிருப்போம். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது தள்ளுவண்டி கடையின் மூலம் வடா பாவ் விற்பனை செய்து தினமும் பல ஆயிரங்களை சம்பாதிக்கிறார். அவரின் சுவாரஸ்யக் கதையைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

டெல்லியைச் சேர்ந்த சந்திரிகா தீக்சித், அங்குள்ள ஒரு தெருவில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். அதில் சுவையான வடா பாவ் செய்து தினமும் ரூ. 40,000 வரை சம்பாதித்து வருகிறார். இவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சந்திரிகா பிக் பாஸ் OTT 3 நிகழ்ச்சியில் பங்கேற்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.



நன்றாக படித்திருக்கும் சந்திரிகாவுக்கு, ஒரு நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கோ சொந்தக்காலில் நின்று தாமாக ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் ஒரு தள்ளுவண்டி கடையை நடத்த முடிவு செய்திருக்கிறார். அந்த தொழில் அவருக்கு கை மேல் பலன் அளித்துள்ளது. அதன் விளைவாக நாளொன்றுக்கு தற்போது அதிக அளவிலான தொகையை சம்பாதித்து வருகிறார். அவர் விற்கும் வடா பாவ்-விற்கு டெல்லியைச் சேர்ந்த பலரும் ஃபேன் ஆகி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் நீண்ட வரிசையில் நின்று வடா பாவ் உணவை மக்கள் வாங்கி செல்கின்றனர். மிகவும் சுவையாக தயார் செய்து விற்கப்படுவதால், சந்திரிகாவுக்கு “வடா பாவ் கேர்ள்” என்ற பட்டத்தையும் மக்கள் வழங்கி உள்ளனர்.

தனது வளர்ச்சி குறித்து ஒரு ஊடக நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சந்திரிகா, விடா முயற்சி மற்றும் கடின உழைப்பு காரணமாக ஒரு நாளைக்கு ரூ. 40,000 வரை சம்பாதித்து வருகிறேன். உங்களாலும் இதே போல் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் பிற OTT தளங்களை தியாகம் செய்ய வேண்டும்.

இதே தள்ளுவண்டி கடையை 2 வருடங்களுக்கு முன்பு மிகவும் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தேன். அதன் பின்னர் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உழைக்கத் தொடங்கினேன். இதிலிருந்து தற்போது நல்ல லாபத்தை பெற்று வருகிறேன். அதனை வைத்து என் மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க செயல்பட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். சந்திரிகாவின் கதை பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. எடுக்கும் முயற்சி சிறியதாக இருந்தாலும், அதனை எவ்வாறு வழி நடத்திக் கொண்டு செல்கிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றி அமையும் என்பதை இவருடைய கதை எடுத்துக்காட்டுகிறது.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

தண்ணீரே இல்லாமல் காரை சுத்தம் செய்யும் நிறுவனம்!!

தண்ணீரே இல்லாமல் உங்களது காரை நாங்கள் சுத்தம் செய்து தருகிறோம் இப்படி யாரேனும் சொன்னால் இனி நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.…

1 hour ago

ஜெயிக்கப் போவது யார்? சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நீ தனது…

1 hour ago

’நேசிப்பாயா’ படத்தின் புரமோஷன் விழாவில் நயன்தாரா..எப்படி?

நடிகை நயன்தாராவை ஒரு திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்களிடம் முதலில் அவர் கூறும் நிபந்தனை எந்தவித புரமோஷனு க்கும் வர மாட்டேன்…

3 hours ago

மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும் ..? நெஞ்சு வலி தானா அல்லது என்ன வலி என்று எப்படி கண்டறிவது?

மாரடைப்பு என்பது பொதுவா க சுருக்சுருக்கென்று கூர்மையாக இருக்கும் வலி மட்டுமல்ல, மாறாக இது உடலில் பரவலான அசௌகரிய உணர்வையும்…

3 hours ago

ஜூலை மாத ராசி பலன்கள் (சிம்மம், கன்னி )

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில்…

3 hours ago

தயாரிப்பாளர் காலில் விழுந்த கேப்டன்.. ஏன்?பாவா லட்சுமணன் சொன்ன பிளாஷ்பேக்

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு…

3 hours ago