24

 

 

 

 

“என் ஹஸ்பென்ட், சாரோட கம்பெனியில் மேனேஜர்.. நான் ஒரு யோகா டீச்சர்.. யோகா சென்டர் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன்.. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் எட்டு, ஐந்து படிக்கிறார்கள்..” தன் குடும்ப விபரங்களை பகிர்ந்து கொண்ட அகல்யா இவர்களை பற்றிய விபரங்களை துருவாதது இருவருக்கும் பெரிய நிம்மதியாக இருந்தது..

வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களில் இருந்து சமையல் சாமான்கள் வரை திவாகரன் அனைத்தும் வாங்கி கொடுத்து வீட்டை செட் செய்து தந்துவிட, வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தனர்..




ஒரு வாரத்தில் அம்மாவும், மகளும் குட்டி பையனுமாக தங்களுக்குள் ஒரு புது உலகை படைத்துக் கொண்டு வாழ பழகிக் கொண்டனர்.. அடிக்கடி மனமுடைந்து போய் இருப்பவள் சஸாக்கி மட்டுமே..
எந்நேரமும் சன்னல் வழியே வானத்தை வெறித்தபடி இருந்தவளை அகல்யா கவனித்துக் கொண்டே இருந்தாள்..

“அக்கா சாம்பார் பொடிக்கு வெளியே மசாலா காய வைத்திருந்தேன்.. மழை வந்துவிட்டது.. உள்ளே எடுத்து வைத்து விட்டேன்.. சாம்பார் பொடி அரைக்கவில்லை.. இன்னும் ஒரு மணி நேரத்தில் என் ஹஸ்பென்ட் வந்து விடுவார்கள்.. குழம்பு இல்லைன்னா மனுசர் கத்தி தீர்ப்பார்.. அதனால்..”

“உனக்கு இப்போது சாம்பார் பொடி வேண்டும்.. அப்படித்தானே..” அன்னம் புன்னகையுடன் கேட்க.. வேகமாக தலையசைத்தாள் அகல்யா..

“இரண்டே இரண்டு ஸ்பூன் சாம்பார்பொடிக்கா..” என அவள் நீட்டும் டப்பா பத்து நாட்களுக்கு அவள் வீட்டு குழம்பு தேவைகளை பூர்த்தி செய்யுமளவு கொள்ளளவு கொண்டிருக்கும்..

“ஏய் அந்த ஆன்ட்டி சும்மாதான் இருக்காங்க.. அவுங்ககிட்ட போயி ஹோம்ஒர்க் பண்ணுங்க..” அவள் குழந்தைகளை சஸாக்கியிடம் அனுப்பி விட்டு டிவியில் சீரியல் பார்த்தாள்..

“மம்மா.. இந்த அக்கா அவுங்க வேலையில் பாதியை நம்ம தலையில் கட்டுறாங்க..” சஸாக்கி சொல்ல அன்னம் புன்னகைத்தாள்..




“போகட்டும் விடும்மா.. நமக்கு பக்க துணையாக அவள் மட்டும்தான் இருக்கிறாள்..”
அன்று மாலை சஸாக்கி வீட்டிற்கு ஹோம்ஒர்க் எழுத போன பிள்ளைகள் சுவர் பந்தாய் திரும்பி வந்தனர்..

“சஸி ஆன்ட்டிக்கு தலைவலியாம் படுத்திருக் காங்க..” அம்மாவின் கையிலிருந்து ரிமோட்டை பிடுங்கி கார்ட்டூன் சானலுக்கு மாற்றியவர்களை தலையில் கொட்டி டிவியை ஆப் செய்தாள்..

“ஹோம்ஒர்க் பண்ணுங்க இப்போ வர்றேன்..” பக்கத்து வீட்டிற்குள் நுழைந்தாள்..

“அக்கா சஸிக்கு உடம்புக்கு என்ன.?”

“அடிக்கடி தலைவலின்னு படுத்துக்கிறாள்மா.. நாளை ஹாஸ்பிடல் போகனும்..”

“இதற்கு எதற்காகக்கா ஹாஸ்பிடல்..? நாளை என் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்.. நான் சில யோகாசனங்கள் சொல்லி தருகிறேன்.. சரியாகி விடும்..”

“சரிம்மா..”

“அக்கா இன்றைக்கு காலையில் மார்க்கெட் போகும் போது மறந்துட்டேன்.. இப்போதான் நினைவு வருது.. நைட் தோசைக்கு சட்னி அரைக்க வேண்டும் இரண்டு தேங்காய் சில்லு..”
அன்னம் பதில் பேசாமல் உள்ளே போய் எடுத்து வந்து கொடுத்தாள்.. மறுநாள் அதிகாலை ஏழு மணிக்கு ஒலித்த காலிங்பெல்லுக்கு கதவை திறந்த அன்னம் திகைத்தாள்.. திவாகர் நின்றிருந்தான்..

“நான் அனுப்பிய மளிகை சாமான்களெல்லாம் சரியாக வந்து சேர்ந்ததா..?” கேட்டபடி உள்ளே வந்தான்..

“வந்தது தம்பி.. சார்..” அன்னத்தின் தடுமாற்றத்தை கண்டு கொள்ளாமல் வீட்டினுள் நுழைந்து ஒவ்வொரு அறையாக வந்தான்..

படுக்கையறையில் படுத்திருந்த சஸாக்கியை பார்த்து “என்ன..?” என்றான்..

“தலைவலி..”

“ம்.. ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்தால் எல்லா வலியும் வரும்..”
அன்னம் அதிர்வோடு அவனை பார்த்தாள்..

“எப்போது வேலைக்கு வர போகிறார்கள்..?”

“எ.. என்ன வேலை தம்பி..?”




“என் கம்பெனியில் கிளார்க் வேலை.. ஒரு வேலையும் செய்யாமல் சும்மா படுத்து தூங்குவதற்காகவா இத்தனை பெரிய வீட்டையும் கொடுத்து சமைத்து சாப்பிட சாமான்களும் கொடுக்கிறேன்..?”

“தம்பி..” அன்னத்தின் கண்கள் கலங்கிவிட்டன..

“அ..அவள் வேண்டாம் தம்பி.. அவள் உடம்பு தாங்காது நா.. நான் வருகிறேன்.. எனக்கு வேலை கொடுங்கள்..”

“பென்சன் வாங்க வேண்டிய வயதில்.. வேலைக்கு ஆசையா..? உங்கள் மகள்தான் வரவேண்டும்..”

“அவள் சின்னக் குழந்தை வைத்திருக்கிறாள் தம்பி.. அது இன்னமும் பால்குடி மறக்காத பிள்ளை.. அந்த குழந்தைக்கு அவள் பாலூட்ட வேண்டும்..”

“குழந்தை வைத்திருக்கும் பெண்களெல்லாம் என்ன செய்கிறார்கள்..? அப்படியே இந்த மேடமும் செய்யட்டும்.. அடுத்த வாரத்திலிருந்து வேலைக்கு வரவேண்டும்..” சொல்லி விட்டு எழுந்து வெளியேறினான்..

“எப்படியோ தாயையும், பிள்ளைளையும் பிரிக்க வேண்டும்.. அப்படித்தானே தம்பி..?” நின்று கேட்டவளுக்கு அலட்சிய சிரிப்பை கொடுத்து விட்டு வெளியேறினான்..

“உங்கள் கம்பெனி முதலாளி காலையிலேயே வந்துவிட்டார்.. அவர்களை ஏதோ மிரட்டிக் கொண்டு இருக்கிறார்..” பக்கத்து சன்னல் வழியே பார்த்து கணவனிடம் குசுகுசுத்துக் கொண்டிருந்த அகல்யா வாசலில் காலிங்பெல் ஒலிக்கவும் வாசலுக்கு ஓடினாள்..

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..?” கேட்டபடி உள்ளே வந்தான் திவாகரன்..

“நீங்க சொன்னதை கரெக்டாக செய்து கொண்டிருக்கிறோம் சார்..”

“பக்கத்து வீட்டை நான் இல்லாத நேரம்தான் கண்காணிக்க சொன்னேன்.. என்னையும் சேர்த்து கண்காணிக்க சொல்லவில்லை..”

“ஐயோ உங்களை போய் பார்ப்போமா சார்..? நாங்கள் சும்மா பேசிக் கொண்டிருந்தோம்..?” வேகமாக வந்த அகல்யாவை முறைத்தான்..

“நான் உங்களுக்கு கொடுத்த வேலை என்னாச்சு..?”

“பார்த்துட்டே இருக்கிறேன் சார்.. நாளை எங்கள் வீட்டிற்கு வரச்சொல்லியிருக்கிறேன்.. யோகாசனங்கள் சொல்லி தருவதாக சொல்லியிருக்கிறேன்..”

“நான் கொடுத்த மருந்துகளையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள் தானே..? டோசேஜ் குறித்து வைத்திருக்கிறீர்களா..?”

“தெளிவாக எழுதியே வைத்திருக்கிறேன் சார்.. கரெக்டாக அதுபடி கொடுத்து விடுவேன்..”

“ம்.. ஜாக்கிரதை அந்த பொண்ணு மனதில் பழைய ஞாபகங்களே வரக்கூடாது.. நன்றாக தெளிவாக இருக்க வேண்டும் உங்கள் வேலை..”

“அதெல்லாம் சரியாக பார்ப்போம் சார்..”
இருவர் கையிலும் ஒரு நூறு ரூபாய் கட்டை வைத்து விட்டு திரும்பவும் ஜாக்கிரதை சொல்லி விட்டு திவாகர் கிளம்பினான்..




What’s your Reaction?
+1
10
+1
12
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Radha

Recent Posts

கருங்காலி மாலை பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்

தொழிலில் வெற்றியை தந்து, அனைத்து கனவுகளையும் நனவாக்கும் தன்மை கருங்காலி மாலைக்கு உண்டு. செவ்வாய் கிரகத்தின் அம்சம் கொண்டது என்பதால்…

56 mins ago

மகாபாரதக் கதைகள்/பாலினம் மாறுபாடு குறித்த சில சுவாரஸ்ய கதைகள்!!!

பலருக்கும் தெரியாத புராணத்தில் உள்ள பாலினம் மாறுபாடு குறித்த சில சுவாரஸ்ய கதைகள்!!!பாலியல் வன்கொடுமைக்காக இந்தியா அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது;…

57 mins ago

மாவட்ட கோவிகள்:உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்– பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள…

1 hour ago

நாள் உங்கள் நாள் (07.07.24) ஞாயிற்றுக்கிழமை

கௌரி பிக் பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 07.07.24 ஞாயிற்றுக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 23 …

1 hour ago

இன்றைய ராசி பலன் (07.07.24)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை…

1 hour ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-16 (நிறைவு)

16 ‘‘அட.. ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? வாருங்கள் சகோதரி..” பிரெட்ரிக்கின் ‘சிஸ்டர்’ மைக் வழியாக அந்த அரங்கம் முழுவதும் அதிர்ந்தது.…

12 hours ago