Categories: lifestyles

சச்சின் டெண்டுல்கரின் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா?

கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுகல்கரின் அபார திறமை உலகறிந்ததே. ஆனால், சச்சின் டெண்டுல்கர் தன்னை ஒரு தொழில்முனைவராகவும் ஸ்திரமாக நிறுவிக் கொண்டிருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், சச்சின் பல்வேறு துறைகள் சார்ந்த சிறு சிறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மீது முதலீடுகள் செய்துள்ளார். அவ்வாறாக சச்சின் முதலீடு செய்துள்ள சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றிய தொகுப்பு, அவர் ஆடுகளத்தில் மட்டுமல்ல… தொழில் முதலீடுகளிலும் கொண்டுள்ள உத்திகளை, திறமைகளை பறைசாற்றும்.



ஸ்பின்னி (Spinny): பயன்படுத்தப்பட்ட கார்களை மறுவடிவமைத்து விற்பனை செய்யும் நிறுவனம். 2015-ல் நீரஜ் சிங், மோஹித் குப்தா, ராமன்சு மஹார் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். இதில் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கலாம், வாங்கலாம். இந்த நிறுவனத்தில் 2021-ம் ஆண்டுதான் சச்சின் டெண்டுல்கர் முதலீடு செய்தார். கூடவே, அதன் பிராண்ட் அம்பாஸிடராகவும் ஆனார். இதனால் அந்த நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையும் அதிகரித்தது. ஸ்பின்னியுடனான சச்சினின் கூட்டணி அந்நிறுவனத்துக்கு நேர்மை மற்றும் நீடித்த செயல்திறனுக்கான அடையாளமாக மாறியது.



ஸ்மார்ட்ரான் (Smartron): மகேஷ் லிங்காரெட்டி, நார்ஸி ரெட்டி போஷன், ரோஹித் ரதி ஆகியோர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் ‘ஸ்மார்ட்ரான்’. 2014-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனப்படும் IoT தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் வேலை. இந்நிறுவனத்தில் டெண்டுல்கர் 2016-ஆம் ஆண்டு தன்னை பிராண்ட் பிரதிநிதியாக இணைத்துக் கொண்டார். ஸ்மார்ட்ரான் உபகரணங்கள் மீதான நம்பகத்தன்மை மற்றும் புத்தாக்க திறமைகளுக்கு சச்சினின் முதலீடு பெரும் பங்களிப்பு செய்கிறது.

ஸ்மாஷ் என்டர்டெய்ன்மென்ட் (Smaaash Entertainment): 2009-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் நம் ஓய்வு நேரங்களை அர்த்தமுள்ளதாக்கும் நோக்கும் உருவாக்கப்பட்டதாகும். ஸ்ரீபால் மொராகியா இதனை உருவாக்கினார். இங்கு கிரிக்கெட், கால்பந்து, ரேசிங் எனப் பல்வேறு விளையாட்டுகளில் தொழில்நுட்பத்தைப் புகுத்தை புதிய அனுபவத்தை வழங்குகின்றனர். 2019 கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறிய பின்னடைவை இந்நிறுவனம் சந்தித்தாலும் கூட சச்சின் டெண்டுல்கரின் பிராண்ட் அடையாளம் இந்நிறுவனம் மீண்டு வர உதவி செய்தது என்றால் அது மிகையாகாது.

ஜெட்சின்தஸிஸ் (JetSynthesys): இது ஒரு கேமிங் மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனம். 2014-ஆம் ஆண்டு ராஜன் நவானி இதனைத் தோற்றுவித்தார். இது கிரிக்கெட் ஆர்வலர்களுக்கான சேவைகளை, பொருட்களை வழங்குகிறது. இதில் 2021-ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 2 மில்லியன் டாலர் முதலீடு செய்தார். 100MB போன்ற சில திட்டங்கள் மூலம் இந்நிறுவனம் தனது டிஜிட்டல் தடத்தை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மீது பாய்ச்சியது.



இன்டர்நேஷனல் டென்னிஸ் (International Tennis Premier League – ITPL): இதனை 2014-ஆம் ஆண்டு டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதி தொடங்கினார். இதில் டெண்டுல்கரின் முதலீடு டென்னிஸ் விளையாட்டின் மீதான அவரது ஈடுபாட்டை பறைசாற்றியது. ஐடிபிஎல் நிதி நெருக்கடிகளை சந்தித்தபோது அதில் சச்சின் காட்டிய ஈடுபாடு பல்வேறு விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதில் அவருடைய அக்கறையை வெளிப்படுத்தியது.

எஸ் டிரைவ் அண்ட் சச் (S Drive and Sach: Health and Fitness Retail): உடல்நலன் மற்றும் ஃபிட்நஸ் ரீட்டெய்ல் நிறுவனம், ஃப்யூச்சர் க்ரூப் மற்றும் மனிபால் குரூப் இணைந்து கூட்டு முயற்சியில் இதனை தோற்றுவித்தது. எஸ் டிரைவ் மற்றும் சச் நிறுவனம் ஃபிட்நஸ், ஹெல்த் கேர், விளையாட்டு உபகரணங்களை வாடிக்கையாளர்களிடம் சேர்க்கிறது. பிக் பஜார் மூலம் எஸ் டிரைவ் அண்ட் சச் பொருட்கள் சில்லறை வணிகச் சந்தையில் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இந்நிறுவனம் முன்னிலைப்படுத்துகிறது.

முஸாஃபிர் (Musafir): 2007-ல் தொடங்கப்பட்ட பயண ஏஜென்சி நிறுவனம். ஷேக் முகமது அல் தானி, சச்சின் கடோயா, ஆல்பர்ட் டயாஸ் முஃபாஸி இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கினர். யுஏஇ-யை மையமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் 2017 முதல் டெண்டுல்கர் பிராண்ட் அம்பாஸிடராக இருக்கிறார்.

சச்சினின் ஆழ்ந்த பயண அனுபவங்கள் முஃபாஸிர் நிறுவனத்தை ஒரு முன்னணி பயண சேவை வழங்குநராக உருவெடுக்க உதவியது. இவ்வாறாக ஃபிட்நஸ், பயணம், கேமிங், ஐஓடி என பலதுறைகளிலும் சச்சின் டெண்டுல்கர் செய்துள்ள முதலீடு அந்நிறுவனங்களுக்கு பிராண்ட் மதிப்பினையும், அவற்றின் மீதான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. சந்தையில் மற்ற நிறுவனங்களுடன் ஆரோக்கியமான போட்டி மேற்கொள்ளவும் உதவுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோவிலில் பிரசாதமாக தரும் பூ, மாலைகளை என்ன செய்யலாம் ?

நாம் கோவிலுக்கு செல்லும் போது பூ, பழம், தேங்காய், மாலை போன்ற பல பொருட்களை பிரசாதமாக நமக்கு தருவார்கள். பக்தர்கள்…

3 hours ago

மகாபாரதக் கதைகள்/கர்ணனின் ஜென்ம இரகசியம்

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ?மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம்…

3 hours ago

மாவட்ட கோவில்கள்:பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்,

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலைத் தாங்கும் ஆதிசேஷன், சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன், அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி…

3 hours ago

நாள் உங்கள் நாள் (08.07.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 08.07.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 24 ஆம்…

3 hours ago

இன்றைய ராசி பலன் (08.07.24)

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள,…

3 hours ago

ஈஸ்வரிக்கு எதிராக மாறிய கோபி ராதிகா..பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அழகு போல பொண்டாட்டி இருந்தாலும் கூத்தடிக்க வேற ஒரு பொண்டாட்டி தேவை என்று ஒரு…

14 hours ago