Categories: Samayalarai

உருளைக்கிழங்கை வைத்து 10 நிமிடத்தில் செய்யலாம் போஹா நக்கெட்ஸ்

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது இயல்பு தான். குழந்தைகள் அவற்றை சாப்பிட ஆர்வமாக இருக்கும் அதே நேரத்தில் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என் எதிர்பார்க்கின்றனர்.

அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 15 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.



அவல், உருளைக்கிழங்கு இருந்தாலே போதும். குழந்தைகளுக்கு பிடித்த சுவையான அதே நேரம் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்துவிடலாம். அதை எப்படி செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை, என்னென்ன வாங்க வேண்டும் என்று எல்லாம் யோசிக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் செய்யப் போகிறோம். சரி போஹா நக்கெட்ஸ் செய்யும் முறைகளை சொல்கிறோம்.

போஹா நக்கெட்ஸ் செய்யத்  தேவையான பொருட்கள்

1 கப் போஹா / அவல்
3 உருளைக்கிழங்கு வேகவைத்தது
3 டீஸ்பூன் கடலை மாவு
1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
1 தேக்கரண்டி பூண்டு, பொடியாக வெட்டப்பட்டது
1 டீஸ்பூன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
2 டீஸ்பூன் கொத்தமல்லி
1 தேக்கரண்டி ஆர்கனோ(விருப்பம் இருந்தால்)
உப்பு சுவைக்க
1 டீஸ்பூன் சீரக தூள்
பொரிப்பதற்கு எண்ணெய்
1/2 கப் பிரெட் க்ரம்ஸ்



போஹா நக்கெட்ஸ்  செய்முறை:

முதலில், அவலைக் கழுவி, சில நொடிகள் ஊறவைத்து, சல்லடையில் வடிகட்டி தனியே வைக்கவும். மறுபுறம் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை மசிக்கவும். அதில் அவல், கடலை மாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஆர்கனோ, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பச்சை கொத்தமல்லி சேர்க்கவும்.

அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலந்து நக்கெட்ஸ்  வடிவத்தில் திரட்டிக்கொள்ளுங்கள். அதை பிரெட் க்ரம்களில் புரட்டி எடுத்து  தனியே வைக்கவும். இப்போது எண்ணெயை சூடாக்கி, அதில் அனைத்து நக்கெட்களையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

சூடான போஹா நக்கெட்களை கெட்ச்அப் அல்லது புதினா  சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையுடன் செய்யலாம். இதை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. வேலையும் குறைவு. இன்றே செய்து பாருங்கள்



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

முத்துவுக்கு உதவும் பாட்டி ..சிறகடிக்கும் ஆசை சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பாட்டிக்கு பிடித்த கிப்டை யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பாட்டி ஒரு சிறந்த…

2 hours ago

தக்காளி விளைச்சலில் கோடிகளை அள்ளும் தெலங்கானா வியாபாரி! அவரின் சாதனை ரகசியம் என்ன?

தெலங்கானா மாநிலம் முகமது நகரை சேர்ந்தவர் பான்ஸ்வாடா மகிபால் ரெட்டி ஒரு தக்காளி விவசாயி. கடந்த ஆண்டு அவர் பல…

2 hours ago

ஏஐ மூலம் திரைப்படங்களில் விஜயகாந்த்.. திடீரென பிரேமலதாவின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ டெக்னாலஜி மூலம் மறைந்த திரையுலக பிரபலங்களை திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. மறைந்த பாடகர்கள் ஷாகுல் ஹமீது மற்றும்…

4 hours ago

உங்கள் ஆதார் கார்டு தொலைஞ்சு போச்சா? திரும்ப பெற ஈசியான 2 வழிகள்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் அட்டை, ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.…

4 hours ago

காலில் உள்ள கருமை நீங்க இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்..!

கோடை காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது.. ஆனாலும் வேலைக்காரணமாக நாம் வெளியில் செல்லும்போது வெயிலில்தான் செல்ல வேண்டியுள்ளது.. அதனால் சருமத்தில்…

5 hours ago

எதிர்நீச்சல் சீரியல் முடிய காரணமே இதுதான்.. இயக்குனர் கொடுத்த விளக்கம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து அந்த…

5 hours ago