Categories: CinemaEntertainment

இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சித்தார்த் கலகல பேச்சு.!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன் 2” படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது ஜூலை 12ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று (ஜூன் 25ஆம் தேதி) மாலை வெளியாக உள்ளது.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.



இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஜெகன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழா மேடையில் பேசிய, “இயக்குனர் ஷங்கர் சார் 21 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தற்போது 21 வருஷத்துக்கு அப்புறமும் என்னை நம்பி, கமல் உடன் இந்தியன்2 படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார். அவருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்தியன் என்னுடைய பேவரைட் படம். எனக்கு கமல்ஹாசன் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. நான் ஷங்கர் சார் தயாரிப்பு, கமல் சாரின் மாணவன். இன்றைய காலகட்டத்திற்கு இப்படம் முக்கியமானது. “குறிச்சி வச்சிக்கோங்க, தாத்தா வராரு கதறவிட போறாரு. இப்படம் நிச்சயம் வரலாறு படைக்கும்”என கலகல வென பேசிருக்கிறார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வர வேண்டுமா? அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க!

பொதுவாகவே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நமது முன்னோர்கள் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளிலும் எதைச் செய்ய வேண்டும், எதைச்…

2 hours ago

மகாபாரதக் கதை/மன்னரின் உதவி

பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருதரப்பிலும் பல்லாயிரம் உயிர் துறக்கின்றனர். காயம் பட்ட பலர், தாகத்தால் துடிக்கின்றனர். மற்றும்…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில்

மூலவர்: – மலையாள பகவதி பழமை: – 500 வருடங்களுக்கு முன் ஊர்: – கணக்கன்பாளையம நூறு ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநிலத்தில் விளையும்…

2 hours ago

நாள் உங்கள் நாள் (03.07.24)புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 03.07.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 19 ஆம்…

2 hours ago

இன்றைய ராசிபலன் (03.07.24)

இன்றைய ராசிபலன் ஜூலை 3, 2024, குரோதி வருடம் ஆனி 19, புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-12

12 அழைத்தவன் ப்ரெட்ரிக். ஐபோன் கம்பெனியின் அமெரிக்க குழுமத்தில் ஒருவன். எப்பொழுதும் மிகவும் சீரியஸான முகத்துடன் வேலையைப் பற்றி மட்டுமே…

13 hours ago