Categories: lifestylesNews

BLOOD க்ரூப்பில் பற்றி அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ…!

எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதில் அரிதிலும் அரிதான ஒரு அம்சம் இருக்கும். அப்படி நம் உடலில் ஓடும் ரத்தம் தொடர்பாகவும் ஒரு அரிதான அம்சம் உள்ளது… ரத்தத்தில் அப்படி என்ன அரிதானது? பார்க்கலாம்…

மனித உடல் இயக்கத்துக்காக, உடல் முழுவதும் பாய்ந்து பரவும் உயிர் ஆதாரம் இது. A குரூப், B குரூப், O குரூப், AB குரூப் என்றும், இதில் பாஸிட்டிவ் – நெகட்டிவ் என்றும், ரத்தத்தின் வகைகள் பெரும்பாலும் அறியப்படுகிறது. இவற்றையெல்லாம் கடந்து இன்னொரு குரூப் ரத்தமும் இருக்கிறது. இதைப் பற்றி பெரும்பாலும் வெளியே அறியப்படவில்லை.



BOMBAY BLOOD GROUP

இந்த ரத்த வகையின் பெயர், ‘BOMBAY BLOOD GROUP’. மருத்துவ உலகில் இந்த வகையை, ‘H’ குரூப் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த பாம்பே ப்ளட் குரூப், முதல்முறையாக கண்டறியப்பட்டது, இப்போது மும்பை என்று அழைக்கப்படும் பம்பாயில். இதன் காரணமாகவே ‘பாம்பே ப்ளட் குரூப்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

1952 ஆம் ஆண்டில் டாக்டர் பெண்டே என்பவர்தான், கண்டறிந்துள்ளார். இந்த வகை ரத்தம், இந்தியாவில் 60 ஆயிரம் பேரில் ஒருவருக்குதான் இருப்பதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள். தமிழ்நாட்டில் இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் எண்ணிக்கை, 200க்கும் கீழேதான் இருக்கிறதாம். அந்த அளவுக்கு அரிதானது. பாம்பே ப்ளட் குரூப்பைச் சேர்ந்தவர்கள்தான் “UNIVERSAL DONOR”.



சிறப்பு என்ன?

இந்த குரூப் ரத்தம் இருப்போர், எல்லா வகை ரத்தம் கொண்டோருக்கும் ரத்த தானம் செய்யலாம். ஆனால் பாம்பே ப்ளட் குரூப்பினருக்கு அதே குரூப் ரத்தம்தான் சேரும். இந்தியாவில் பாம்பே ப்ளட் குரூப் அரிதாக இருப்பதால், அதே குரூப்பினருக்கு மட்டுமே ரத்த தானம் செய்யும் நிலை உள்ளது.

பாம்பே ப்ளட் குரூப்பின் சிறப்பும் இதுதான்… பிரச்னையும் இதுதான். பாம்பே ப்ளட் குரூப்பைச் சேர்ந்த ஆணும் பெண்ணும், மணம் முடித்துக் கொண்டால், பிறக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். தம்பதியில் ஒருவர் வேறு குரூப்பைச் சேர்ந்தவராக இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு சோகை நோய் வர வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சச்சின் டெண்டுல்கரின் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா?

கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுகல்கரின் அபார திறமை உலகறிந்ததே. ஆனால், சச்சின் டெண்டுல்கர் தன்னை ஒரு தொழில்முனைவராகவும் ஸ்திரமாக நிறுவிக்…

11 mins ago

உண்மையை உளறிய விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி…

14 mins ago

ஒரு இட்லி, சாப்பிட்டால் சாகா வரமாம் ..அப்படி என்ன இட்லி?சென்னையில் வைரலாகும் புதிய வகை இட்லி

சூடா, புசு புசு என்று நாலு இட்லி, சட்னி மற்றும் சாம்பார் ஒவ்வொரு வீட்டிலும் காலையில் இடம்பெறும் தரமான டிபன்…

3 hours ago

30 வயதைத் தாண்டிய பெண்கள் மாரடைப்பைத் தவிர்க்க செய்ய வேண்டியவை!

பெண்கள் இதய நோய்க்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் 30 வயதுக்குப் பிறகு அதிகரிக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பெண்கள் உடல் மற்றும் ஹார்மோன்…

3 hours ago

ஜூலை மாத பலன்கள் (தனுசு, மகரம்)

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில்…

3 hours ago

எஸ் கே 24 படத்திற்கு ஹீரோயினும், டைட்டிலும் தயார் !.. ஹீரோயின் யார்?

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தெள்ளத் தெளிவாக செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே இமான் மேட்டரில் அவர் பெயர் டேமேஜ்…

3 hours ago