Categories: lifestylesNews

1000 ஆண்டுகளுக்கு முன்பே ஆச்சரியப்படுத்திய சோழனின் கண்டுபிடிப்பு

இப்போது எல்லாம் ஸ்மார்ட் வாட்ச் வரைக்கும் வந்துவிட்டது. ஆனால் அந்த காலத்தில் கடிகாரம் எல்லாம் கிடையாது. பிறகு எப்படி அப்போதைய மக்கள் நேரத்தை கணக்கிட்டு இருப்பார்கள்.

அதெல்லாம் சூரியனை வைத்து தான். இப்போது கூட கிராமத்தில் தாத்தா பாட்டி சூரியனை பார்த்து உச்சிப் பொழுது வந்துவிட்டது. பொழுது சாயப்போகுது என சொல்வார்கள். அதுதான் அவர்களுடைய கடிகாரம்.

சூரியனை வைத்து அவர்கள் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டதும் ஆச்சரியம் தான். இதைவிட மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் 750 ஆண்டுகளுக்கு முன்பு சோழன் கண்டுபிடித்த சூரிய கடிகாரம்.

விக்ரமச்சோழன் கண்டுபிடித்த இந்த சூரிய கடிகாரம் இன்றும் கூட கர்வத்தோடு நின்று துல்லியமாக நேரத்தை காட்டுகிறது. அது மட்டும் இன்றி உலகிலேயே மிகவும் பழமையான சூரிய கடிகாரமும் இதுதான்.



சோழனின் விஞ்ஞான அறிவு

கோவில்களின் நகரமான கும்பகோணம் அருகே இருக்கும் திருவிசநல்லூரில் தான் இந்த பழமையான சூரிய கடிகாரம் உள்ளது. அங்கே இருக்கும் சிவன் கோவிலில் விக்ரமச்சோழனின் திருச்சுற்று மாளிகை உள்ளது.

30 அடி உயரம் கொண்ட இந்த சுவரில் தான் சோழர்களின் சூரிய கடிகாரம் உள்ளது. இது எப்படி இருக்கும் என்றால் சுவற்றின் நடுவில் பெரிய இரும்பு கம்பி ஒன்று நடப்பட்டிருக்கும். அதை சுற்றி அரைவட்ட வடிவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

சூரியனின் ஒளி அந்த கம்பியின் மீது படும்போது நிழல் எந்த எண்ணில் இருக்கிறதோ அதுதான் அப்போதைய நேரம். அதில் இருந்த பழங்கால எழுத்துக்கள் இப்போதைய மக்களுக்கு புரியும் படி இன்றைய தமிழில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல நூறு ஆண்டுகள் கழிந்தாலும் இந்த சூரிய கடிகாரம் கும்பகோணத்தின் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் அது துல்லியமாக மணி காட்டுவது சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வர வேண்டுமா? அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க!

பொதுவாகவே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நமது முன்னோர்கள் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளிலும் எதைச் செய்ய வேண்டும், எதைச்…

2 hours ago

மகாபாரதக் கதை/மன்னரின் உதவி

பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருதரப்பிலும் பல்லாயிரம் உயிர் துறக்கின்றனர். காயம் பட்ட பலர், தாகத்தால் துடிக்கின்றனர். மற்றும்…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில்

மூலவர்: – மலையாள பகவதி பழமை: – 500 வருடங்களுக்கு முன் ஊர்: – கணக்கன்பாளையம நூறு ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநிலத்தில் விளையும்…

2 hours ago

நாள் உங்கள் நாள் (03.07.24)புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 03.07.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 19 ஆம்…

3 hours ago

இன்றைய ராசிபலன் (03.07.24)

இன்றைய ராசிபலன் ஜூலை 3, 2024, குரோதி வருடம் ஆனி 19, புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார்.…

3 hours ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-12

12 அழைத்தவன் ப்ரெட்ரிக். ஐபோன் கம்பெனியின் அமெரிக்க குழுமத்தில் ஒருவன். எப்பொழுதும் மிகவும் சீரியஸான முகத்துடன் வேலையைப் பற்றி மட்டுமே…

14 hours ago