Categories: Beauty Tips

ஸ்கின் டைட்னிங் ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி.?

முட்டை மாஸ்க் உபயோகிப்பது சருமத்தின் தளர்வை குறைத்து இறுக்கமாக வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும். முட்டைகள் ஒரு அதிசய உணவு என்று கூறப்படுகிறது, அவை உடலுக்கு மட்டும் நல்லது அல்ல சருமம் மற்றும் கூந்தலுக்கும் நல்லது.

முட்டைகள் இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் அதிக எண்ணிக்கையிலான சுகாதார நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக முட்டையின் வெள்ளை கரு நம் அழகை மேம்படுத்த மிகவும் உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் ப்ரோடீன், ஜிங்க், ஒமேகா ஆகிய 3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்திருக்கிறது. இது கூந்தலுக்கும், முகத்துக்கும் பல நன்மைகளை அளிக்கிறது. முக்கியமாக சருமத்தின் தளர்வை குறைத்து இறுக்கமாக வைத்திருக்கிறது.



சருமத்தின் தளர்வை குறைத்து இறுக்கமாக்கும் எக் மாஸ்க் :

தேவையான பொருட்கள்:

1 முட்டையின் வெள்ளைக்கரு
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு (எண்ணெய் சருமத்திற்கு)
1 தேக்கரண்டி தேன் (கூடுதல் ஈரப்பதத்திற்கு)

வழிமுறைகள்:

முட்டையின் வெள்ளைக்கருவை பிரிக்கவும் :

முட்டையை உடைத்து, முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து வெள்ளை கருவை பிரிக்கவும். ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து வைக்கவும். முட்டையின் மஞ்சள் கருவை மற்றொரு பயன்பாட்டிற்காக வைத்து கொள்ளலாம் அல்லது தூக்கி வீசிவிடலாம்.

எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்க்கவும்:

  • உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்த உதவுகிறது.

  • உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் அல்லது அதிக ஈரப்பதம் தேவைப்பட்டால், முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்க்கவும். தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் உள்ளதால் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

  • இதனையடுத்து ஒரு கரண்டியை பயன்படுத்தி முட்டையுடன் சேர்க்கப்பட்ட பொருளை நன்றாக கலக்கவும்.



  • உங்கள் முகத்தை சுத்தம் செய்யுங்கள்:

    விளம்பரம்

    மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன், உங்கள் முகம் சுத்தமாகவும், மேக்கப் இல்லாமலும் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் முகத்தை மென்மையான க்ளென்சர் மூலம் கழுவி, ஒரு உலர் துண்டை பயன்படுத்தி முகத்தை துடைக்க வேண்டும்.

    மாஸ்க்கை பயன்படுத்துங்கள்:

    • சுத்தமான விரல்கள் அல்லது பிரஷ்-ஸை பயன்படுத்தி, உங்கள் முகத்தில் இந்த முட்டை மாஸ்க் பயன்படுத்துங்கள். இந்த மாஸ்க்கை கண் மற்றும் வாய் பகுதியில் தவிர்க்கவும். ஏன்னென்றால், மாஸ்க் இறுக்கமாகி அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இதை 15-20 நிமிடங்கள் வரை முகத்தில் பயன்படுத்தவும். மாஸ்க் முற்றிலும் உலர்ந்ததும், முகத்தை வெதுவெதுப்பான நீரில் மென்மையாக கழுவவும்.

    • மாஸ்க்கை கழுவிய பிறகு, உங்கள் முகத்தை உலர்ந்த துண்டை பயன்படுத்தி துடைத்து, உங்களுக்குப் பிடித்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள், இதனால் உங்கள் சருமம் ஹைட்ரேட்டாக இருக்கும்.

    • சிறந்த பலன்களுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தவும். உங்களுக்கு அலர்ஜி ஏற்படும் என்ற சந்தேகம் இருந்தால், உங்கள் முழு முகத்திலும் மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஓம வாட்டர் தரும் ஒப்பற்ற பயன்.. ஓம வாட்டரை தயாரிப்பது எப்படி?

குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை உதவக்கூடிய ஓம வாட்டரின் பயன்கள் என்னென்ன தெரியுமா? ஓம வாட்டரை எப்படி தயாரிக்க வேண்டும்?…

1 hour ago

ஜூலை 2024 க்கான முக்கிய நிகழ்வுகள்

ஜூலை 2024  க்கான அரசு விடுமுறை, விரத நாட்கள், பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளோம். அரசு விடுமுறை …

1 hour ago

இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சித்தார்த் கலகல பேச்சு.!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன் 2” படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக…

1 hour ago

தானங்களும் அவற்றின் பலன்களும்

தானம் செய்வதின் பலன்கள் உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின்…

5 hours ago

மகாபாரதக் கதைகள்/தற்பெருமையையும் அகந்தையையும்

கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில் இளமைப்பருவத்தில் தான் அங்கு விளையாடிய நினைவுகள்…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்

சுவாமி : விருத்தகிரீஸ்வரர் (அ)பழமலைநாதர், முதுகுந்தர். அம்பாள் : விருத்தாம்பிகை (அ) பாலாம்பிகை, இளைய நாயகி. தீர்த்தம் : மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி,…

5 hours ago